27th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஷிமோகா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர்
- கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ரூ.450 கோடியில் தாமரை வடிவத்தில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
- இதில் உள்ள பயணிகள் முனையக் கட்டிடம் ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகளைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 775 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு கன்னட தேசியக் கவிஞர் குவெம்புவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்ற விமான நிலைய திறப்பு விழாவில், பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
- இதையடுத்து பிரதமர் மோடி, ரூ.990 கோடியில் ஷிமோகா - ராணிபென்னூர் புதிய ரயில் வழித்தடத்துக்கும், ரூ.100 கோடியில் கோட்டேகன்குரு ரயில் பெட்டிபணிமனை மையத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.
- ஷிமோகாவில் ரூ.895 கோடி மதிப்பிலான 44 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களையும் தொடங்கி வைத்தார். பின்னர் பெலகாவிக்கு சென்ற மோடி, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.1,585 கோடியில் 315-க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- மதுரையில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்காக தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
- ரூ.1,264 கோடி மதிப்பில் சுமார் 200 ஏக்கரில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
- எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கடராமன் கடந்த ஆண்டு செப்டம்பரில் நியமனம் செய்யப்பட்டார். அவர் உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார்.
- இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
- நடந்துமுடிந்த கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஃபிஃபா அமைப்பு விருது அறிவித்துள்ளது.
- உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கைலியன் எம்பாப்வே ஆகியோர் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போட்டி போட்ட நிலையில் லயோனல் மெஸ்ஸி அந்த விருதை தட்டிச் சென்றார்.
- சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனை விருதுக்கான போட்டியில், இங்கிலாந்தின் பெத் மீட், அமெரிக்காவின் அலெக்ஸ் மோர்கன் மற்றும் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இறுதியில் அலெக்ஸியா புட்டெல்லாஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
- மொராக்கோவின் யாசின் பவுனோ, அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினெஸ், பெல்ஜியத்தின் திபாட் கோர்டோஸ் ஆகியோர் சிறந்த கோல்கீப்பர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றிருந்த நிலையில் எமிலியானோ மார்டினெஸுக்கு விருது வழங்கப்பட்டது.
- சிறந்த ஃபிஃபா மகளிர் வீராங்கனை: அலெக்ஸியா புட்டெல்லாஸ்
- சிறந்த ஃபிஃபா ஆண்கள் வீரர்: லியோனல் மெஸ்ஸி
- சிறந்த ஃபிஃபா மகளிர் பயிற்சியாளர்: சரினா வீக்மேன்
- சிறந்த ஃபிஃபா ஆண்கள் பயிற்சியாளர்: லியோனல் ஸ்கலோனி
- சிறந்த ஃபிஃபா மகளிர் கோல்கீப்பர்: மேரி ஏர்ப்ஸ்
- சிறந்த ஃபிஃபா ஆண்கள் கோல்கீப்பர்: எமிலியானோ மார்டினெஸ்
- தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன் இருந்து வருகிறார். இவர் இந்த பதவியில், கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இருந்து வருகிறார்.
- இந்த நிலையில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவராக இரண்டாவது முறையாக வெங்கடசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி இடையே கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (27.02.2023) சென்னையின் உத்தண்டியில் கையெழுத்தானது.
- இதன் முக்கியநோக்கமானது, இந்திய கடல்சார் கொள்கை/பார்வை, 2030 சார்ந்த முன்னெடுப்புகளில் பங்கெடுப்பது, பேராசிரியர்கள்-மாணவர்கள் ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் இணைந்து செயல்படுவது, ஒருங்கினைந்த பிஎச்டி படிப்புகளில் செயல்பாடுகள், இணையவழி எம்டெக் படிப்புகள், கருத்தரங்குகள், கல்விசார் கூட்டங்களை ஒருங்கினைத்தல், குறுகிய, நீண்டகால படிப்புகள் அறிமுகம், கல்விசார் அங்கத்துக்கான படிப்புகள், தேவையான கட்டமைப்புகளை உருவாக்குதல் போன்றவையாகும்.