Type Here to Get Search Results !

TNPSC 22nd JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


உலகக்கோப்பை ஹாக்கி - வெளியேறியது இந்தியா
  • 15ஆவது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த அணிகள் நேரடியாக கால் இறுதிக்குள் நுழைந்தன.
  • அந்த வகையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3ஆவது இடத்தை பிடித்த அணிகள் 2ஆவது சுற்றில் மோதுகின்றன.
  • அதன்படி 'டி' பிரிவில் 2ஆவது இடத்தை பிடித்த இந்தியா, 'சி' பிரிவில் 3ஆவது இடத்தை பெற்ற நியூசிலாந்துடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 3-3 கோல்கள் அடுத்து சம நிலையில் இருந்தன.
  • இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இரு அணிகளுக்கு தலா 5 வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. இதில் 5-4 என நியூசிலாந்து அணி வெற்றி பெற்று காலிறுதி முன்னேறியது.
  • இதனால் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. 
இலங்கைக்கு சா்வதேச நிதியம் ரூ.23,500 கோடி கடன் - சீனா உத்தரவாதம்
  • கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலா்கள் கடன் அளிக்க சா்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது. அந்த நிதியத்தின் அலுவலா்கள் அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அந்தக் கடனை 4 ஆண்டுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 
  • அதேவேளையில், இலங்கைக்கு கடன் அளித்த நாடுகள், கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிப்பது, கடன் வட்டி விகிதத்தை குறைப்பது போன்ற கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், வங்கிகள் உள்ளிட்டவை கூடுதல் நிதியுதவி அளிப்பதும் இலங்கையின் பொதுக்கடனை நிலையாக பராமரிக்க உதவும் என்று சா்வதேச நிதியம் தெரிவித்தது. 
  • மேலும் இலங்கைக்கு சா்வதேச நிதியம் கடன் அளிக்கும் முன், அந்நாட்டுக்குக் கடன் அளித்த நாடுகள், வங்கிகள் உள்ளிட்டவை கடன் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
  • இலங்கையின் பொதுக்கடனை மீண்டும் நிலையானதாக மாற்ற அந்த உத்தரவாதம் முக்கியம் என்று சா்வதேச நிதியம் குறிப்பிட்டது. 
  • இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்து கடந்த வாரம் சா்வதேச நிதியத்துக்கு இந்தியா கடிதம் அனுப்பியது. தற்போது அந்நாட்டுக்கு சா்வதேச நிதியம் கடன் அளிக்க சீனா ஆதரவு தெரிவித்து உத்தரவாதம் அளித்துள்ளது. 
  • இலங்கைக்குக் கடன் அளிக்க சா்வதேச நிதியத்தின் நிா்வாகக் குழு மாா்ச் மாதம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தக் கடன் கிடைக்கப்பெற்றால், உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி மற்றும் சந்தைகளில் இருந்து இலங்கையால் கடன் திரட்ட முடியும்.
டிஜிபி மாநாட்டில் மோடி பேச்சு காலாவதியான கிரிமினல் சட்டங்களை நீக்க வேண்டும்
  • தலைநகர் டெல்லியில் 57வது அகில இந்திய டிஜிபி மற்றும் ஐஜிக்கள் மாநாடு கடந்த 20ம் தேதி தொடங்கியது. 3 நாள் மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
  • காவல்துறையை இன்னும் அதிக உணர்திறன் மிக்க துறையாக உருவாக்க வேண்டும். அதற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்து காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். 
  • அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வதன் மூலம், எல்லைகளையும், கடலோர பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் போலீஸ் அமைப்புகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
  • காலாவதியான கிரிமினல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். திறன்களை பயன்படுத்துவதற்கும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் மாநில காவல்துறையும், ஒன்றிய புலனாய்வு அமைப்புகளும் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். 
  • வளர்ந்து வரும் சவால்களைப் பற்றி விவாதிப்பதற்கும், சிறந்த நடைமுறைகளை உருவாக்கவும், டிஜிபிக்கள் மாநாடு போன்று, மாநில மற்றும் மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
  • மாநாட்டில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
  • இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 600 போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2023-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் 23 அலங்கார ஊர்திகள் பங்கேற்பு 
  • 2023 ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு ஆகியவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. 
  • 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பில் 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகின்றன.
  • அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் - டையூ, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 17 அலங்கார ஊர்திகள், நாட்டின் புவியியல் மற்றும் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை சித்தரிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தப்படும்.
  • கலாச்சார அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுதக் காவல் படைகள், உள்துறை அமைச்சகத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மத்திய பொதுப்பணித் துறை, பழங்குடியினர் நல அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவை சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும். இவை கடந்த சில ஆண்டுகளில் செய்த பணிகள் மற்றும் சாதனைகள் அந்தந்த அலங்கார ஊர்திகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
  • பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து அலங்கார ஊர்திகள் தொடர்பாக பெறப்பட்ட முன்மொழிவுகளை நிபுணர் குழு ஆய்வு செய்தது. அலங்கார உறுதியின் கருப்பொருள், விளக்கக்காட்சி, அழகியல் மற்றும் தொழில்நுட்பக் கூறுகள் குறித்து மாநிலங்களின் பிரதிநிதிகளுடன், நிபுணர் குழு உறுப்பினர்கள் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் தேர்வு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel