Type Here to Get Search Results !

TNPSC 16th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூரில் ரூ.4,194 கோடியில் 3 கூட்டு குடிநீர் திட்டங்கள் - தமிழக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் அம்ருத் 2.0 திட்டம் மற்றும் மூலதன மானிய நிதியின் (சிஜிஎப்) ஆகியவற்றின் கீழ் ரூ.4,194.66 கோடியில் ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் 3 புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.
  • காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ரூ.4,187.84 கோடி மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சிகள், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிகள், ராமநாதபுரம், திருப்புலானி, பரமக்குடி, போகலூர், நயினார்கோயில், மண்டபம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 2,306 ஊரகக் குடியிருப்புகளுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி, நெய்க்காரப்பட்டி, கீரனூர் பேரூராட்சிகள் ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,422ஊரகக் குடியிருப்புகள் என3,19,192 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் 30.40 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • திருவள்ளூர் மாவட்டம் புதுஏரி கால்வாயில் ராமன்ஜி கண்டிகைகிராமத்துக்கு அருகில், 5 ஆழ்துளைகிணறுகளை நீராதாரமாகக் கொண்டு ரூ.3.64 கோடியில் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம் அம்மம்பாக்கம் மற்றும் கூனிப்பாளையம் ஊராட்சிகளைச் சார்ந்த அம்மம்பாக்கம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 717 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் சுமார் 4,900 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • மேலும், மாமண்டூர் ஏரியில் 4 ஆழ்துளை கிணறுகளை நீராதாரமாகக் கொண்டு ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த பூண்டி ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சியைச் சார்ந்த வேலகாபுரம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 522 வீட்டு குடிநீர் இணைப்புகளுடன் சுமார் 4,050 மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இத்திட்டங்கள் நிறைவடையும் போது தினசரி நபர் ஒருவருக்கு நகராட்சி பகுதிகளுக்கு 135 லிட்டர்,பேரூராட்சிகளுக்கு 90 லிட்டர், ஊரக பகுதிகளுக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படும்.
அயா்லாந்து பிரதமராகிறாா் இந்திய வம்சாவளி லியோ வராத்கா்
  • கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோதலிலுக்குப் பிறகு தற்போதைய பிரதமா் மைக்கேல் மாா்ட்டினின் கட்சியும் வராத்கரின் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. அப்போது பிரதமா் பதவியை இருவரம் சுழற்சி முறையில் ஏற்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
  • அதன்படி, மைக்கேல் மாா்ட்டின் வரும் சனிக்கிழமை பதவி விலகுகிறாா். இதுவரை துணைப் பிரதமராக இருந்து வந்த லியோ வராத்கா், மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கிறாா். ஏற்கெனவே அயா்லாந்தின் பிரதமராக கடந்த 2017 முதல் 2020 வரை வராத்கா் பொறுப்பு வகித்துள்ளாா்.
உலகின் சிறந்த 10 மறுசீரமைப்பு திட்டங்களில் இடம்பெற்ற இந்தியாவின் தூய்மை (நமாமி) கங்கை திட்டம்
  • இயற்கையை மீட்டெடுக்கும் உலக நாடுகளின் முயற்சியை ஐக்கிய நாடுகள் சபையானது அங்கீகரித்து வருகிறது. அதன்படி உலகம் முழுவதிலுமிருந்து 10 அற்புதமான இயற்கை சீரமைப்பு முயற்சிகளை அங்கீகரித்துள்ளது. 
  • இந்தியாவில் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கங்கை நதியை மீட்டெடுக்கும் தூய்மை(நமாமி) கங்கை திட்டமும் இடம்பெற்றுள்ளது.
  • ஐநாவின் பட்டியலில் இந்தியாவின் தூய்மை(நமாமி) கங்கை திட்டம் 4-வது இடம் பெற்றுள்ளது. பிரேசில், பராகுவே மற்றும் அர்ஜென்டினா ஆகிய 3 நாடுகளின் காடுகளை பாதுகாக்கும் ட்ரை நேஷனல் அட்லாண்டிக் வன ஒப்பந்தம் முதலிடத்தில் உள்ளது.
  • இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி கடல் மறுசீரமைப்பு திட்டமும், மூன்றாவது இடத்தில் ஆப்பிரிக்காவின் அமைதிக்கான பெரிய பசுமை சுவர் மறுசீரமைப்பு திட்டம் ஆகியவையும் முக்கிய இடம்பெற்றுள்ளன.

