Type Here to Get Search Results !

12th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


12th FEBRUARY 2023 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்
  • ஆந்திரா, ஜார்க்கண்ட் உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்தார்.
  • இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். 7 ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தமிழக பாஜக மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மகாராஷ்டிர ஆளுநராக இருந்தபகத் சிங் கோஷ்யாரி தனது கருத்துகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.  பகத்சிங் கோஷ்யாரி, கடந்த மாதம் பிரதமர் மோடியை சந்தித்து, ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ்,மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை பாஜகமக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார். தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
  • உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் லஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • உத்தர பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு பாஜக மூத்த தலைவர் சிவ பிரதாப் சுக்லா, இமாச்சல பிரதேச ஆளுநராகவும், ராஜஸ்தானை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, அசாம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ஆந்திரா ஆளுநராக இருந்த விஸ்வபூஷன் ஹரிசந்தன், சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ஆளுநராக இருந்த அனுசுயா உய்க்கே, மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • லடாக் துணைநிலை ஆளுநராக இருந்த ராதாகிருஷ்ணா மாத்தூரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். அருணாசல பிரதேச ஆளுநராக இருந்த பிரிகேடியர் டாக்டர் பி.டி.மிஸ்ரா, லடாக் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யத்ரிவிக்ரம் பர்நாயக், அருணாசலபிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பிஹார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பிஹார் ஆளுநராக இருந்த பாகு சவுகான், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி - மும்பை விரைவு நெடுஞ்சாலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • டெல்லி - மும்பை விரைவு சாலைக்குமத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த 2019 மார்ச் 8-ம்தேதி அடிக்கல் நாட்டினார். 
  • இதன்படி, டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை இணைக்கும் வகையில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் 1,386 கி.மீ. தொலைவுக்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது. இது நாட்டின் மிக நீளமான விரைவு சாலையாகும்.
  • தற்போது 8 வழி சாலையாக அமைக்கப்படும் இந்த விரைவு சாலையை 12 வழிசாலையாக விரிவுபடுத்த இடவசதி உள்ளது. டெல்லி முதல் மும்பை வரைஜெர்மன் தொழில்நுட்பத்தில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை நெடுகிலும் 500 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
  • குறுக்கே மனிதர்கள், விலங்குகள் செல்லாத வகையில் சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தசாலையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யலாம். 50 கி.மீ. இடைவெளியில் ஓய்வெடுக்க இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
  • அங்கு விடுதி, ஓட்டல், ஏடிஎம், மளிகை கடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சாலையோரம் 93 இடங்களில் சிறாருக்கான பொழுதுபோக்கு பூங்காக்கள்அமைக்கப்படுகின்றன. 
  • ஒவ்வொரு 100 கி.மீ. தொலைவு இடைவெளியில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படுகின்றன. விபத்து ஏற்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணியில் ஈடுபட ஏதுவாக, ஆங்காங்கே முக்கிய இடங்களில்ஹெலிபேட் வசதியும் செய்யப்படுகிறது.
  • விரைவு சாலையின் ஒரு வழித்தடம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. இதுவே நாட்டின் முதல் இ-சாலை ஆகும்.விரைவு சாலை முழுவதும் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 
  • இந்நிலையில், டெல்லி - மும்பை விரைவு சாலையில் முதல் கட்டமாக டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் லால்சாட் வரை ரூ.12,150 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 246 கி.மீ. சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
புதுதில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
  • மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்களை தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். விழாவில் நினைவு இலச்சினை சின்னத்தையும் அவர் வெளியிட்டார்.
  • நிகழ்விடத்திற்கு வந்ததும், ஆர்ய சமாஜத்தின் இடங்கள் மற்றும் அங்கு நடைபெற்ற நேரடி நிகழ்ச்சிகளைக் கடந்து பிரதமர் நடந்து சென்று, யாகத்தில் ஆஹுதி அர்ப்பணத்தையும் செய்தார்.
  • 1824-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பிறந்த மகரிஷி தயானந்த சரஸ்வதி ஒரு சமூக சீர்திருத்தவாதி ஆவார். அவர் காலத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து 1875-ம் ஆண்டில் ஆர்ய சமாஜத்தை நிறுவினார். 
  • சமூக சீர்திருத்தங்கள் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நாட்டின் கலாச்சார மற்றும் சமூக விழிப்புணர்வில் ஆர்ய சமாஜ் முக்கிய பங்கு வகித்துள்ளது.
சிப்ரஸின் புதிய அதிபராக நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் தேர்வு
  • சிப்ரஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ், இரண்டாவது மற்றும் இறுதி சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆண்ட்ரியாஸ் மவ்ரோயானிஸ்-ஐ தோற்கடித்து 51.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆண்ட்ரியாஸ் மவ்ரோயானிஸ் 48.1% வாக்குகளைப் பெற்றிருந்தார்.
  • ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் DISY கட்சியின் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ், 2013 முதல் ஆட்சியில் இருந்து வருகிறார், 
  • 2018 இல் அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்படி, அவர் மூன்றாவது முறையாக பதவியேற்க முடியாது. அதன்பிறகு தற்போது நடந்த அதிபர் தேர்தலில் 49 வயதான கிறிஸ்டோடூலிட்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டோடூலிட்ஸ் 2022 ஆம் ஆண்டு வரை சிப்ரஸின் வெளியுறவு அமைச்சராக இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தின் அடுத்த அதிபராகிறாா் முகமது சகாபுதீன்
  • வங்கதேசத்தின் அடுத்த அதிபராக ஓய்வு பெற்ற நீதிபதி முகமது சகாபுதீன் (74) தோவு செய்யப்படவிருக்கிறாா்.
  • நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட ஆளும் அவாமி லீக், அவரை பெயரை பரிந்துரை செய்திருப்பதையடுத்து அவா் நாட்டின் 22-ஆவது அதிபராக தோவு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. 
  • தற்போதைய அதிபா் முகமது அப்துல் ஹமீதின் பதவிக் காலம் ஏப். 24-ஆம் தேதி நிறைவடைவதையொட்டி, புதிய அதிபராக முகமது சகாபுதீன் பெயரை ஆளும் அவாமி லீக் கட்சி, தோதல் ஆணையத்தில் சமா்ப்பித்துள்ளது. 
தேசிய சமஸ்கிருதப் பெருவிழா 2023 மும்பையில் தொடங்கியது
  • தேசிய சமஸ்கிருதப் பெருவிழா 2023-ஐ மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியும், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியும் மும்பை சர்ச்கேட் ஆசாத் மைதானத்தில் தொடங்கிவைத்தனர். 
  • இந்தப் பெருவிழா, பிப்ரவரி 11 முதல் 19 வரை கலாச்சாரப் பரிமாற்றம் மூலம் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்த மத்திய கலாசார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிர அரசின் கலாசார விவகாரங்கள், வனம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், சுதிர் முங்கந்திவார், சுற்றுலா, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா ஆகியோர் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel