Type Here to Get Search Results !

TNPSC 28th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

நாட்டில் முதல்முறையாக 'நீலகிரி வரையாடு திட்டம்' - ரூ.25 கோடியில் தமிழக அரசு செயல்படுத்துகிறது

  • நீலகிரி வரையாடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான சிறப்புகளில் ஒன்றாகும். வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும், நாட்டிலேயே முதல்முறையாக 'நீலகிரி வரையாடு திட்டம்' ரூ.25.14 கோடியில் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலக ரேப்பிட் செஸ் - சவிதா ஸ்ரீக்கு வெண்கலம்
  • கஜகஸ்தானில் நடைபெறும் உலக ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிா் பிரிவில் இந்தியாவின் பி.சவிதா ஸ்ரீ புதன்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா்.
  • அல்மேட்டி நகரில் புதன்கிழமையுடன் நிறைவடைந்த இந்தப் போட்டியில் சவிதா, 11 சுற்றுகள் முடிவில் 8 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். இந்தியாவின் பிரதான போட்டியாளரான கோனெரு ஹம்பி 8 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தாா். 
  • இருவருமே 8 புள்ளிகளுடன் இருந்தாலும், டை பிரேக்கா் முறையில் சவிதாவுக்கு 3-ஆம் இடம் கிடைத்தது. பத்மினி ரௌத் 6 புள்ளிகளுடன் 38-ஆவது இடமும், துரோணவல்லி ஹரிகா அதே புள்ளிகளுடன் 39-ஆவது இடமும் பிடித்தனா்.
  • தானியா சச்தேவுக்கு 5.5 புள்ளிகளுடன் 50-ஆவது இடமே கிடைத்தது. இப்பிரிவில் சீனாவின் டான் ஜோங்யி 8.5 புள்ளிகளுடன் சாம்பியனாக, கஜகஸ்தானின் சடுவாகசோவா தினாரா அதே புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா். 
மத்திய காசநோய் பிரிவுடன் இணைந்து உத்தரப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தீவிர காசநோய் ஒழிப்புத் திட்டத்தை இந்தியன் ஆயில் தொடங்கியுள்ளது
  • காசநோய் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு வரலாற்று மைல்கல்லாக, தீவிர காசநோய் ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்ள, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய காசநோய் பிரிவு மற்றும் உத்தரபிரதேசம்,  சத்தீஸ்கர் மாநிலங்களுடன் இந்தியன் ஆயில் (இந்திய எண்ணெய்க் கழகம்) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • நீடித்த  வளர்ச்சி இலக்கைவிட ஐந்து ஆண்டுகள் முன்னதாக, 2025 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் காசநோயை முடிவுக்குக் கொண்டுவரும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுப்படுத்துகிறது.
  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.  
  • உலகில் ஆண்டுதோறும் 10 மில்லியன் பேரிடம் காச நோய்  தொற்றுவதாகவும், சுமார் 1.5 மில்லியன் பேர் இந்நோயால்  உயிரிழப்பதாகவும்  உலக அளவில் ஆண்டுதோறும்  காச நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel