Type Here to Get Search Results !

TNPSC 2nd DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

21 அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்

  • அந்தமான் நிகோபார் தீவில் மனிதர்கள் வசிக்காத 21 தீவுகள் உள்ளன. இவற்றுக்கு ராணுவத்தில் பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களை வைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
  • வீரதீர செயல் புரிந்து போரில் இறக்கும் ராணுவத்தினருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. அந்தமானின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள மனிதர்கள் வசிக்காத 'ஐஎன்ஏஎன்370' என்ற தீவுக்கு மேஜர் சோம்நாத் சர்மா பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
  • இனிமேல் அந்த தீவு 'சோம்நாத் தீப்' என அழைக்கப்படும். இவர்தான் பரம்வீர் சக்ரா விருதை முதன் முதலில் பெற்றவர்.
  • அதேபோல் 'ஐஎன்ஏஎன்308' என்ற தீவுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற கவுரவ கேப்டன் கரம் சிங் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், பரம் வீர் சக்ரா விருதுபெற்ற வீரர்களின் பெயர்கள் 21 தீவுகளுக்கு வைக்கப்பட்டன.
ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த தமிழகத்துக்கு ரூ.10,790 கோடி - மத்திய அரசு ஒதுக்கியது
  • தமிழகத்தில் 3.25 கோடி வீட்டுமின் இணைப்புகளும், 22.87 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 9.75 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், தமிழகம் முழுவதும்அனைத்து மின் இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது.
  • மத்திய அரசின் சீரமைக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 13 மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ.3.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.10,790 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக ரூ.8,600 கோடி வழங்கப்படும்.
  • ஸ்மார்ட் மீட்டர்களை பெறுவதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்ய வரும் 15-ம் தேதிக்குள் டெண்டர் விடப்படும். வரும் 2025-26-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை, தி.நகரில் 1.09லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மீட்டர்கள் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ப்ரீபெய்டு திட்டமாகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • அதேபோல், இலவச மின் இணைப்புகளான விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின்இணைப்புகளுக்கும் ஸ்மார்ட்மீட்டர் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே டிராபி 2022 - சவுராஷ்டிரா சாம்பியன்
  • மோடி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச மகாராஷ்டிரா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன் குவித்தது. 
  • அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 46.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்து வென்றது. ஷெல்டன் ஜாக்சன் ஆட்ட நாயகன் விருதும், ருதுராஜ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். 
  • நடப்பு விஜய் ஹசாரே தொடரில் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் காலிறுதியில் 220*, அரையிறுதியில் 168, பைனலில் 108 ரன் விளாசினார். 10 இன்னிங்சில் அவர் 8 சதம் விளாசி அசத்தியதுடன், ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் விளாசி உலக சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய பல்லுயிர் ஆணைய தலைவர் பொறுப்பேற்பு
  • சென்னை, தரமணியில் தேசிய பல்லுயிர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஐ.நா.,வின் உயிரியல் பன்முகத் தன்மைக்காக, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இந்த ஆணைய தலைவர் பதவி, மத்திய அரசின் செயலர் பதவிக்கு நிகரானது. 
  • இதன் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி சி.அசலேந்தர் ரெட்டி, பொறுப்பேற்றார். இவர், இந்திய வனத்துறையில், 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். 
  • அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு அரசுகளில், ஏற்கனவே பணியாற்றி உள்ளார்.இவர், 2009 முதல், 2014ம் ஆண்டு வரை, தேசிய பல்லுயிர் ஆணைய செயலராக பணியாற்றியவர்.
ஒடிசாவில் புதிய மின் திட்டங்கள் என்.எல்.சி., நிறுவனம் ஒப்பந்தம்
  • பழுப்பு நிலக்கரி சுரங்கம், நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையங்கள், சூரிய ஒளி, காற்றாலை மின் திட்டங்கள் என, பல்வேறு வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. 
  • இந்நிலையில், என்.எல்.சி., இந்தியா நிறுவனம், ஒடிசா மாநில மின் தொகுப்பு நிறுவனத்துடன் இணைந்து, நிலத்தில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின் திட்டம், நீர் நிலைகளில் மிதக்கும் சூரிய ஒளி மின் திட்டம், புனல் மின் திட்டம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் வாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
  • ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வரும், 'ஒடிசாவில் உற்பத்தி செய்வோம்' என்ற மாநாட்டில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ராக்கேஷ் குமார் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சார்பில், திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குனர் மோகன் ரெட்டியும், ஒடிசா மின் தொகுப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திரிலோச்சன் பாண்டாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • ஏற்கனவே, ஒடிசா மாநிலத்தின் ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களில், ஆண்டிற்கு இரண்டு கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கத்தை என்.எல்.சி., நிறுவனம் செயல்படுத்தி வருவதுடன், மணிக்கு, 24 லட்சம் யூனிட் மின் சக்தி உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தையும் விரைவில் அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவரங்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கரிசல் காட்டு இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 
  • இந்நிலையில். கோவில்பட்டியில், 220 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உயர்சிறப்பு மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம்
  • தமிழகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப்படிப்பில் 50% இடஒதுகீட்டை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வழங்க தமிழக அரசால் ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது. 
  • அந்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2020 முதலாக இந்த வழக்கு தொடர்ச்சியாக விசாரணையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கலாம். 
  • ஒரு மாணவர்களுக்கு ரு.2 கோடி செலவு செய்யப்படுகிறது. இதில் பிற மாநிலங்கள் மாணவர்கள் வரும்போது அவர்களுக்கும் சேர்த்து செலவு செய்யப்படுகிறது. இதனால் தமிழக அரசிற்கு அதிக அளவில் செலவு ஏற்படுகிறது. 
  • மேலும் தமிழகத்தை பொறுத்த வரை அரசுக்காக உழைக்கக்கூடிய மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையாக உள்ளது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே கொடுத்த இடைக்கால உத்தரவின் படி இந்தாண்டும் மாணவர் சேர்க்கை அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 
  • 15 நாட்களில் மாணவர் சேர்க்கையை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 வது நாள் எத்தனை இடங்கள் நிரம்பாமல் உள்ளதோ அதனை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் ருத்ராக்‌ஷ் பட்டீல்
  • எகிப்தின் கைரோ நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இவர் தங்கம் வென்றார்.  18 வயதாகும் இளம் வீரரான ருத்ராக்ஷ் பாட்டீல், இத்தாலியைச் சேர்ந்த டானிலோ சொல்லாசோவை 16-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
  • இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டத்திலேயே ருத்ராக்ஷ் 6-0 என்ற கணக்கில் எதிரணி வீரரை வீழ்த்தி வெற்றிக் கணக்கைத் தொடங்கினார்.
  • மகாராஷ்டிராவைச் சேர்ந்த ருத்ராக்ஷ், 10.9. 10.8, 10.7 ஆகிய புள்ளிகளைப் பெற்று தங்கத்தை தன் வசமாக்கினார். அதன்மூலம், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய என்ற பெருமையையும் பெற்றார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel