17th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் - கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது.
- இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
- 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மொத்தம் 252 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை படைத்தார்.
- அனில் கும்ப்ளே 55 போட்டிகளில் 250 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனையை படைத்தார். ஹர்பஜன் சிங் 61 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார்.
- இதற்கு அடுத்ததாக கபில்தேவ் 65 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது ஜடேஜா 61 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதன் மூலம் கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார்.
- மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 250 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 5 வது இடத்தை பிடித்துள்ளார்.
- அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். உலக கிரிக்கெட் அரங்கில் 2வது வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார்.
- திருச்சி மாவட்டம் முசிறியில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
- அப்போது காவல் நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு, மற்றும் வரப்பெற்ற புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல், மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை, காவல் நிலையத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழுக்கு பரிந்துரை செய்திருந்தது .
- அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த முதல் காவல் நிலையமாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்தது.