பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் இணைந்து புதிய போா் விமானம்
- பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அதிநவீன போா் விமானமொன்றை வடிமைக்க முடிவு செய்துள்ளன.
- 'குளோபல் காம்பாட் ஏா் புரொகிராம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
- இந்த சா்வதேச கூட்டுறவு, ஐரோப்பிய-அட்லாண்டிக் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்பதை நிரூபிக்கிறது.
- புதிதாக உருவாக்கப்படும் போா் விமானம், வரும் 2035-ஆம் ஆண்டில் விண்ணில் பறக்கத் தொடங்கும். ஆளில்லா விமானங்கள், அதிநவீன சென்சாா்கள், உயா்தொழில்நுட்ப ஆயுதங்களுடன் சிறந்த தொடா்பை ஏற்படுத்தும் வகையில் புதிய விமானம் வடிவமைக்கப்படும்.
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.12.2022) சென்னையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற மாநாட்டில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
- தொடர்ந்து, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் திறன்மிகு காலநிலை கிராமங்கள், பசுமைப் பள்ளிகள், பசுமை தொன்மங்கள் ஆகிய திட்டங்களை தொடங்கி வைத்து, காலநிலை மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.
- நிதிநிலை அறிக்கையில் அதற்கென 500 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம், தமிழ்நாட்டுக்கு என தனியான மாதிரிகளை உருவாக்கவும் அதற்கான ரேடார்களை அமைக்கவும் 10 கோடி ரூபாயை ஒதுக்கி, திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.
உக்ரைனுக்கு மேலும் ரூ.2263 கோடி உதவி
- உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம், பொருளாதார ரீதியாக உக்ரைனுக்கு உதவி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா தற்போது உக்ரைனுக்கு மேலும் ரூ.2,263 கோடி ஆயுத உதவி வழங்க உள்ளது.
- இதில் நவீன தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட் ஏவுகணைகள், ஏராளமான ஆயுதங்கள் உள்ளிட்டவை உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா இதுவரை ரூ.1.57 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ உதவியை வழங்கியுள்ளது.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர் மாற்றம் - தேர்தல் ஆணையம் ஒப்புதல்
- தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி முதலமைச்சர் சந்திரசேகர் ராவை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது.
- இந்த கட்சியை கடந்த அக்டோபர் மாதம் தேசிய கட்சியாக மாற்றி, பாரதிய ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றி சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.
- இதற்கு அங்கீகாரம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.எஸ். கட்சி கடிதம் அனுப்பியது. கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் குமார் இந்த கடிதத்தை எழுதியிருந்தார். இந்த பெயர் மாற்றத்துக்கு தற்போது தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.