24th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்
- இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
- அப்போது பிரதமர் பேசுகையில், இன்று உலகளவில் எதிர்கொள்ளப்படும் சவால்களை சுட்டிக் காட்டிய அவர், 'மோசமான பொருளாதார சூழல்களை உலகம் சந்தித்து வரும் வேளையில், உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார தலைமைத்துவத்தின் பிரதிநிதியாக கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
- கொரோனா பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் தாக்கங்கள், அதிகரித்து வரும் புவி- அரசியல் நிகழ்வுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இடையூறுகள், விலையேற்றம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள, உலகின் முன்னணி பொருளாதாரங்கள் மற்றும் நிதி அமைப்புமுறைகளின் பாதுகாவலர்களை சார்ந்துள்ளது.
- நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து இந்திய நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. உலக அளவில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக கூடிய மக்கள் குறித்து விவாதங்களில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தவும்.
- அம்மக்களை உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்குவதன் வாயிலாக மட்டுமே, உலகின் நம்பிக்கையையும் சர்வதேச பொருளாதார தலைமைத்துவத்தையும் மீண்டும் கொண்டு வர இயலும்.
- 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற தொலைநோக்குப் பார்வையை இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருள் ஊக்குவிக்கிறது.
- உலக மக்கள் தொகை 8 பில்லியனைக் கடந்துள்ள போதும், நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம், தொய்வடைகிறது' என்றார்.
- தொடர்ந்து இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்புமுறை பற்றி பேசிய அவர், 'யு.பி.ஐ என்ற இந்தியாவின் தலைசிறந்த டிஜிட்டல் கட்டணத் தளத்தை ஜி20 விருந்தினர்கள் பயன்படுத்த இது வழிவகை செய்கிறது.
- யு.பி.ஐ போன்ற உதாரணங்கள் ஏராளமான இதர நாடுகளுக்கும் முன்மாதிரியாக செயல்படலாம். எங்களது அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, இதன் உந்துசக்தியாக ஜி20 செயல்படக்கூடும்' என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
- ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் (பிப். 24) ஓராண்டு நிறைவடைகிறது. இப்போர் இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவின் அண்டை நாடுகள் ரஷ்யா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியது.
- அமெரிக்கா, பிரிட்டன் அடங்கிய நேட்டோ படையில் சேர உக்ரைன் விரும்பியது. இது தனது பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் என ரஷ்யா கருதியது.
- உடனே உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்தது. அப்போது உக்ரைனிலிருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
- 193 உறுப்பினர்கள் நாடுகள் பங்கேற்றன.இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் ஓட்டளித்தனர். எதிராக 7 நாடுகள் ஓட்டளித்தனர். இந்தியா, சீனா உள்பட 32 நாடுகள் தீர்மானத்தின் மீது நடந்த ஒட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. பெரும்பான்மை ஆதரவு இருந்ததால், தீர்மானம் நிறைவேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி பாரத்மாலா பரியோஜானா - நாட்டின் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான விரிவான ஒரு செயல் திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.1292.65 கோடி மதிப்பீட்டில் சந்திரசேகரபுரத்திலிருந்து போலாவரம் வரையிலான பெங்களூரு-விஜயவாடா பொருளாதார 32 கி.மீ தொலைவிற்கான ஆறு வழி பசுமை சாலைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
- கோடிகொண்டா சோதனைச் சாவடி முதல் முப்பாவரம் வரையிலான 342.5 கி.மீ தொலைவிற்கு பசுமை வழிச் சாலையாக மாற்றம் பெறுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் 14 தொகுப்புகளாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
- உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2019-20-ஆம் நிதியாண்டில் 730.87 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, 2021-22-ஆம் ஆண்டில் 778.19 மில்லியன் டன்னாக அதிகரித்தது.
- இந்த நிதியாண்டிலும் நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 2022 – ஜனவரி 2023 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 698.25 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.
- இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 16% அதிகமாகும். 2021-22ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 601.97 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.
- இந்த காலகட்டத்தில் கோல் இந்தியா நிறுவனத்தின் சொந்த உற்பத்தி 478.12 மில்லியன் டன்னிலிருந்து 550.93 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
- இது 15.23% அதிகமாகும். கூடுதல் மின் நுகர்வால் ஏற்படும் நிலக்கரித் தேவையை சமாளிக்க இந்த உற்பத்தி உயர்வு உதவிகரமாக அமைந்துள்ளது.
- 2025-ஆம் நிதியாண்டில் 1.31 பில்லியன் டன்னாகவும், 2030-ஆம் நிதியாண்டின் 1.5 பில்லியன் டன்னாகவும் நிலக்கரி உற்பத்தியை உயர்த்த நிலக்கரி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
- நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி அமைச்சகம் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.