TAMIL
- பசுமை திட்டங்களுக்கான அனுமதியை இனிமேல் ஒற்றைச் சாளர முறையில் வழங்கும் வகையில், தொழில்துறையில் உள்ள Guidance TN-ல் திட்டங்கள் வகுக்கப்படும்.
- புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிகரிக்கவும் அவற்றை எடுத்துச்செல்லவும் தனியான பசுமை வழித்தடம் உருவாக்கப்படும்.
- காற்றாலைகளை புதுப்பிப்பதற்கான புதிய கொள்கைஎரிசக்தி துறையால் வெளியிடப்படும்.
- அனைத்து திட்டங்களையும், கொள்கைகளையும் காலநிலை மாற்றப் பார்வையில் பார்த்து, ஆய்வுசெய்து செயல்படுத்த இருக்கிறோம்.
- தமிழ்நாடு அரசு 1,000 கோடி ரூபாயில் பசுமை நிதியம் ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதற்கட்டமாக, நூறு கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
- காலநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுழற்சிப் பொருளாதாரம், வளங்குன்றா வளர்ச்சி போன்ற துறைகளில் புதிய நிறுவனங்களைத் துவங்குவோருக்கு தமிழக அரசு சிறப்பு திட்டங்களை அறிவிக்கும்.
- தமிழ்நாடு இந்தியாவிற்கு சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி - தொழில் மேம்பாடு என்பதில் ஒரு பக்கம் அக்கறை செலுத்தினாலும் இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல், இயற்கை ஆகியவற்றிலும் அக்கறை செலுத்தியாக வேண்டும். இயற்கையுடன் இயைந்த வாழ்வும் வேண்டும். இயற்கையை கெடுக்காத வளர்ச்சியும் வேண்டும். இதுதான் எங்கள் அணுகுமுறை.
- இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 2070ம் ஆண்டிற்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடையும்
- Schemes will be formulated in Guidance TN in the Industry to provide clearance for green projects in single window henceforth.
- A separate Green Corridor will be developed to increase and transport electricity generated using renewable energy.
- A new policy to renew wind farms will be released by the Department of Energy.
- We look at, analyze and implement all programs and policies from a climate change perspective.
- The Tamil Nadu government is taking steps to create a green fund of Rs 1,000 crore. In its first phase, one hundred crore rupees has been provided by the Tamil Nadu government.
- The Tamil Nadu government will announce special schemes for startups in the fields of climate change, renewable energy, circular economy and sustainable development.
- I am sure that Tamil Nadu will guide India not only in social justice but also in ecological justice. While one side is concerned about development - industrial development, the other side should also be concerned about environment and nature. Live in harmony with nature. There should also be development that does not destroy nature. This is our approach.
- Tamil Nadu will achieve carbon balance before the year 2070, when India is declared to achieve carbon balance.