டிசம்பர் மாதம் 2022 ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடி
- கடந்த டிசம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டியாக ரூ. 1,49,507 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.26,711 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 33,357 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.78,434 கோடி வசூலாகியுள்ளது.
- ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதி வரியாக ரூ.40,263 கோடி அடங்கும். இதுபோல், செஸ் வரியாக ரூ.11,005 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது,
- முந்தைய ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி ரூ.1.3 லட்சம் கோடி வசூலாகியிருந்தது. அத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாத வசூல் 15 சதவீதம் அதிகம்.
- கடந்த மாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 10வது மாதமாக ஜிஎஸ்டி ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.68 லட்சம் கோடி, மே மாதம் ரூ.1.41 லட்சம் கோடி, ஜூன் மாதம் ரூ.1.4 லட்சம் கோடி, ஜூலை ரூ. 1.49 லட்சம் கோடி, ஆகஸ்ட்டில் ரூ.1.44 லட்சம் கோடி, செப்டம்பரில் ரூ. 1.48 லட்சம் கோடி, அக்டோபரில் ரூ.1.52 லட்சம் கோடி, நவம்பரில் ரூ.1.46 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
- அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
- இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது.
- இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்படும். இதனால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
- இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுமெனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச் சுமையை அரசு ஏற்றுள்ளது.
- சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் (செலவினம்) தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்.
- இந்த குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
- இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா ஜனவரி 1, 2023 அன்று ஏற்றுக்கொண்டார்.
- புனேவிலுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற அவர், கடந்த 1985-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விமானப்படையில் இணைந்தார்.
- இவர், வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் முன்னாள் மாணவராவார். 4500 க்கும் அதிகமான மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவத்தை இவர் பெற்றுள்ளார்.
- தமது 37 ஆண்டுகள் பணிக்காலத்தில் ஏராளமான முக்கிய தலைமைப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். போர் விமானப் படையின் தலைமை அதிகாரி, இங்கிலாந்து ராயல் விமானப்படை தளத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பு அதிகாரி உள்ளிட்ட ஏராளமான பொறுப்புகள் இதில் அடங்கும். ‘விஷிஸ்ட் சேவா பதக்கம்' மற்றும் ‘அதி விஷிஸ்ட் சேவா பதக்கங்களை' அவர் பெற்றுள்ளார்.
- இந்திய விமானப்படையில் 39 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவை செய்து டிசம்பர் 31, 2022 அன்று ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் எஸ். பிரபாகரனுக்குப் பிறகு, விமானப்படையின் மேற்கு பிரிவின் தலைவராக ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.