1st FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
TNPSCSHOUTERSFebruary 02, 2023
0
ஜனவரி மாதம் 2023 - ஜிஎஸ்டி வசூல்
31.01.2023 அன்று மாலை 5 மணி வரை மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,55,922 கோடியாகும். இதில் ஜிஎஸ்டி ரூ.28,963 கோடியையும், எஸ்ஜிஎஸ்டி ரூ.36,730 கோடியையும், ஐஜிஎஸ்டி ரூ.79,599 கோடியையும் (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.37,118 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,630 கோடியையும் (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ.768 கோடி உட்பட) வருவாயாகப் பெற்றுள்ளது.
இதிலிருந்து 38,507 கோடி ரூபாயை CGSTக்கும், 32,624 கோடி ரூபாயை SGST மற்றும் IGSTக்கு வழக்கமான தீர்வையாக செலுத்தியுள்ளது. வழக்கமான தீர்வைக்குப் பிறகு ஜனவரி 2023ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் CGSTக்கு ரூ.67,470 கோடியும், SGSTக்கு ரூ.69,354 கோடியும் ஆகும்.
நடப்பு நிதியாண்டில் ஜனவரி 2023 வரையிலான வருவாய் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருவாயைவிட 24% அதிகமாகும்.
சரக்குகளின் இறக்குமதியிலிருந்து இந்த காலகட்டத்திற்கான வருவாய் 29% அதிகம் மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனை (சேவைகளின் இறக்குமதி உட்பட) மூலம் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த ஆதாரங்களில் இருந்து வருவாயைவிட 22% அதிகமாகும்.
அதுபோல், நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும். டிசம்பர் 2022ல், 8.3 கோடி ரூபாய்க்கான இ-வே ரசீதுகள் தாக்கல் செய்யப்பட்டன.
3வது டி20 போட்டியில் அபார வெற்றி - தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதனை அடுத்து, அந்த அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டி-20 போட்டி, அகமதாபாத்தில் நடைபற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 234 ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில், 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை அவர் படைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 66 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.