Type Here to Get Search Results !

TNPSC 14th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

தமிழக அமைச்சரவை முதல்முறையாக விரிவாக்கம்

  • தமிழக அமைச்சரவை நேற்று முதல்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஐ.பெரியசாமி, பெரியகருப்பன் உள்ளிட்ட 10 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
  • அமைச்சரவையில் 34-வது அமைச்சராகப் பதவியேற்றுள்ள திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • முதல்வர் ஸ்டாலின் வசமிருந்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, கே.ஆர்.பெரிய கருப்பன் கவனித்து வந்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், மெய்யநாதன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஆகியவை உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
  • அமைச்சரவையில் தங்கம் தென்னரசுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 10-வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் உதயநிதி முதல் வரிசையில் அமருவார்.
  • ஐ.பெரியசாமி கவனித்து வந்த கூட்டுறவுத் துறை கே.ஆர்.பெரியகருப்பனுக்கும், அவர் கவனித்து வந்த ஊரக வளர்ச்சித் துறை ஐ.பெரியசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல, ஐ.பெரியசாமியிடம் கூடுதலாக இருந்த முன்னாள் ராணுவத்தினர் நலன் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுக்கும், புள்ளியல் துறை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
  • வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் இருந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. 
  • கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தியிடம் கூடுதலாக இருந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் வழங்கப்பட்டுள்ளது.
  • அமைச்சர் கே.ராமச்சந்திரன் கவனித்து வந்த வனத் துறை மா.மதிவேந்தனுக்கும், அவர் பொறுப்பு வகித்த சுற்றுலாத் துறை கே.ராமச்சந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சம பாலினத்தவா் திருமணத்துக்கு பாதுகாப்பு - பைடன் ஒப்புதல்
  • சம பாலின மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மாதம் நிறைவேற்றின
  • சம பாலினத்தவா் மற்றும் இனக் கலப்பு திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்க நாடுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றிய மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளாா். அதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது. 
உலகளாவிய இயற்கை மீட்டெடுப்பு கங்கை தூய்மை திட்டத்துக்கு ஐநா அங்கீகாரம் வழங்கியது
  • கனடாவில் மாண்ட்ரியல் மாகாணத்தில் ஐநா.வின் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பின் 15வது உச்சி மாநாடு கடந்த 7ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 
  • இதில் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும் இந்த உச்சி மாநாடு, கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 முறையாக ஒத்திவைக்கப்பட்ட பிறகு தற்போது நடந்து வருகிறது. 
  • இந்த கூட்டத்தில் உலகளாவிய அளவில் இயற்கையை மீட்டெடுக்கும் 10 முயற்சிகளை ஐநா அங்கீகரித்துள்ளது. இதில் இந்தியாவின் கங்கை தூய்மை திட்டமும் ஒன்றாகும். 
  • இமயமலை முதல் வங்கக் கடல் வரையிலான 2,525 கி.மீ. தூரம் ஓடும் புனித கங்கை நதி மற்றும் அதன் கிளை நதிகளை தூய்மைபடுத்தும் இந்த திட்டத்தின் மூலம் அதனை சுற்றி வசிக்கும் 52 கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு பயனடைவார்கள். 
  • பருவநிலை மாறி வரும் இந்த கால கட்டத்தில், அழிந்து வரும் காட்டு விலங்கினங்கள், ஆற்று மீன்கள், ஆமைகள், நீர்நாய்கள் உள்ளிட்ட பல்லுயிர்களை மாசு மற்றும் கழிவுகளில் இருந்து காக்கும் இத்திட்டம் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டமாகும்.
உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் முதன்முதலாக உச்சநீதி மன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமனம் செய்ய பரிந்துரை
  • உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 28 நீதிபதிகள் உள்ள நிலையில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. 
  • இதைத்தொடர்ந்து காலியாக உள்ள பணியிங்கள் நிரம்பும் வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பணி உயர்வு வழங்க பரிந்துரைத்துள்ளது.
  • அதன்படி ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரிக்கும். ஒரு இடம் மட்டுமே காலியாக இருக்கும். அதே வேளையில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ள 28 நீதிபதிகளில் 9 பேர் 2023ல் ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவி ஏற்றபிறகு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் பரிந்துரை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு மழலையர் பள்ளி உபகரணப் பெட்டி திட்டத்திற்கு ரூ.579.20 கோடி ஒதுக்கீடு
  • அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து 2.0 திறன் இயக்கத்தின் கீழ், மழலைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி/பள்ளிக்கு முந்தைய உபகரணப் பெட்டிகள் திட்டத்திற்கு 2021 – 2022 முதல் 2025 -26 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.579.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2022 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, 3 முதல் 6 வயது வரையிலான பிரிவில் 3.03 கோடி குழந்தைகள் அங்கன்வாடி மையங்கள் மூலம் மழலைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 
  • அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கு முந்தைய மழலையர் பள்ளிகளில் கற்பித்தல் மூலம், பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை தயார்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • விளையாட்டு அடிப்படையிலான பயிற்சி, குழந்தைகளுக்கு பிடித்த அணுகுமுறை மேம்பாடு ஆகியவை இத்திட்டத்திற்காக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. 
  • உடற்கல்வி, சுகாதாரம், எந்திர மேம்பாடு, மொழி மேம்பாடு, படைப்பாற்றல் திறன் ஆகியவையும் இதில் அடங்கும். நாடு முழுவதும் இது குறித்து ஆய்வு நடத்தி மாதிரி நடவடிக்கைப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி அவற்றை வலுப்படுத்த வகை செய்கிறது.
  • உயர்தரமான உள்கட்டமைப்பு, விளையாட்டு உபகரணங்கள், நன்கு பயிற்சி பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியவை கற்பித்தல் சூழலை மேம்படுத்தும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel