Type Here to Get Search Results !

உலக எய்ட்ஸ் தினம் / WORLD AIDS DAY

 

TAMIL
  • உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ். எச்.ஐ.வி., (ஹியூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ்) எனும் வைரசால் ஏற்படுகிறது. இது மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழிக்கிறது. 
  • பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கடைசியில் மரணம் ஏற்படுகிறது.
  • இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச.,1, உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச. 1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது எச்.ஐ.வி., வைரசால் ஏற்படுகிறது. 
  • உலகலாவிய சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸ் இருப்பதை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது. உலகில் 2021ன் படி 3.84 கோடி நோயாளிகள் உள்ளனர். 2021ல் மட்டும் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1988 முதல் இதுவரை 8.42 கோடி பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • உலகளவில் ஹெச்வி நோய் தீவிரமான உடல்பாதிப்புகளை கொடுக்கும் நோயாகப் பார்கப்படுகிறது, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உலகளவில் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உலகளவில் ஹெச்ஐவி நோய்க்கு பலியாகிறார்கள்.
உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் 2022
  • எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் போராட்டத்துக்கு தடையாக இருக்கும் அனைத்து அநீதிகளையும் நீக்க வேண்டும் என்று ஐநா கேட்டுக்கொள்கிறது. 
  • 2022ம் ஆண்டின் கருப்பொருளாக "சமன்செய்தல்" முன்வைக்கப்படுகிறது. இதன்படி, ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, எய்ட்ஸ் ஒழிப்பில் உதவுவதற்கும் தேவையான முயற்சிகளை செய்து, நாம் அனைவரும் செயல்படுவதற்கான அழைப்பு.
வரலாறு
  • கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி உலக சுகாதார அமைப்பு, உலக எய்ட்ஸ் தினத்தை உருவாக்கியது. எய்ட்ஸ், ஹெச்ஐவி குறித்த தகவல்கள், விழிப்புணர்வுகளை, உள்ளூர் மக்கள், அரசுகள், சர்வதேச அமைப்புகள், தனியார் அமைப்புகள், மக்களுக்கு தெரிவிக்க இந்த தினம் உருவாக்கப்பட்டது. 
  • 1988ம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினம் உருவாக்கப்பட்டபோது, 90ஆயிரம் முதல் 1.50லட்சம் பேர் மட்டுமே ஹெச்வி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
  • அடுத்த 20 ஆண்டுகளில் உலகளவில் 3.30 கோடி மக்கள் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டனர். கடந்த 1981ம்ஆண்டு ஹெச்ஐவி வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து இதுவரை 2.50 கோடி மக்கள் இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 
  • இதன் விளைவாக எய்ட்ஸ் விழிப்புணர்வு, பிரச்சாரங்கள் செய்ய டிசம்பர் 1ம் தேதி எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது
  • 1996ம் ஆண்டுவரை உலக சுகாதார அமைப்பு உலக எய்ட்ஸ் தினத்துக்கு ஆண்டுதோறும் கருத்துரு, நிகழ்ச்சிகளை நடத்தியது. அதன்பின், ஐநா எய்ட்ஸ் அமைப்பு, பணிகளைக் கவனிக்கத் தொடங்கியது. 
  • எய்ட்ஸ் விழிப்புணர்வு, தகவல்களை உலகளவில் கொண்டு சென்றது. உலக எய்ட்ஸ் பிரச்சார அலுவலகத்தை கேப்டவுன், நமிபியா, ஆம்டர்டாம், உள்ளிட்ட நாடுகளில் அமைத்து.
ENGLISH
  • AIDS is one of the deadliest diseases in the world. It is caused by a virus called HIV (Human Immunodeficiency Virus). It destroys the white blood cells in the human body. Then it attacks the immune system and makes the body unable to fight the disease. Eventually death occurs.
  • In order to create awareness about this, Dec. 1 is observed as World AIDS Day. World AIDS Day is observed on 1 It is caused by the HIV virus. The UN has set a goal to end AIDS as a global health threat by 2030. As per 2021 there are 3.84 crore patients in the world. 15 lakh people were affected in 2021 alone. Since 1988, 8.42 crore people have been affected by AIDS.
  • Globally, HIV is considered a serious disease, with millions of people infected worldwide every year and millions of people dying of HIV every year.
Theme of World AIDS Day 2022
  • The UN calls for the elimination of all injustices that stand in the way of the fight against AIDS.
  • The theme for 2022 is "Equalization". Accordingly, it is a call to action for all of us to eliminate inequalities and do what is necessary to help end AIDS.
History
  • The World Health Organization established World AIDS Day on December 1, 1988. This day was created to inform local people, governments, international organizations, private organizations and people about AIDS and HIV.
  • When World AIDS Day was created in 1988, only 90,000 to 1.50 lakh people were infected with HIV. In the next 20 years, 3.30 crore people worldwide became infected with HIV. Since the discovery of the HIV virus in 1981, 2.50 crore people have died due to this disease.
  • As a result AIDS Day was observed on 1st December to create AIDS awareness and campaigns Until 1996, the World Health Organization held annual events for World AIDS Day. After that, the UN AIDS organization began to monitor the work.
  • AIDS awareness, information carried worldwide. Setting up World AIDS Campaign Offices in Cape Town, Namibia, Amsterdam, etc.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel