சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு 76 சதவீதமாக உயர்வு
- சத்தீஸ்கர் பொது சேவை (பட்டியலிடப்பட்ட சாதி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு) திருத்த மசோதா மற்றும் சத்தீஸ்கர் கல்வி நிறுவனங்களில் (சேர்க்கையில் இடஒதுக்கீடு) திருத்த மசோதாவை முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல் தாக்கல் செய்தார்.
- இந்த மசோதாக்களின்படி, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் 32 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27 சதவீதமும், பட்டியலிடப்பட்ட வகுப்பினர் 13 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 4 சதவீதமும் பொது வேலை வாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் வணிக நிலக்கரி சுரங்கங்களை வணிக ரீதியில் ஏலம் விடுதல் மற்றும் சுரங்கத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்கள் மாநாடு
- நிலக்கரி அமைச்சகம் சுரங்கத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து வணிக ரீதியில் நிலக்கரிச் சுரங்க ஏலம் விடுதல், சுரங்கத் துறையில் வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்களின் மாநாட்டுக்கு பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்தது.
- மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.
- கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் சோமப்பா பொம்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த மாநாட்டில் , கர்நாடக சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் திரு ஹாலப்பா பசப்பா ஆச்சார் பங்கேற்றார்.
- இந்நிகழ்ச்சியில், நிலக்கரித் துறையின் உயர் அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள், பல நிறுவனங்களின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.