Type Here to Get Search Results !

13th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


13th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நிஸ்ஸான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனம், ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஸ்ஸான் ஆகிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.
  • தற்போது ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது முழு உற்பத்தித் திறனான 4.80 இலட்சம் கார்கள் உற்பத்தியில், 2 இலட்சம் கார்கள் அளவிற்குதான் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.
  • RNAIPL மற்றும் RNTBCI நிறுவனங்கள், வாகன உற்பத்தி தளங்களை நவீன மயமாக்குவதற்கும், புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளன. 
  • தற்போதைய செயல்பாடுகளை விரிவுபடுத்துவது, அதாவது, உற்பத்தித் திறன் பயன்பாட்டை 2 இலட்சம் கார்களிலிருந்து 4 இலட்சம் கார்களாக விரிவுபடுத்துவது மற்றும் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகிய நோக்கங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. 
  • இதற்கான அரசாணையும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டமாக, 3,300 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு அரசிற்கும் ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஜனவரி 2023 மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்
  • கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லை அறிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
  • இதற்கான பரிந்துரையில் நியூஸிலாந்து வீரர் டேவன் கான்வே மற்றும் இந்திய வீரர் முகமது சிராஜ் ஆகியோர் இருந்தனர். அவர்களை பின்னுக்கு தள்ளி கில் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
  • ஜனவரியில் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 70, 21, 116, 208, 40 மற்றும் 112 ரன்களை எடுத்திருந்தார். 5 டி20 போட்டிகளில் விளையாடி 7, 5, 46, 7, 11 ரன்கள் எடுத்திருந்தார். அதன் காரணமாக 23 வயதான அவர் இந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • மகளிர் பிரிவில் ஜனவரி மாத சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இங்கிலாந்து அணியின் கிரேஸ் ஸ்க்ரீவன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இளையோர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றவர்.
Aero India 2023: ஏரோ இந்தியா  நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
  • விமானத்துறையில் பிற நாடுகளுடன் கூட்டுறவை எதிர்பார்க்கும் இந்தியா, பெங்களூருவில் இந்திய விமானப்படைத் தளத்தில் 'குருகுல்' ஃப்ளைபாஸ்ட் நிகழ்ச்சியை நடத்துகிறது. 
  • ஏரோ இந்தியா 2023-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சி தொடங்கியவுடன், விமானங்கள் வானில் பறக்கும் நிகழ்வுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்திய விமானப்படையின் தலைமை ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி தலைமையில் குருகுலம் அமைக்கப்பட்டது. உருவாக்கம் உள்நாட்டு விமானங்களைக் காட்சிப்படுத்தியது.
  • இரண்டு இந்துஸ்தான் டர்போ மற்றும் இரண்டு இடைநிலை ஜெட் ட்ரெய்னர்கள் ஆகிவை வானில் பறக்கவிடப்பட்டன. HAWK-i ஆனது LCA SPTக்குப் பிறகு, ஹிந்துஸ்தான்-228, எச்ஏஎல் தயாரித்த எல்சிஎச் பிரசந் என பல விமானங்கள் நிகழ்ச்சியில் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்த்தின.
  • இந்த நிகழ்வில், இலகு போர் விமானம்-தேஜாஸ் (Light Combat Aircraft (LCA)-Tejas), எச்டிடி-40, டோர்னியர் லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர் (Dornier Light Utility Helicopter (LUH)), லைட் காம்பாட் ஹெலிகாப்டர் (Dornier Light Utility Helicopter (LUH)) மற்றும் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (Advanced Light Helicopter (AL) போன்ற உள்நாட்டு விமானங்கள் கலந்துக் கொண்டன.
  • 80 க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்பை ஈர்த்த ஏரோ இந்தியா 2023வில் சர்வதேச மற்றும் இந்திய OEMகளின் 65 CEO க்கள் மற்றும் சுமார் 30 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel