Type Here to Get Search Results !

பொருளாதார ஆய்வறிக்கை 2023 - 2024 / ECONOMIC SURVEY REPORT BY FINANCE MINISTRY OF INDIA

  • பொருளாதார ஆய்வறிக்கை 2023 - 2024 / ECONOMIC SURVEY REPORT BY FINANCE MINISTRY OF INDIA: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். 
  • அதற்கு முன்னதாக, நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் தாக்கல் செய்தார். 
விபரம்
  • கொரோனா பெருந்தொற்று பரவல், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் முழுதும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு அமெரிக்க சந்தைகளின் மூலதனத்தை அதிகரித்தது.
  • இதன் காரணமாக, பெரும்பாலான நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது. இது நம் நாட்டின் சி.ஏ.டி., எனப்படும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரித்ததுடன், பணவீக்க அழுத்தங்களையும் அதிகரித்தது.
  • கொரோனா பெருந்தொற்று பரவல் குறைய துவங்கிய பின், ஏப்., 2021 - மார்ச் 2022 காலகட்டத்தில் நம் பொருளாதாரம் முன்னேறியது. 
  • உலக அளவில் ஒட்டுமொத்தமாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, முன்னெப்போதும் இல்லாத பணவீக்கம், நிலையற்ற சந்தைகள் போன்ற சிக்கல்களுக்கு மத்தியிலும், நம் நாட்டின் மூலதனச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பாகவே இருந்தன.
  • கடந்த 2022ம் நிதியாண்டு உடன் ஒப்பிடும்போது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. 
  • இதன் விளைவாக திரட்டப்பட்ட மொத்த நிதி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட நிதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.
  • மேலும், 2023 - 24ம் நிதியாண்டில் பணவீக்க விகிதம் 6.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நிதிக் கொள்கையில் பின்பற்றப்படும் இறுக்கம் காரணமாக, ரூபாய் மீதான அழுத்தம் தொடர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
  • உலகப் பொருளாதார பலவீனம் காரணமாக ஏற்றுமதி எளிதாகி, உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து இறக்குமதிகள் அதிகரிக்கும் என்பதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும்.
  • வலுவான நுகர்வு காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், தனியார் முதலீடு களை அதிகரித்தால் மட்டுமே வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
  • கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டான 2023 - 24ல் 6 - 6.8 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகம், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள், சொத்து வரியை திருத்தி அமைத்தன. இதன் வாயிலாக மாநிலத்துக்கான வருவாய் உயர்ந்துள்ளது.
  • தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா, அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுகள், மின்சார கட்டணத்தை உயர்த்தின. இதன் வாயிலாக கூடுதல் வருவாய் ஆதாரம் கிடைத்து உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலங்களின் செலவீனம் அதிகரித்தது. இதனால் வருவாய் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன.
  • மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சில நிதியுதவிகளை செய்தாலும், இந்த மாநிலங்கள் தங்களுடைய வருவாய் ஆதாரங்களை உயர்த்தி கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களின் மதுபான கொள்கையை திருத்தின. லைசென்ஸ் கட்டணம், புதுப்பித்தல் கட்டணம், பரிசீலனை கட்டணம், பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டன. இதன் வாயிலாக கணிசமான வருவாய் மாநில அரசுக்கு கிடைத்தது.
  • இதைத் தவிர பல மாநிலங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கின. மேலும் சொத்துக்களை பணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதுவும் வருவாய் ஆதாரம் பெருகுவதற்கு மாநிலங்களுக்கு உதவின.
ENGLISH
  • Union Finance Minister Nirmala Sitharaman is scheduled to present the last complete budget of the second five-year regime led by Prime Minister Narendra Modi in Parli today. 
  • Prior to that, Minister Nirmala Sitharaman presented the economic report prepared by the country's Chief Economic Adviser V. Ananda Nageswaran in Parli yesterday. 
Details
  • Due to the spread of Corona epidemic, Russia-Ukraine war, the entire world is facing economic damage. The Fed's interest rate hike boosted US markets capitalization.
  • Due to this, the value of the US dollar rose against the currencies of most countries. This has increased our country's current account deficit, known as CAD, and increased inflationary pressures. 
  • After the spread of the Corona epidemic began to decrease, our economy progressed from April 2021 to March 2022. Despite the global economic uncertainty, unprecedented inflation, volatile markets, our country's capital markets have been performing well. 
  • Compared to the previous financial year 2022, the number of small and medium enterprises has almost doubled. As a result, the total funds raised are almost three times higher than the funds raised last year on the same basis.
  • Furthermore, the inflation rate for the 2023-24m financial year is estimated to be 6.8 percent. Due to the tightening of fiscal policy, the pressure on the rupee is expected to continue.
  • The current account deficit is likely to widen as exports and domestic economic growth due to global weakness and imports increase. A strong economy has led to improvement in employment conditions in the country. 
  • At the same time, employment opportunities can only be increased if private investments increase. In the last financial year 2022-23, the economic growth of the country was 7 percent. This was 8.7 percent in the last financial year. It is predicted to decrease to 6-6.8 percent in the current financial year 2023-24. 
  • At the end of the 10 years known as this decade, our economic growth is estimated to be 5.5 percent. In the coming fiscal year 2010-2012, inflation will generally be under control.
  • We expect that there will not be any major impacts. It is predicted that the country's economic growth will be 6.5 percent in the financial year starting next April. While the world is facing problems including economic recession, 
  • India will be the country with the largest economic growth. As long as the price of crude oil is below 100 USD per barrel, it will not be affected to a large extent by the price increase in the coming financial year. 
  • The quality of public expenditure has increased. The data regarding the budget deficit is very revealing. Credit has seen a remarkable growth in all sectors. In particular, lending to the MSMI, small, micro and medium industries has increased by 10 percent since January last year.
  • States like Tamil Nadu, Telangana and Kerala have adjusted the property tax. Governments of Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Karnataka, Madhya Pradesh, Haryana, Kerala, Assam and Union Territory of Puducherry have increased the electricity tariff. 
  • There is an additional source of revenue through this. Due to the spread of the Corona virus, the expenditure of the states has increased. This also affected the sources of revenue.
  • Although the central government provides some financial support to the state governments, these states have taken steps to increase their revenue sources, the study notes. License fee, renewal fee, examination fee, registration fee have been increased. 
  • This resulted in meager revenue for the state government. Apart from this, many states privatized public sector enterprises controlled by the state government. And attempts were made to liquidate the assets. This has helped the states to increase their source of revenue.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel