Type Here to Get Search Results !

TNPSC 19th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் `நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' தொடக்கம் - ரூ.5 லட்சம் சொந்த நிதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

  • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
  • அதற்கு தொடக்கமாக, நானே முதல் நபராக எனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை இந்தத் திட்டத்துக்கு அளிக்கிறேன். நமது குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்காகத்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
  • நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அரசு அதிகாரிகள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திரைப்படத் துறையினர், தொழிலதிபர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
வடகிழக்கு கவுன்சிலின் பொன்விழா - பிரதமர் மோடி பங்கேற்பு
  • மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றம் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் வடகிழக்கு கவுன்சில்.
  • இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, குடிநீர் வளம், சுற்றுலா மேம்பாடு, விவசாயம் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட முக்கியமான அம்சங்களில் என்இசி வாகனம் செலுத்தி, மாநிலங்களின் தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான திட்டங்களை பெற்று வடகிழக்கு மாநிலங்களில் அதை நிறைவேற்றி வருகின்றன. அந்த என்இசி எனப்படும் வடகிழக்கு கவுன்சிலின் இன்று கொண்டாப்பட்டது.
  • மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • விழாவின்போது பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 2,450 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தும், திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதேபோல் அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் பயன்பெறும் வகையில் முக்கிய சாலைத் திட்டங்களை தொடங்கிவைத்தார்.
  • வடகிழக்கு மாநிலங்களில் தொலைதொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு என்.சி மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த மாநிலங்களில் கட்டமைக்கப்படடுள்ள 320 4ஜி செல்போன் கோபுரங்களை பிரதமர் மோடி தொடஙகி வைத்தார். 
  • இன்னும் 800க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஷில்லாங்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஐஐஎம் கல்வி நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • அதோடு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனி வளர்ப்பு, ஒருங்கிணைந்த காளான் வளர்ப்புத் திட்டங்களுக்கான கட்டடங்களையும் மோடி திறந்து வைத்தார். 
  • அதே போல் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளையோர் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டுக்கான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மிசோரம், மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 21 இந்தி நூலகங்களையும் மோடி திறந்து வைத்தார். 
  • வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த விருந்தினர் உபசரிப்பு திட்டம் செயலபடுத்தப்பட்டு வருகிறது. அதற்கான கட்டடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்து, பார்வையிட்டார்.
புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமனம் - தமிழ்நாடு அரசு
  • வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்கான உருவாக்கப்பட்ட "புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
  • புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த காங்கேயம் கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வாரியத்தின் அரசு சாரா உறுப்பினர்களாக மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான்; வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ.மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் புகழ்காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • இவ்வாரியத்தில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.
  • மேலும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திட ஏதுவாக 5 கோடி ரூபாய் வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel