28th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரிட்டன் நாட்டில் திருமணம் செய்யும் வயது 18 ஆக உயர்ந்தது
- இந்தியாவையே ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரிட்டன் நாட்டில் திருமணத்திற்கான குறைந்த பட்ச வயது 18ஆக தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது.
- அங்கு இதற்கு முன் 16, 17 வயதுகளை ஒத்தவர்களுக்கு பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதாக புகார் நீண்ட காலம் எழுந்து வந்தது.
- இந்த சூழலில் இதுபோன்ற கட்டாய குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசுகள் திருமணத்திற்கான குறைந்த வயதை 18ஆக உயர்த்தி சட்டம் கொண்டு வந்துள்ளன. 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு எந்த சூழலில் திருமணம் செய்து வைத்தாலும் அது சட்டப்படி குற்றம்.
- எனவே, இனி இரு தரப்பு ஒன்று சேர்ந்து 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை முழு வீச்சில் பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாற்றமானது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் மட்டுமே நடைமுறையில் இருக்கும். பிரிட்டன் அரசின் அங்கங்களான ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்தில் இந்த வயது 16 ஆகவே தொடரும் எனத் தெரிகிறது.
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.2.2023) சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ்,
- ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம், திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் திட்டம், சென்னை மாநகரப் பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனப்படுத்தி, தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை தொழில்முனைவோர்களாக ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.1,136.32 கோடியில் 44 புதிய மருத்துவமனைக் கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், கருணை அடிப்படையிலும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- சென்னை தேசிய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில், மரபணு மேம்பாட்டு திட்டத்தை, மத்திய மீன் வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கிவைத்தார்.
- 'நம் நாட்டில் மீன்களுக்கு ஏற்படும் நோய் பற்றிய தகவல்களை தெரிவிக்க, 'ரிப்போர்ட் ஃபிஷ் டிசீஸ்' என்ற பெயரில் ஒரு செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நம் மீன்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளை மாவட்ட மீன் வள அதிகாரிகளுக்கு நேரடியாக தெரிவிக்க முடியும்.
- தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்வை எளிதாக்குதல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
- மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகளை திறன்பட அமல்படுத்துவது குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கோரும் வகையில் அரசால் நடத்தப்படும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகளில், 5-வது கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.