16th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
யூடியூப் சிஇஓ-ஆக இந்திய வம்சாவளி நியமனம்
- யூடியூப்-இன் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சோந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
- இதன் தலைமை செயல் அதிகாரியாக 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த சூசன் (54) உடல்நலக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
- நகர்புற வீட்டு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டிற்கு உலக வங்கியின் நிதி உதவியை கோரி தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சார்பில் முன்மொழிவு சமர்பிக்கப்பட்டது.
- இந்த திட்டதின் மொத்த செலவான ரூ.4647.5 கோடியில் ரூ.3347.5 கோடி உலக வங்கியிடம் கடனாக கோரப்பட்டது. இந்த திட்டத்தை 2 கட்டங்களாக செயல்படுத்த உலக வங்கி ஒப்புதல் அளித்தது.
- புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு சர்வதேச வங்கியிலிருந்து 50 மில்லியன் டாலர் முதலீட்டு நிதியாகவும், 450 மில்லியன் டாலர் வளர்ச்சி கடனாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 200 மில்லியன் டாலர் விடுவிக்கப்பட்டது.
- 2021-22ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது 2ம் கட்ட வீட்டுவசதி வலுப்படுத்தும் திட்டம் உலக வங்கி நிதி பங்களிப்புடன் செயல்படுத்தபடும் என அறிவிக்கப்பட்டது.
- இந்த 2ம் கட்ட திட்டத்திற்கு உலக வங்கியிடம் 190 டாலர் வளர்ச்சி கொள்கை கடனாக பெற ஒன்றிய அரசு, உலக வங்கி மற்றும் தமிழக அரசு இடையே ஒப்பந்தம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கையெழுத்தானது.
- பிரம்மகுமாரிகளின் நீர்-மக்கள் இயக்கத் தொடக்கவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
- மழை சேகரிப்பு இயக்கம் குறித்து பேசிய பிரதமர், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதும், நாட்டிற்கான மிகப்பெரிய சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.
- நிலத்தடி நீர் திட்டத்தின்மூலம் நாட்டில் ஆயிரக்கணக்கான கிராம பஞ்சாயத்துக்களில் நீர்ப்பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
- நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் கட்டப்படுவது நீர்ப்பாதுகாப்புக்கான மிகப்பெரிய நடவடிக்கை என்று பிரதமர் தெரிவித்தார்.
- ஆதி மகோத்சவம் என்ற பிரம்மாண்டமான தேசிய பழங்குடி திருவிழாவை தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை தேசிய அளவில் எடுத்துரைக்கும் இந்த முயற்சி, பழங்குடி கலாச்சாரம், கலைப் பொருட்கள், உணவு, வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலைகளின் உணர்வைப் போற்றுகிறது. இது, மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பால் (ட்ரைஃபெட்) ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும்.
- திருவிழாவிற்கு வருகை தந்த பிரதமர், பகவான் பிர்சா முண்டாவிற்கு மலர் மரியாதை செலுத்தியதோடு, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த விற்பனையகங்களைப் பார்வையிட்டார்.
- புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கத்தில் பிப்ரவரி 16 முதல் 27ம் தேதிவரை இந்த திருவிழா நடைபெறுகிறது.
- இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ள 200 நிலையங்களில், நாடு முழுவதிலும் உள்ள பழங்குடியினரின் வளமையான மற்றும் பண்முகத்தன்மையை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்த திருவிழாவில் சுமார் 1,000 பழங்குடியின கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த 2023 ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கைவினைப்பொருட்கள், கைத்தறி, மண்பாண்டங்கள், நகைகள் போன்றவற்றோடு பழங்குடியினரால் வளர்க்கப்பட்ட ஸ்ரீ அண்ணா பயிர்வகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
- அணைகளின் புதுப்பித்தல் மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் (ட்ரிப்) இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களின் கீழ் அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தின் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் மத்திய நீர் ஆணையம் கையெழுத்திட்டுள்ளது.
- ரூர்கீயில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் போன்ற சிறப்பு தொழில்நுட்ப ஆதரவு அளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
- அணைகளின் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் வாயிலாக தீர்வு வழங்குவதற்கு இந்த மையம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
- மேலும் உள்ளூர், பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் அணையின் பாதுகாப்பு மேலாண்மை குறித்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற நடவடிக்கைகளில் இந்த மையம் ஈடுபடும்.
- இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் நிதி உதவியோடு ரூ. 109 கோடி செலவில் இந்த மையம் நிறுவப்படுகிறது.
- அணையின் பாதுகாப்பு மற்றும் புதுப்பிப்பு, நீர் தேக்க வண்டல் மற்றும் நில அதிர்வு அபாய மேப்பிங் மற்றும் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் பெறப்பட்ட அணைகளின் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்கள் மற்றும் திறன்கள் மூலம் வருமானத்தை உருவாக்கி 10 ஆண்டுகளுக்குள் தன்னிறைவு நிலையை அடைய ரூர்கீ இந்திய தொழில்நுட்பக் கழகம் முயற்சிக்கும்.
- புதுதில்லி காவல்படையின் 76வது நிறுவன தினத்தையொட்டி இன்று (16.02.2023) நடைபெற்ற கொண்டாட்டங்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமையேற்றார்.
- இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர், பாஸ்போர்ட் சரிபார்த்தல் தொடர்பாக அனைத்து நடவடிக்கைளும் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் சேவைகளையும், புதுதில்லியில் நடமாடும் தடயவியல் வாகனங்களையும் தொடங்கி வைத்தார்.
- மேலும் மத்திய உள்துறை அமைச்சர் தேசிய தடயவியல் அறிவியல் வளாகத்தை திறந்து வைத்தார்.