தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவ செயலி - செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வெளியீடு
- தொல்காப்பியம் தமிழில் மிகப் பழமையான நூலாகும். அதில் காணப்படும் சில வழக்காறுகள், இலக்கணக் கூறுகள், வாழ்க்கை மரபுகள் ஆகியவை சங்க இலக்கிய நூல்களுக்கும் முற்பட்டவை.
- இதனால் அது 'தமிழ் முதல் நூல்' என்று போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை 2021-ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டது.
- இசையுடன் ஒலிக்கும்: அதைத் தொடர்ந்து, தொல்காப்பியம் சார்ந்த செல்போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் செம்மொழி நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக சிஐசிடி தொல்காப்பியம் எழுத்து (PHONOLOGY & MORPHOLOGY MOBILE APPLICATION) என்ற
- பெயரில், எழுத்து அதிகாரத்துக்கான துக்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் செம்மொழி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த செயலியில் தொல்காப்பியப் பாடல்கள் இசையுடன் (முற்றோதல்) ஒலிக்கும்.
- பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரத்தின் தொல்காப்பியம் எழுத்து ஆராய்ச்சிக் காண்டிகை உரையும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் உரையை கேட்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
- 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றன.
- இந்த போட்டியின் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
- முதலாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவையும், இரண்டாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
- கேப்டவுன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.
- 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 156 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி கடைசி ஓவரில் இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- பல்கேரியாவின் சோபியா நகரில், 74வது 'ஸ்ட்ராண்ட்ஜா' நினைவு சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடந்தது.
- பெண்களுக்கான 50 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அனாமிகா, சீனாவின் ஹு மெய்யி மோதினர். இதில் ஏமாற்றிய அனாமிகா 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
- மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் அனுபமா (81 கிலோ), கோவிந்த் குமார் சஹானி (48 கிலோ) வெள்ளி வென்றனர்.
- பெண்களுக்கான 48 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கலைவாணி, உஸ்பெகிஸ்தானின் ரக்மோனோவா சைடகோன் மோதினர். இதில் ஏமாற்றிய கலைவாணி 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
- மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஷ்ருதி யாதவ் (70 கிலோ), மோனிகா (+81 கிலோ) தோல்வியடைந்தனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 3 வெற்றி, 5 வெண்கலம் என, மொத்தம் 8 பதக்கம் கிடைத்தன.