12705 மொர்முகோவ் ராணுவத்தில் இணைகிறது

  • ஏவுகணைகளைக் குறிவைத்துத் தாக்கி அழிக்கும் வசதிகொண்ட, மொர்முகோவ் என்ற விசாகப்பட்டினம் கிளாஸ் போர்கப்பல்,  மும்பையில் உள்ள கடற்படைத்தளத்தில், 2022 டிசம்பர் 18ம் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
  • இதன்மூலம்  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் 2-வது விசாகப்பட்டினம் கிளாஸ் டெஸட்ராயர் இது என்ற பெருமை அந்தக் கப்பலுக்குக் கிடைத்துள்ளது.   
  • பி15பி ஏவுகைணை அழிப்பானைக் கொண்ட இந்தப் போர்கப்பல், கடற்படையின் போர்கப்பல் உற்பத்தி அமைப்பு மற்றும் மஸாகான் டாக் கப்பல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது, 163 மீட்டர் நீளமும், 17 மீட்டர் அகலமும் கொண்டது. 7400 டன் எடையிலான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைச் சுமந்துசெல்லும் இந்தப் போர்கப்பல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிக வல்லமைகொண்ட போர்கப்பல்களுள் ஒன்றாகும். 
  • குறிப்பாக இந்தியக் கடற்படைத்தளங்களின் மொத்தக் கப்பல்களில் 42 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவையாக  இருப்பது, தற்சாற்பு இந்தியாவிற்கான முனைப்பான முயற்சியின் அடித்தளமாக அமைகின்றன.
  • மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க துறைமுக நகரமான கோவாவின் நினைவாக, இந்த போர்கப்பலுக்கு மொர்முகோவ் எனப் பெயிரிடப்பட்டுள்ளது.
  • போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்ற 60வது ஆண்டுவிழா 2022ம் ஆண்டு டிசம்பர் 19ம் கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு, 2022ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி இந்த கப்பல் முறைப்படி தனது கடற்பயணத்தைத் தொடங்க உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம் மணிப்பூர் என்ஐடியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
  • மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம் (என்எச்ஐடிசிஎல்) இயற்கை பேரிடர் காலங்களில், நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளில் எதிர்கொள்ளும் சவால்களைத் தீர்க்க ஏதுவான தொழில்நுட்பங்களை உருவாக்குவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • 2022-23 நிதியாண்டில் இதுவரை கான்பூர், ஸ்ரீநகர், உத்தராகண்ட் , நாகாலாந்து மற்றும் சிக்கிமில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • முன்னதாக, மும்பை மற்றும் குவஹாத்தி, இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புரிந்துணர்வு செய்து கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 2022- ஆம் ஆண்டு டிசம்பர்  14ம் தேதி மணிப்பூர் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
  • காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சியில் மணிப்பூர் என்ஐடி இயக்குநர் கௌதம் சுட்ராதர் மற்றும்  என்எச்ஐடிசிஎல் மேலாண்மை இயக்குநர்  சஞ்சல் குமார் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் 9 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடும்புகள், பாம்புகளின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு
  • 9.1 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடும்புகள் மற்றும் பாம்புகளின் புதைபடிமங்கள் இமாச்சலப் பிரதேசத்தின் ஹரிதல்யங்கரில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
  • அன்றைய காலகட்டத்தில் அப்பகுதியில் இருந்த பருவநிலையைப் போன்று தான் தற்போதும் உள்ளது என்பது இந்த கண்டுபிடிப்பின் மூலம் அறியப்படுகிறது.
  • உடும்புகள் மற்றும் பாம்புகளின் பல்லுயிராக்கம், வெப்பநிலை மற்றும் பருவநிலைகளை அதிகம் சார்ந்து இருக்கும். இந்தக் காரணத்திற்காக தான் இது போன்ற ஊர்வனங்கள் சுற்றுப்புற வெப்பநிலை உள்ளிட்ட கடந்தகால பருவநிலைகளை துல்லியமாக சுட்டிக் காட்டுகின்றன.
  • சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகம், ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஸ்லோவாக்கியா நாட்டின் காம்னியஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான டேராடூனில் உள்ள வாடியா இமாலய புவியியல் நிறுவனம், இந்தப் பகுதியில் உடும்பு, மலைப்பாம்பு ஆகியவை இருந்ததாக முதன் முறையாக பதிவு செய்துள்ளது.
  • ஆசியாவில் இந்த வகை உடும்பின் புதைபடிமம் மிகவும் அரிது என்ற காரணத்தால் ஹரிதல்யங்கரில் அவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. 
  • அதேபோல மலைப் பாம்பின் புதைபடிமம் இதற்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் குஜராத்தின் கட்ச்சில் மட்டுமே இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel