ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு
- கடற்படை பயன்பாட்டுக்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து5 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டது.
- இந்த நீர்மூழ்கி கப்பல்கள் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டன. ஏற்கெனவே ஐஎன்எஸ் கல்வாரி, கந்தேரி, கரன்ஜ் மற்றும் வேலா ஆகிய 4 ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் கடற்படைக்கு வழங்கப்பட்டுவிட்டன.
- இந்நிலையில் 5வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ்வகிர் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கப்பல்கடற்படையில் விரைவில் சேர்க்கப்படவுள்ளது.
- இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் சேர்க்கப்படுவது அதன் போர் திறனுக்கு மேலும் ஊக்குவிப்பாக இருக்கும். ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலில் இறக்கப்பட்டது.
- இதன் பரிசோதனைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கின. குறுகிய கால இடைவெளியில் ஆயுத பரி சோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளையும் இந்த நீர்மூழ்கி கப்பல் முடித்தது.
- கடலில் செல்லும் எதிரி நாட்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை இது துல்லியமாக தாக்கும். கடலில் கண்ணி வெடிகளை மிதக்க வைப்பது, கண்காணிப்பு, உட்பல பல பணிகளை இந்த கப்ப லால் மேற்கொள்ள முடியும்.
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 உறுப்பினர் தேர்வு செய்ய தேர்வுக் குழுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை பேரவை தலைவர் அறையில் நடைபெற்றது.
- இதில், பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டார். இந்த தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய குழு பரிந்துரை செய்துள்ளது.
- தமிழ்நாடு அரசுப் பணிகளின் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத் துறையின் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
- இந்தக் குழுவில் நித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர், சட்ட விவாகரங்கள் துறை செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
- இந்த உயர்மட்ட குழுவானது பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான துணைக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.