Type Here to Get Search Results !

TNPSC 24th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது
  • இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோரது அதிரடி சதத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது. 
  • 386 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 41.2 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  
  • 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. 
  • ஷர்துல் தாக்குர் ஆட்டநாயகன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஷுப்மன் கில் தட்டிச் சென்றார்.
  • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கின் 30 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார் இந்தியாவின் ரோஹித் சர்மா.
  • இந்த வகை சாதனையில் சச்சின் டெண்டுல்கர் (49 சதங்கள்), விராட் கோலி (46) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.
மொபைல் இயங்குதளம் உருவாக்கியது சென்னை ஐ.ஐ.டி.,
  • உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள, நம்பிக்கை என்ற அர்த்தத்தில் 'பரோஸ்' எனப்படும் மொபைல்போன் இயங்கு தளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதை சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.
  • பரோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளத்தை, மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிசோதனை செய்தனர். இது மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
  • சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில்நுட்ப ஊக்குவிப்பு அறக்கட்டளை உருவாக்கிய, 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான 'ஜே அண்டு கே ஆப்பரேஷன்ஸ்' இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. 
இந்திய கடற்படையின் மிகப்பெரிய கூட்டுப் போர் பயிற்சி - ட்ரோபெக்ஸ் 23
  • இந்திய கடற்படையின் 2023-ம் ஆண்டுக்கான மிகப்பெரிய போர் பயிற்சியான ட்ரோபெக்ஸ் கூட்டுப்பயிற்சி இந்தியாப் பெருங்கடல் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. 
  • இதில் இந்திய கடற்படையின் அனைத்துப் பிரிவுகளும் இடம்பெற்று இருக்கிறது. மேலும், இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படையினரும் இந்த பயிற்சியில் பங்கெடுத்துள்ளனர்.
  • ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த மூன்று மாத ட்ரோபெக்ஸ் 23 பயிற்சியில், நிலம் மற்றும் நீரில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய கடற்படை உபகரணங்கள் மட்டுமல்லாமல், விமானப்படையின் போர் விமானங்கள் உள்ளிட்டவையும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. 
  • பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பயிற்சியில், துறைமுகத்திலும், கடற்பகுதியிலும், ஆயுதத் துப்பாக்கி உள்ளிட்ட கடற்படைத் தளவாடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • குறிப்பாக, பல்முனைத் தாக்குதல் சூழ்நிலையை கூட்டாக எதிர் கொள்வதற்கான பலத்தை இந்திய கடற்படைக்கு அளிக்கும் வகையில், இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முப்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு - ஆம்ஃபெக்ஸ் 2023
  • முப்படைகள், தரையிலும் நீரிலும் மேற்கொண்ட ராணுவக் கூட்டுப் பயிற்சியான ஆம்ஃபெக்ஸ் 2023, ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் கடந்த 17 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. 
  • தரை மற்றும் நீரில் செயல்படும் முப்படைகளின் இயங்குதன்மை மற்றும் இணக்கத்தை மேம்படுத்துவதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும். 
  • காக்கிநாடாவில் முதன் முறையாக நடைபெற்ற ஆம்ஃபெக்ஸ் 2023, இதுவரையில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சிகளைவிட மிக பிரம்மாண்டமான அமைந்தது. 
  • இந்திய கடற்படையில் தரையிலும் நீரிலும் இயங்கக்கூடிய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் முதலியவையும், இந்திய ராணுவத்தின் சிறப்பு படைகள், பீரங்கி மற்றும் கவச வாகனங்கள் அடங்கிய 900 குழுக்களும், இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானங்களும், சி 130 ரக விமானங்களும் பயிற்சியில் பங்கேற்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel