Type Here to Get Search Results !

TNPSC 19th JANUARY 2023 TAMIL CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ராஜினாமா
  • தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக, 2017 முதல் உள்ளவர் ஜெசிந்தா ஆர்டன். 
  • கடந்த, 2021ல் அங்குள்ள மசூதியில் நடத்தப்பட்ட மிகப் பெரும் தாக்குதல், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை என, பல பெரும் பிரச்னைகளை அவர் கையாண்ட விதம், உலகெங்கும் பெரும் பாராட்டுதல்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். 
சா்வதேச மசாலா மாநாடு 2023
  • அகில இந்திய மசாலா ஏற்றுமதியாளா்கள் மன்றம் (ஏ.ஐ.எஸ்.இ.எஃப்.) சாா்பில் 6-ஆவது சா்வதேச மசாலா மாநாடு கிண்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.
  • அகில இந்திய நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியாளா்கள் மன்றத்தின் தலைவா் சஞ்சீவ் பிஸ்ட் தலைமை வகித்தாா். 
  • 225 வகையான இந்திய மசாலா பொருட்கள் உலகம் முழுவதும் 180-க்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றாா் அவா். மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறுகிறது. 
  • நிகழ்ச்சியில் கொச்சி தொழில் வா்த்தக சபை நிறுவன துணைத் தலைவா் ஆனந்த் வெங்கட்ராமன், சா்வதேச மசாலா மாநாடு தலைவா் செரியன் சேவியா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 
சிறுதானியங்கள் ஆண்டு 'லோகோ' வெளியீடு
  • பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, நடப்பாண்டை, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக, ஐ.நா., சபை அறிவித்துள்ளது. உலகின் சிறுதானியங்கள் உற்பத்தியில், இந்தியா, 5வது இடத்தில் உள்ளது. 
  • உற்பத்தியில் முன்னேற்றம் அடைவதற்காக, நடப்பாண்டு, தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்களில் உள்ள, 212 மாவட்டங்களில், சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் பணிகளை, மத்திய அரசு துவங்கி உள்ளது. 
  • சிறுதானிய ஆண்டு தொடர்பாக விவசாயிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், லோகோவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றின் வரைபடங்கள் இடம் பெற்றுள்ளது. 
  • அதன்கீழ், ஆங்கிலத்தில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதை, தமிழில் மாற்றி, வேளாண் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சுமார் ரூ. 38,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் அங்கீகரிக்கப்பட்ட கடன்களை பிரதமர் விடுவித்தார். 
  • மும்பை மெட்ரோ ரயில் பாதைகள் 2ஏ & 7-ஐ நாட்டுக்கு அர்ப்பணித்தல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், ஏழு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மறுசீரமைப்பதற்காக அடிக்கல் நாட்டுதல், 20 இந்துஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே தெருவோர உணவு கடைகளைத் துவக்குதல், மும்பை நகரில் 40 கிலோமீட்டர் சாலையை கான்கிரீட் சாலையாக்கும் திட்டத்தைத் தொடங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
  • பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் 38,800 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் முடிவற்ற பணிகளை தொடங்கி வைத்தார். தடையற்ற நகர்ப்புற போக்குவரத்து சூழல் பிரதமரின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். 
  • இதன்படி 1200 கோடி ரூபாய் அளவிலான மெட்ரோ ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 18.6 கி.மீ. நீளம் கொண்ட 2ஏ (மஞ்சள் தடம்) தஹிசார் - தாதர் நகர் இடையேயும், 16.5 கி.மீ. நீளம் கொண்ட தடம் 7 (சிவப்பு தடம்) அந்தேரி இ- தஹிசார் இ இடையே அமைக்கப்பட்டு உள்ளது. 
கர்நாடகாவில் கலபுரகியில் புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு பிரதமர் பட்டா வழங்கினார்
  • கர்நாடகாவில் கலபுரகியில் புதிதாக அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பட்டா வழங்கி, மல்கெத், கலபுரகி ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய இணையமைச்சர் திரு பகவந்த் கூபா, கர்நாடக மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel