ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது சவுதி அரேபியா கிளப்
- போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப்.
- 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், இழப்பீடு நிதி மேலாண்மை மற்றும் திட்ட ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சுப்ரத் மொஹபத்ரா தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வனப்பாதுகாவலராக (வனப்படை தலைவர்) நியமிக்கப்படுகிறார்.
- மத்திய அறிவியல் & தொழில்நுட்பம் (தனிப் பொறுப்பு); புவி அறிவியல் (தனிப் பொறுப்பு); பிரதமர் அலுவலகம்; பணியாளர்கள், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (என்ஆர்டிசி) ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பலதரப்பட்ட வகையில் உதவுவதற்கு “இன்குபேஷன் சென்டரை” திறந்து வைத்தார்.