`தமிழ் நிலம்' இணையதளத்தில் வருவாய் துறைக்கான புதிய மென்பொருள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும் நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்ககத்தின் தமிழ் நிலம் இணையதளத்தில் (https://tamilnilam.tn.gov.in) நிறுவப்பட்டுள்ள, அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல் மற்றும் அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் வகையில் புதிதாகமென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
- அதேபோல, மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிக்காகபுதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
- அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவில் மனைகளை கிரயம் பெறும்போது, ஒவ்வொருமனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியே மனு பெறும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு ஒரே மனைப் பிரிவில் உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக, நில அளவர் பல்வேறு நாட்களில் தனித்தனியே செல்லவேண்டியுள்ளது.
- தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 1.50 லட்சம் உட்பிரிவு மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மனைப்பிரிவு சார்ந்தவை. எனவே, உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
- தற்போது முதல்வர் தொடங்கிவைத்துள்ள புதிய மென்பொருள் மூலமாக மனைப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, அவற்றின் உரிமையாளர் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக் கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்படும்.
- மனைப் பிரிவுகள் சார்ந்த உட்பிரிவு மனுக்களின் எண்ணிக்கை குறைந்து, மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கும் சூழல் ஏற்படும். மேலும், பட்டா மாற்றத்துக்காக மக்கள் மீண்டும் தனியேவிண்ணப்பிக்கவோ, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேரில் செல்லவோ தேவையில்லை.
- சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவு விழா நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சர்வதேச பதிப்பகங்கள் மற்றும் தமிழ் பதிப்பகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இதைத் தொடர்ந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மருத்துவத்துறை நுால்களை மருத்துவ மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
- பிரிட்டன் அமெரிக்கா ஜெர்மனி ஸ்வீடன் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பதிப்பாளர்கள் இதில் பங்கேற்றனர். தமிழக அரசின் சார்பில் 3 கோடி ரூபாய் மொழி பெயர்ப்பு மானியமாக வழங்கப்படுகிறது.
- இந்திய மற்றும் உலக மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் 365 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்தாண்டு மூன்று நாட்களில் நடத்தப்பட்ட கண்காட்சி அடுத்தாண்டுகளில் இன்னும் விரிவாக்கப்படும்.
- ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ரோகிணி தலைமையில் 5 பேர் கொண்ட ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.
மிக இளம் வயதில் இரட்டை சதம் விளாசினார் ஷுப்மன் கில்
- இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதன்படி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- கில் 149 பந்துகளில் (19 பவுண்டரி, 9 சிக்ஸர்) 208 ரன்கள் விளாசினார். மிக இளம் வயதில் (23) இரட்டை சதம் விளாசினார் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.
- இப்போட்டியில் சதமடித்த சுப்மன் கில் இன்னிங்ஸ் (19) அடிப்படையில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்தியர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றார்.
- கில் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் (24 இன்னிங்ஸ்) ஆகியோரை முந்திச் சென்று, அதிவேக இந்தியராகவும், கூட்டிணைந்த இரண்டாவது அதிவேக சாதனையாளராகவும் ஆனார்.
- அவர் இமான்-உல்-ஹக்கை சமன் செய்து 19 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்தார், அதே நேரத்தில் 18 இன்னிங்ஸ்களில் வேகமாக 1000 ஒருநாள் ரன்களைக் ஃபகர் ஜமான் கடந்துள்ளார்.
- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவோடு செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் உருவாக்கப் பட்டுள்ள காற்றின் தரத்தை கண்காணிக்கும் அமைப்புமுறைக்கான தொழில்நுட்பத்தை அமைச்சகத்தின் செயலாளர் திரு அல்கேஷ் குமார் ஷர்மா அறிமுகப்படுத்தினார்.
- டெக்ஸ்மின், ஐ.எஸ்.எம் உடன் இணைந்து, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தேசிய திட்டத்தின் கீழ் கொல்கத்தாவில் உள்ள நவீன கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக்), சுற்றுச்சூழல் மாசை கண்காணிக்கும் வகையில் வெளிப்புறக் காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் நிலையத்தை வடிவமைத்துள்ளது.
- சுரங்கம் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்து வதற்காக இந்த தொழில்நுட்பத்தின் வணிகமயமாக்கலுக்காக ஜே.எம். என்விரோ லேப் தனியார் நிறுவனத்திற்கு காற்று தர கண்காணிப்பு அமைப்புமுறையின் தொழில்நுட்பம் பரிமாற்றம் செய்யப்பட்டது.
- ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கிய முதலாவது ஜி20 சுகாதார பணிக்குழுக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், வெளியுறவு இணையமைச்சர் திரு எஸ் வி முரளிதரன் ஆகியோர் உரையாற்றினர்
- இந்த நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு எஸ் வி முரளிதரன், இந்தியாவின் வலிமையான மருத்துவ நடைமுறை மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளின் கலாச்சாரம் குறித்து எடுத்துரைத்தார்.
- எந்தவித சுகாதார நெருக்கடியையும், திறம்பட எதிர்கொள்வதற்கு நமது திட்டத்தை சீரமைப்பது அவசியம் என்று பிரதிநிதிகளை அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் எந்தவொரு சுகாதார சவாலையும் எதிர்கொள்ள நம்மைக் கூட்டாக தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
- இந்தக் கூட்டத்தில் நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- சன்சத் கேல் மகாகும்ப் 2022-23 என்னும் நாடாளுமன்ற விளையாட்டு விழாவின் 2-ம் கட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
- இந்த விழா பஸ்தி மாவட்டத்தி்ல் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹரீஸ் திவிவேதி என்பவரால் 2021-ம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்த விளையாட்டு விழாவில் உள்விளையாட்டு மற்றும் வெளிவிளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றுள்ளன. மல்யுத்தம்,கபடி,கோ-கோ, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, வாலிபால், கைப்பந்து, சதுரங்கம், கேரம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர கட்டுரை எழுதுதல், ஓவியம் தீட்டுதல், ரங்கோலி போன்ற போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
- இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹரீஷ் திவிவேதி, உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.