பெங்களூரில் 'ஜி - 20' பிரதிநிதிகள் பொருளாதாரம் கூட்டம் துவக்கம்
- 'ஜி - 2௦' மாநாட்டின் ஒரு அங்கமாக, நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகளின் மூன்று நாட்களுக்கான கூட்டம், பெங்களூரில் நேற்று துவங்கியது.'ஜி - 2௦' தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
- இதன் உச்சி மாநாடு, 2023 செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் புதுடில்லியில் நடக்க உள்ளது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர்.
- இதற்கு முன்னதாக, நாடு முழுதும் 200 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு அங்கமாக, முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம், பெங்களூரு, தேவனஹள்ளி அடுத்த நந்திமலை சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் துவங்கியது.
- இந்தியா சார்பில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அஜய் செய்ட், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா ஆகியோர் தலைமை வகித்து பேசினர்.
- 'ஜி - 2௦' உறுப்பு நாடுகளில் இருந்தும், இந்தியாவால் அழைக்கப்பட்ட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். சர்வதேச அளவில் சந்திக்கும் பல்வேறு விதமான நிதி பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பணவீக்கம், உணவு, எரிசக்தி பாதுகாப்பு, காலநிலை மாற்றம் ஆகியவற்றின் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ரூ.4,250 கோடி நிதியுதவி - ஜெர்மன் வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
- ஜெர்மன் மேம்பாட்டு வங்கி உதவியுடன் நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி திட்டம், சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்தி இயற்கை வளங்களைப் பாதுகாத்து நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
- 2 கட்டங்களாக திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதி உதவியுடன் (சுமார் ரூ.4,250 கோடி), மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது.
- அதற்காக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்திய அரசு இடையே கடந்த மாதம் 500 மில்லியன் யூரோ (சுமார் ரூ.4,250 கோடி) கடன் ஒப்பந்தம் புது டெல்லியில் கையெழுத்தானது.
- அதனைத் தொடர்ந்து, சென்னையில் கடந்த 2ம் தேதி ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மேலும், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இவ்விரண்டு ஒப்பந்தங்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.
வேந்தர் பதவியில் இருந்து ஆளுனரை நீக்கும் மசோதா - கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
- பல்கலைக்கழகங்களில் நிர்வாகம் மற்றும் நியமனங்கள் தொடர்பாக ஆளுனர் ஆரிப் முகம்மது கானுடன் தொடர்ச்சியான சிக்கல்களை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) தலைமையிலான அரசாங்கம் பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தங்கள்) மசோதாவை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
- உயர் புகழ் பெற்ற கல்வியாளர்களை பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிக்க இந்த மசோதா திட்டமிடுகிறது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டசபை சபாநாயகர் ஆகியோர் அடங்கிய குழுவே அதிபரை தேர்வு செய்யும்.
- கடுமையான முறைகேடு அல்லது பிற போதுமான காரணங்களுக்காக எழுத்துப்பூர்வ உத்தரவின் மூலம் அவரை அல்லது அவளை பதவியில் இருந்து நீக்குவதற்கான ஏற்பாடுடன், ஐந்தாண்டு காலத்திற்கு அதிபரை அமைச்சரவையால் நியமிக்க வேண்டும்.
- 14 பல்கலைக்கழகங்களுக்கும் தனி வேந்தர்களுக்குப் பதிலாக ஒருவரையே வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் திருத்தத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தது.
2022ம் ஆண்டில் முதல்முறையாகப் சில்லறைப் பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது
- தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில், நுகர்வோர் அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கம், தொடர்ந்து 2வது மாதமாகக் குறைந்துள்ளது.
- நவம்பர் மாதத்தில் 6 சதவீதத்துக்கும் கீழாக 5.88 சதவீதமாகக் குறைந்துள்ளது. அக்டோபரில் 6.77 சதவீதமாகக் குறைந்திருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 4.91 சதவீதமாகவே இருந்தது எனத் தெரிவித்திருந்தது.
- ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததையடுத்து, கடந்த மே மாதத்தில் இருந்து வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதுவரை ரெப்போ ரேட் 2.25சதவீதம் என 5 முறை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நவம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 4.67சதவீதமாகக் குறைந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் 7.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது