அசாமின் குவாஹாட்டியில் ஜி20 மாநாடு தொடக்கம்
- ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றது. இதன்படி ஓராண்டுக்கு நாடு முழுவதும் ஜி20 தொடர்பான மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. வரும் செப்டம்பரில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- இந்த சூழலில் அசாமின் குவாஹாட்டி நகரில் ஜி20 அமைப்பின் 2 நாள் மாநாட்டை மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால் தொடங்கி வைத்தார். இதில் ஜி20 அமைப்பை சேர்ந்த 95 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 100 பேர் பங்கேற்றுள்ளனர்.
- ஆஸ்திரேலிய வா்த்தக, முதலீட்டு ஆணையம், தோல் துறை திறன் கூட்டமைப்பு ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னை கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் வியாழக்கிழமை கையொப்பமானது.
- இதில் ஆஸ்திரேலிய வா்த்தகம், முதலீட்டு ஆணையம் (ஆஸ்ட்ரேட்) சாா்பில் அதன் வா்த்தக ஆணையா் லியோ பிரேமனிஸ், ஆஸ்திரேலிய சென்னை துணைத் தூதா் சாரா கிா்லேவ் ஆகியோரும், தோல் துறை திறன் கவுன்சில் சாா்பில் தலைமை நிா்வாக அதிகாரி ராஜேஷ் ரத்தினம், தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவா் சஞ்சய் லீகா ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
- அமிர்த காலத்தில் வழிநடத்தும் சப்தரிஷி என்னும் ஏழு முன்னுரிமைகளுடன், மத்திய நிதி அமைச்சர், திருமதி நிர்மலா சீதாராமன், 2023-2024 பட்ஜெட்டை சமர்ப்பித்தார்.
- 'பசுமை வளர்ச்சி' பிரிவில், சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, கோபர்தன் திட்டத்தின் கீழ், கழிவை செல்வமாக்கும் 500 புதிய ஆலைகள் நிறுவப்படவுள்ளன.
- இவற்றில் அழுத்தப்பட்ட உயிரி வாயு நிலையங்கள் 200 ஆகும். நகர்ப்புற பகுதிகளில் 75-ம், சமுதாய மற்றும் தொகுப்பு அடிப்படையிலான 300 ஆலைகளும் இதில் அடங்கும். இதற்கான மொத்த முதலீடு ரூ.10,000 கோடியாக இருக்கும்.
- பசுமை வளர்ச்சி’ திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், என்ஜீனியர்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
- 10 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும்.
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலர் திரு மனோஜ் ஜோஷி, என்ஜீனியர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திருமிகு வர்திகா சுக்லா முன்னிலையில், அமைச்சகத்தின் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் திருமிகு ரூபா மிஸ்ரா, இஐஎல் நிர்வாக இயக்குனர் திரு ஆர் கே ரதி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- ஜி20 இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ், முதலாவது வேலைவாய்ப்பு பணிக்குழுக்கூட்டம் 2023, பிப்ரவரி 2 முதல் 4ம் தேதி வரை ஜோத்பூரில் நடைபெறுகிறது.
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தலைமையில் நடைபெற்று வரும் விவாதத்தில் தொழிலாளர், வேலைவாய்ப்பு, சமூக விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
- உலகளாவிய திறன் மற்றும் தகுதிகளுக்கான உத்திகளை கண்டறிதல் மற்றும் பொதுவான திறன் வகைகளுக்கான கட்டமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் குழு விவாதம் இன்று நடைபெற்றது.
- உலகளாவிய திறன் இடைவெளிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தங்களது கருத்துக்களை உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர்.
- ஜி 20 நாடுகள், விருந்தினர் நாடுகள்,சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இதர சர்வதேச, தேசிய அளவிலான முக்கிய நிபுணர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.
- மத்திய மாநில அரசு முகமைகளின் அதிகாரிகள், தொழில்துறை, கல்வித்துறை பிரதிநிதிகள் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
- திறன் மற்றும் சான்றளிப்பதில் பரஸ்பர அங்கீகாரம் மற்றும் திறன் தொடர்பாக சர்வதேச உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து குழுவினர் வலியுறுத்தினார்கள்.