23rd FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக லட்சுமி நாராயணன் நியமனம்
- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, சமீபத்தில் ஆறு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி நாராயணனும், கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- இவர், 1970 அக்டோபரில் பிறந்தார். இவரது தந்தை ஆர்.எஸ்.வெங்கடாச்சாரி. பள்ளி படிப்பை, எம்.சி.டி.முத்தையா செட்டியார் மேல்நிலை பள்ளியிலும், சட்டப் படிப்பை பெங்களூரில் தேசிய சட்டப் பள்ளியிலும் முடித்தார். வழக்கறிஞராக, 1995ல் பதிவு செய்தார்.
- உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை அறிவித்தாா்.
- அஜய் பங்காவின் நியமனத்தை உலக வங்கியின் இயக்குநா்கள் உறுதி செய்யும்பட்சத்தில், உலக வங்கிக்குத் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி, சீக்கியா் என்ற பெருமையை அஜய் பாங்கா பெறுவாா். 63 வயதாகும் அஜய் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிதி நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளாா்.
- கொத்தடிமை தொழிலாளர் முறையை முழுவதுமாக அகற்றவும், தமிழ்நாட்டை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ம் தேதி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- கொத்தடிமை தினத்தையொட்டி, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் மற்றும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் ஆகிய புத்தகங்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் இறையன்பு, தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இதில் l நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 16-6 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஸ்கிமியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
- மத்தியபிரதேசத்தை சேர்ந்த 22 வயதான ஐஸ்வரி பிரதாப் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த உலக கோப்பை தொடரில், இந்தியா வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்த தொடரில் இந்தியா 4 தங்கப்பதக்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
- இரட்டை பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நர்மதா-ருத்ராங்ஷ் ஏர் ரைபிள் பிரிவில் தங்கமும், ரிதம்-வருண் தோமர் இணை ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கமும் வென்று அசத்தினர்.
- தொடர்ந்து, ஆடவர் தனிநபர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றார்.
- 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் வருண் தோமர் வெண்கலம் வென்றார். 10 மீட்டர் மகளிர் ஏர் ரைபிள் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை திலோத்தமா சென் வெண்கலப்பதக்கம் வென்றார்.
- பசுமை வளர்ச்சிக் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
- மத்திய பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கு கருத்துக்களைக் கோரும் வகையில், பட்ஜெட்டுக்குப் பிந்தைய 12 இணையக் கருத்தரங்குகளின் முதலாவது பகுதி இதுவாகும்.
- மத்திய மின்துறை அமைச்சகத்தின் தலைமையில் நடைபெறும் இணையக் கருத்தரங்கில், பசுமை வளர்ச்சியின் ஆற்றல் மற்றும் ஆற்றல் அல்லாத அம்சங்கள் இரண்டையும் உள்ளடக்கிய ஆறு அமர்வுகள் இருக்கும்.
- தொடர்புடைய மத்திய அரசு அமைச்சகங்களின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மாநில அரசுகள், தொழில்துறை, கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், இந்த இணையக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகளை வழங்குவார்கள்
- பசுமை வளர்ச்சி என்பது 2023-24 மத்திய பட்ஜெட்டில் பசுமை தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண்மை மற்றும் நிலையான ஆற்றல் ஆகியவற்றை நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஏழு முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
- ஜி-20 நாடுகளின் கலாசாரப் பணிக்குழுக் கூட்டத்தின் முதலாவது அமர்வு மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் உள்ள மகாராஜா சத்ரசால் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
- இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு வீரேந்திர குமார், நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வழிகளை உருவாக்கி நாடுகளுக்கிடையே பிணைப்பை வலுப்படுத்துவதில் கலாச்சாரம் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.
- இன்றைய அமர்வில் கலாச்சாரத்துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகனும் பங்கேற்று உரையாற்றினார். பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கிய கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டம், 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இதில் ஜி-20 உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
- இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவு, திறன் வளர்ச்சியை மேம்படுத்த சிஎஸ்சி அகாடமி-தேசிய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்த, முன்னெடுப்புகளை கூட்டாக அமல்படுத்த இரு அமைப்புகளுக்கிடையே நீண்டகால கூட்டாண்மையை ஏற்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- இந்த ஒப்பந்தத்தின் கீழ் திறன்மேம்பாடு, அங்கிகாரமையம், மெய்நிகர் அகாடமி, பயிற்சியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம், டிஜிட்டல் மற்றும் நிதி உள்ளடக்கம் தொழில்முனைவோர் மேம்பாடு, உள்ளடக்கம் மற்றும் சான்றிதழ்கள், பரஸ்பர கூட்டாளிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான வழிமுறைகள் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கவும், வடிவமைக்கவும் வகைசெய்யப்பட்டுள்ளது.