உலககோப்பை கால்பந்து 2022 - அர்ஜென்டினா சாம்பியன்
- நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.
- கடந்த 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 1986 ம் ஆண்டு அப்போதைய அணியின் கேப்டனாக இருந்த மாரடோனா கோப்பையை பெற்று தந்தார். அதன் பின்னர் தற்போது அணியின் கேப்டன் மெஸ்சி கோப்பையை வென்றுள்ளார்.
- விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.
- இந்நிலையில் தற்போது கோலாகலமாக நடைபெற்ற 2022ம் ஆண்டு 22வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் ஃபிரான்ஸ் அணியைச் சேர்ந்த கிலியன் எம்பாப்பே 8 கோல்களை அடித்து'கோல்டன் பூட்' விருதையும், அர்ஜெண்டினா அணியின் கதாநாயகன் மெஸ்ஸி கோல்டன் பால்' விருதையும் மற்றும் அதே அர்ஜெண்டினா அணியைச் சேர்ந்த கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் 'கோல்டன் க்ளவ்' விருதையும் வென்றுள்ளனர்.
3 வகையான கிரிக்கெட்டிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற 17வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்
- வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 404ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்சில் 258 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்து வங்கதேச அணிக்கு 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
- 2வது இன்னிங்சில் வங்கதேச அணி 324 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி 188 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.
- முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் வீழ்த்தி குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன்மூலம் ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஆட்ட நாயகன் விருது வென்ற 17வது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றார்.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
- திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ரூ.4350 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
- பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கான கிரஹ பிரவேஷ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். ரூ.3400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த வீடுகள், 2 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளைச் சென்றடையும்.
- சாலை இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அகர்தலா நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் அகர்தலா புறவழிச்சாலை (காயர்பூர் - அம்தாலி) NH-08ஐ விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
- பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 230 கிமீ நீளமுள்ள 32 சாலைகளுக்கும், 540 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள 112 சாலைகளை மேம்படுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- ஆனந்த்நகர் மற்றும் அகர்தலா அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டையும் பிரதமர் திறந்து வைத்தார்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ரூ.2450 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.2450 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்,
- முன்னதாக, ஷில்லாங்கில் உள்ள மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு அதன் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.
- இன்று தொடங்கப்பட்ட பல திட்டங்களில் 320 நிறைவடைந்த, 890 கட்டுமானத்தில் உள்ள 4ஜி மொபைல் கோபுரங்கள், உம்சவ்லியில் ஐஐஎம் ஷில்லாங்கின் புதிய வளாகம், ஷில்லாங் - டீங்பாசோ சாலை, புதிய ஷில்லாங் துணைநகரம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர், காளான் மேம்பாட்டு மையத்தில் ஸ்பான் ஆய்வகம், மேகாலயாவில் ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு மேம்பாட்டு மையம், மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அஸ்ஸாமில் 21 இந்தி நூலகங்களையும் பிரதமர் திறந்து வைத்தார்.
- அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆறு சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். துரா மற்றும் ஷில்லாங் டெக்னாலஜி பார்க் கட்டம் -II இல் ஒருங்கிணைந்த விருந்தோம்பல் மற்றும் மாநாட்டு மையத்தின் அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.
2022-23 ம் நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 25.90% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
- 2022-23 ம் நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் புள்ளிவிவரத்தில், 17.12.2022 நிலவரப்படி நிகர வசூல் ரூ. 11,35,754 கோடி. இது முந்தைய ஆண்டின் ரூ. 9,47,959 கோடி நிகர வசூலை விட 19.81% அதிகமாகும்.
- நிகர நேரடி வரி வசூல் ரூ. 11,35,754 கோடியில் (17.12.2022 நிலவரப்படி), கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 6,06,679 கோடி (திரும்பப் பெறுவதற்கான நிகரம்), தனிப்பட்ட வருமான வரி, பத்திர பரிவர்த்தனை வரி உட்பட ரூ. 5,26,477 கோடி ஆகியவை அடங்கும்.
- 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் (திரும்பப்பெறுவதற்கு முன்) ரூ. 13,63,649 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ. 10,83,150 கோடி என்னும் முந்தைய நிதியாண்டின் வசூலை விட 25.90% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது
- மொத்த வசூல் ரூ. 13,63,649 கோடியில் கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 7,25,036 கோடி. தனிப்பட்ட வருமான வரி , பத்திர பரிவர்த்தனை வரி உட்பட ரூ. 6,35,920 கோடி.