21st FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நேட் ஜியோ புகைப்பட போட்டி விருது வென்றார் இந்திய வம்சாவளி
- அமெரிக்காவை சேர்ந்த, 'நேஷனல் ஜியாகரபிக்' நிறுவனம், புவியியல், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் தொடர்பான பத்திரிகை மற்றும், 'டிவி' ஆகியவற்றை நடத்தி வருகிறது.
- இந்த பத்திரிகை சார்பில், ஆண்டுதோறும் புகைப்படப் போட்டி நடத்தப்படுகிறது. இயற்கை, மக்கள், இடங்கள், விலங்குகள் என, பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகின்றன.
- இதில், 'டான்ஸ் ஆப் தி ஈகிள்ஸ்' என்ற தலைப்பில் புகைப்படங்கள் சமர்ப்பித்த இந்திய வம்சாவளி மென்பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் விருது வென்றுள்ளார். மொத்தம் சமர்ப்பிக்கப்பட்ட 5,000 விண்ணப்பங்களில், கார்த்திக்கின் புகைப்படம், ஆண்டின் சிறந்த புகைப்படமாக தேர்வாகி உள்ளது.
- அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள சில்கட் கழுகுகள் சரணாலயத்தில் அவர் எடுத்த புகைப்படம் விருதை பெற்று தந்துள்ளது. 'நேஷனல் ஜியாகரபிக்' மே மாத இதழில், கார்த்திக் சுப்ரமணியத்தின் புகைப்படங்கள் வெளியாக உள்ளது
- எகிப்தில் நடக்கும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீரர் ருத்ராங்க்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
- இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் மேக்சிமிலியன் உல்பிரிச்சுடன் நேற்று மோதிய ருத்ராங்க்ஷ் 16-8 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று முதலிடம் பிடித்தார்.
- இதே பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர்கள் திவ்யான்ஷ் சிங் பன்வார், ஹ்ரிதய் ஹசாரிகா தகுதிச் சுற்றுடன் வெளியேறினர்.
- இந்தியாவின் யூபிஐ-சிங்கப்பூரின் பேநவ் நிகழ்நேர பணப்பரிமாற்ற இணைப்பின் காணொலிக்காட்சி வாயிலான தொடக்கநிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியன் லூங் ஆகியோர் பங்கேற்றனர்.
- இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ், சிங்கப்பூர் நிதி ஆணைய மேலாண்மை இயக்குநர் திரு. ரவி மேனன் ஆகியோர் தங்களது மொபைல் போன்கள் மூலம் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
- எல்லை தாண்டிய பகுதியில் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கான பணப்பரிவர்த்தனை வசதியை தொடங்கிய முதல் நாடு சிங்கப்பூர் ஆகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் / மாணவர்கள் உட்பட சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவழியினருக்கு இவ்வசதி உதவும்.
- டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஃபின்டெக் பயன்களை சாதாரண மனிதர்களுக்கும் குறைந்த செலவில் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கும் பணத்தை பரிமாற்றம் செய்வதன் மூலம் கொண்டுவரமுடியும். க்யூஆர் கோட் மூலம் யூபிஐ பணப்பரிமாற்றத்தை ஏற்றுக்கொள்வது சிங்கப்பூரில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களில் உள்ளன.
- இரண்டு நாட்டு பிரதமர்களுக்கிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் மூலம் காணொலிக்காட்சி தொடங்கியது. பரஸ்பரம் நலன்சார்ந்த பகுதிகள் குறித்தும் விவாதித்தனர்.
- இந்திய உணவுக்கழகம் மூலம் உள்நாட்டு வெளி்ச்சந்தை விற்பனை முறையின் கீழ் 20 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை கூடுதலாக விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- முந்தைய ஆண்டுகளைப் போல கோதுமை மற்றும் உற்பத்திப் பொருட்களை மாவு மில்கள் தனியார் வர்த்தகர்கள், உற்பத்தியாளர்களுக்கு மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- கையிருப்பு விலையில் குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் 20 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விடுவிப்பதன் மூலம் கோதுமை மற்றும் கோதுமை பொருட்களின் சந்தை விலை குறைந்து நுகர்வோர் பயனடைய வாய்ப்பு ஏற்படும்.
- உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலர், இந்திய உணவுக்கழகம் மற்றும் மாவு மில் சங்கத்தினரின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினர்.
- பணவீக்கத்தை குறைக்கவும், வெளிச்சந்தையில் விலையை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 10-ந் தேதி கோதுமை விலை கிலோவுக்கு ரூ. 23.50-லிருந்து, ரூ. 21.50 ஆக குறைக்கப்பட்டது.
- கோதுமை, ஆட்டா, ரவை ஆகியவற்றின் விலைகளை குறைக்க இதன் மூலம் வகைசெய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பு விலை குறைப்பு நடவடிக்கை 31.03.2023 வரை நடைமுறையில் இருக்கும்.