பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தமிழக நிதித் துறை சார்பில் வளர்ந்து வரும் துறைகளுக்கானதொடக்க நிதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, முதல்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதிக் கடிதங்களை வழங்கினார்.
- இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில் முனைவோரால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்நிதியத்துக்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி, அவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் 'பரிட்சா பே சர்ச்சா'(தேர்வும் தெளிவும்) என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
- அந்த வகையில், 6-வது 'பரிட்சா பே சர்ச்சா' நிகழ்ச்சி டெல்லி டால்கட்டோரா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். நாடு முழுவதிலும் இருந்து காணொலி வாயிலாகவும் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் பார்க்கில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இரட்டையர்க்கான கலப்பு பிரிவில் இந்திய வீரர்களான, சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா கலந்து கொண்டது.
- இந்நிலையில் இறுதிப்போட்டியில் சானியா-போபண்ணா இணை 6-7 (2), 2-6 என்ற செட் கணக்கில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸுக்கு எதிராக தோல்வியடைந்தது.
- தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார்.