25th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்
- மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை இந்தாண்டு ஜன., 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களின் உற்பத்தி திறன் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- அதில், தமிழகம், 9,964 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி திறனுடன் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, 9,918 மெகா வாட் திறனுடன், குஜராத் இரண்டாவது இடத்திலும்; 5,269 மெகா வாட் உற்பத்தி திறனுடன், கர்நாடகா மூன்றாவது இடத்திலும்; 5,012 மெகா வாட்டுடன் மஹாராஷ்டிரா நான்காவது இடத்திலும், ராஜஸ்தான், 4,681 மெகா வாட்டுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
- சூரியசக்திபெரிய நிறுவனங்கள் தங்கள் காலி நிலத்தில், ஒரு மெகா வாட்டிற்கு மேலான, சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு விற்கின்றன.
- வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களில் குறைந்த திறனில் மேற்கூரை மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் குறைந்த திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைத்துள்ளனர்.
- இந்தாண்டு ஜனவரி மாத நிலவரப்படி, தமிழகத்தில், 6,123 மெகா வாட் திறனில் நிலத்திலும், கட்டடங்களின் மேல், 373.73 மெகா வாட் திறனிலும், சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- நாட்டில் சூரியசக்தி மின் உற்பத்தித் திறனில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. பட்டியலில், 16 ஆயிரத்து, 353 மெகா வாட் திறனுடன் ராஜஸ்தான் முதலிடத்திலும்; 8,747 மெகா வாட்டுடன் குஜராத், இரண்டாவது இடத்திலும்; 8,018 மெகா வாட் திறனுடன், கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- இந்தியா, இலங்கை இடையேயான 7வது வருடாந்திர பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 24ம் தேதி டெல்லியில் தொடங்கியது.
- 2 நாள் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு துறை செயலாளர் கிரிதர் அரமானே, இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னே ஆகியோர் தலைமை வகித்தனர்.
- இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- கூட்டுப் பயிற்சியின் போது இருநாடுகளும் தங்களது அனுபவங்களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் இருதரப்பு ராணுவப் பயிற்சிகளின் தீவிரத்தை அதிகரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
- இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 2 நாள் பயணமாக டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பின்னர், ஜனாதிபதி மாளிகைக்கு வந்த ஸ்கால்சுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார்.
- இந்த சந்திப்பில், வர்த்தகம் மற்றும் முதலீடு, புதிய தொழில்நுட்பங்கள், சுத்தமான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் செலுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சுடனான சந்திப்பின் போது அவருக்கு பிரதமர் மோடி, மேகாலயா மாநிலத்தின் ஸ்டோல்ஸ் (கழுத்தை சுற்றி அணியும் துண்டு) மற்றும் நாகலாந்தின் சால்வையை பரிசாக வழங்கினார். இவ்விரு மாநிலங்களிலும் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகமான விசாகபட்டணத்தில் பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில், வருடாந்திர மறுசீரமைப்பு மாநாடு 23 மற்றும் வருடாந்திர உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு 23 நடத்தப்பட்டது.
- மாநாடு வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி தலைமையில் நடைபெற்றது. மறுசீரமைப்புத் திட்டங்கள், இந்திய கடற்படையின் கப்பல்கள்/நீர்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாடுகள், இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவை மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டன.
- ஏஐஐசி கூட்டத்தில், பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கடல் உள்கட்டமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. இந்திய கடற்படையில் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பு திட்டங்களின் வேகம் குறித்து திருப்தி தெரிவிக்கப்பட்டது.
- மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ள எதிர்கால தளங்களுக்கு கூடுதல் இடத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கடல் உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த சந்திப்பின் போது ஆய்வு செய்யப்பட்டன.
- மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு இணங்க, இந்த மாநாட்டின் போது உள்நாட்டுமயமாக்கல் குறித்த பிரத்யேக அமர்வும் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் இந்திய கடற்படையின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- இளைஞர் சக்தியைப் பயன்படுத்துதல் - திறன் மேம்பாடு மற்றும் கல்வி' என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய வழி கலந்துரையாடல் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.