TAMIL
- மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2022ம் ஆண்டிலும் தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது.
- பிரதமரின் ஏழைகளுக்கான பிரதமரின் உணவு தானியத் திட்டம், ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டைத் திட்டம், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், உணவு அமைச்சகம் செயல்பட்டுள்ளது.
- இது தவிர, உணவு தானிங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு மனிதாபிமான உதவி அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் தானிய திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 90 ஆயிரத்து 997 கோடி ரூபாய் மதிப்பில் 1118 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் திரு நரேந்திர மோடி செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் மூலம் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
- அதற்கேற்ப, உணவு அமைச்சகம் செயல்பட்டு பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டம் உள்ளிட்டவற்றின் கீழ், 17 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.
- இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக நடைமுறை சீர்திருத்திங்களின் ஒரு பகுதியாக, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் குடும்ப அட்டைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
- மாநிலங்களுகிடையேயான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வகை செய்யும் ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை திட்டம் 2019ம் ஆண்டில் 4 மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அது நடைமுறைக்கு வந்துள்ளது.
- 2022-23ம் ஆண்டு கரிப் பருவத்தில் 04.12.2022 வரை 339. 88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 29 லட்சத்து 98 ஆயிரத்து 790 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 70ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.
- இதே காலகட்டத்தில், 187.92 லட்சம் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 37ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் குறைந்த பட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 21ம் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு 1 லட்சத்து 49 ஆயிரத்து 81 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 97சதவீத நிலுவை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 2021-22 கரும்பு பருவத்தின் 110 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகிலேயே முதலாவது பெரிய கரும்பு உற்பத்தி நாடாகவும், இரண்டாவது பெரிய கரும்பு ஏற்றுமதியாளராகவும் இந்தியா உருவெடுத்துள்ளது.
- ஆஃப்கானிஸ்தானுக்கு 40ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையும், திமோர் லெஸ்திக்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் பாசுமதி அல்லாத அரிசியும், மொசாம்பிக் நாட்டுக்கு 500 மெட்ரிக் டன் பாசுமதி அல்லாத அரிசியும் மனிதாபிமான உதவியாக இந்தியா வழங்கியுள்ளது.
- பெட்ரோலில் எத்தனால் கலப்புத் திட்டம் தொடர்பான இலக்கை நோக்கியும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இது, தூய எரிசக்திக்கும், பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கும் எரிச்சக்தி துறையில் இந்தியா சுயசார்பு அடையவும் உதவும்.
- The Department of Food and Public Distribution under the Ministry of Consumer Affairs has continued to implement various schemes of the Central Government in 2022.
- The Ministry of Food has worked to ensure that schemes like the Prime Minister's Food Grain Scheme for the Poor, the One Nation One Family Card Scheme and the Enriched Rice Distribution Scheme reach all concerned beneficiaries.
- Apart from this, food grains have been procured and sent to various countries on humanitarian basis.
- Under the Prime Minister's Foodgrains Scheme for the poor, 1118 lakh metric tonnes of foodgrains worth Rs 3 lakh 90 thousand 997 crores have been allocated.
- On Independence Day last year on August 15, Prime Minister Shri Narendra Modi announced a scheme to improve nutrition through distribution of fortified rice.
- Accordingly, 17 lakh 51 thousand metric tonnes of enriched rice have been distributed under the Prime Minister's Nutrition Program and Integrated Child Development Services Scheme, implemented by the Ministry of Food.
- As part of targeted public distribution system reforms, household cards have been 100 per cent digitized in all states under the National Food Security Act.
- While the One Nation One Family Card scheme was implemented in only 4 states in 2019, it has now been implemented in 36 states and Union Territories.
- During the charcoal season of 2022-23 till 04.12.2022, 339.88 lakh metric tonnes of paddy has been procured and 29 lakh 98 thousand 790 farmers have been provided with minimum support price of more than 70 thousand crore rupees.
- During the same period, 187.92 lakh wheat was procured, and more than 17 lakh farmers were given minimum support price of over Rs 37 thousand crores.
- 1 lakh 49 thousand 81 crore rupees have been disbursed to the sugarcane farmers till November 21 and 97% of the outstanding amount has been fixed.
- 110 lakh metric tonnes of sugarcane were exported for the 2021-22 sugarcane season. India has emerged as the world's first largest sugarcane producer and second largest sugarcane exporter.
- India has provided 40,000 metric tons of wheat to Afghanistan, 2,000 metric tons of non-basmati rice to Timor Leste and 500 metric tons of non-basmati rice to Mozambique.
- India is also progressing rapidly towards the goal of blending ethanol in petrol. This will enable India to achieve clean energy, climate change mitigation and self-reliance in the energy sector.