இந்தியா உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் கடலோரப் பாதுகாப்பு மாநாடு சென்னையில் தொடங்கியது
- இந்தியா, மாலத்தீவு, இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளின் கடலோரக் காவல் படையினா் பங்கேற்கும் கடலோரப் பாதுகாப்பு குறித்த இந்தியா, மாலத்தீவு, இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளின் கடலோரக் காவல் படையினா் பங்கேற்கும் கடலோரப் பாதுகாப்பு குறித்த 2 நாள் மாநாட்டை பாதுகாப்பு அமைச்சகச் செயலாளா் கிரிதா் அரமனே சென்னையில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
- இந்திய பெருங்கடலில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு பாதுகாப்பு கூட்டமைப்பு 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இதில் தற்போது இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மோரீஷஸ் ஆகிய 4 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. வங்க தேசம் தற்போது பாா்வையாளராக இணைந்துள்ளது.
- 'கடலோர பாதுகாப்புக்கான கூட்டு முயற்சிகள்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறவுள்ளன. வெள்ளிக்கிழமையும் இந்த மாநாடு தொடா்ந்து நடைபெறும்.
தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.560 கோடியில் குடிநீர் திட்டம்
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 136 கிராம ஊராட்சிகளில் உள்ள 363ஊரகக் குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் திட்டம் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் வீதம், மொத்தம் 16.57 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதில், தாமிரபரணி நீராதாரத்தைக் கொண்டு, நீர் எடுப்பு கிணறு மூலம் தண்ணீர் எடுத்து, சேதுராமலிங்கபுரத்தில் நிறுவப்பட உள்ளசுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.
- இந்த திட்டம் மூலம் 3.05 லட்சம்பேர் பயன் பெறுவதுடன், புதிதாக 92,407 குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
- மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செறுக்கனூர், தாடூர், எஸ்.அக்ரஹாரம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் கிராம ஊராட்சிகளுக்கும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, வாங்கனூர், ஜிசிஎஸ் கண்டிகை மற்றும் எஸ்விஜிபுரம் ஆகிய 9 ஊராட்சிகளில் அடங்கிய 115 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- இதற்குத் தேவையான நீரை,கொசஸ்தலையாற்றை நீராதாரமாகக் கொண்டு, 6 உறிஞ்சு கிணறுகள் மூலம் தினமும் 2.76 மில்லியன் தண்ணீர் எடுக்கப்பட்டு, குடியிருப்புகளுக்கு வழங்கப்படும்.
- இதன் மூலம் 42 ஆயிரம் பேர் பயன்பெறுவதுடன், 255 புதிய குடிநீர்க்குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டங்களுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகைரூ.560.30 கோடி. இந்த திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 2022 - ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு
- கடந்த நவம்பர் மாதத்தில் 1,45,867 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இது சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தை விட 11% அதிகம்.
- நவம்பர் மாத வசூலில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரி வருவாய் ரூ.10,433 கோடியாகவும் உள்ளது.
- நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் 8,551 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தை விட தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 10% அதிகரித்துள்ளது.
- புதுச்சேரியில் நவம்பர் மாதத்தில் 209 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தை விட புதுச்சேரி மாநிலத்தில் 22 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் அதிகமாகும்.
- மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.21,611 கோடி ஜிஎஸ்டி வருவாய் ஈட்டி, நவம்பர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
- மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 9ஆவது மாதமாக ரூ.1.4 லட்சத்தை தாண்டி வசூலாகியுள்ளது. வழக்கமான பகிர்ந்தளிப்புக்கு பின்னர் நவம்பர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.59,678 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.61,189 கோடியும் கிடைத்துள்ளது.
- இவை தவிர நவம்பர் மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.17 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
ஜி-20 தலைமையை ஏற்றது இந்தியா
- கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில்,ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பினர்களாக உள்ளன.
- இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. கடந்த ஓராண்டாக இந்தோனேசியா தலைமை வகித்தது. இதைத் தொடர்ந்து ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டத்தை தொடங்கியது ரிசர்வ் வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கியின் கிளை அமைப்பான 'சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி' சார்பில், நாட்டின் பணப் புழக்கத்தை நிர்வகிக்க வசதியாக டிஜிட்டல் கரன்சியை வெளியிட திட்டமிட்டது.
- டிஜிட்டல் நாணயமான 'இ-ரூபாய்' இரண்டு வடிவங்களில் இருக்கும். முதலாவது, டோக்கன் அடிப்படையிலும் இரண்டாவது கணக்கு அடிப்படையிலும் இருக்கும். டோக்கன் அடிப்படையிலான டிஜிட்டல் நாணயம் என்பது வங்கியின் ரூபாய் நோட்டு போன்றது.
- அதாவது, இந்த டோக்கனை வைத்திருப்பவர் அதன் மதிப்புக்கு உரிமையாளராக இருப்பார். கணக்கு அடிப்படையிலான அமைப்பில் டிஜிட்டல் கரன்சி வைத்திருப்பவர், இருப்பு மற்றும் பரிவர்த்தனைகளின் பதிவுகளை வைத்திருக்க வேண்டும்.
- அதன் தொடர்ச்சியாக 'டிஜிட்டல் கரன்சி' முறையை சோதனை அடிப்படையில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎப்சி வங்கி ஆகிய நான்கு வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை வெளியிடுகின்றன. பின்னர் பாங் ஆஃப் பரோடா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்சிஎப்சி மற்றும் கோட்டக் மகிந்திரா வங்கிகள் டிஜிட்டல் கரன்சியை வெளியிட அனுமதிக்கப்படும்.
- முதல் கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களுரு மற்றும் புவனேஸ்வரில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அகமதாபாத், கேங்டாக், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா ஆகிய நகரங்களில் வெளியிடப்படும்.
- இந்திய ரூபாய்க்கு '₹' என்ற குறியீடு உள்ளது போன்று, டிஜிட்டல் கரன்சிக்கு 'e₹' என்ற குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்த விலை விற்பனை சந்தையில் 'e₹-W' என்ற குறியீடுடன் ஹோல்சேல் டிஜிட்டல் ரூபாயும், சில்லறை விற்பனை சந்தையில் பயன்படுத்தும் ரீடைல் டிஜிட்டல் ரூபாய்க்கு 'e₹-R' என்ற குறியீடும் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியீடு
- 2020 -21ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது வளழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். கற்றல் கற்பித்தல், தலைமைத்துவம், ஆசிரியர் திறன் மேம்பாடு ஆகிய பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையின் சென்னை பிராந்தியத்தில் நவீன இலகுரக ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய புதிய படைப்பிரிவு தொடக்கம்
- இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத்தில் ரோந்துப்பணியை வலுப்படுத்துவதற்கான பெரும் ஊக்குவிப்பாக புதிய இலகுரக நவீன ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய 840 என்ற புதிய படைப்பிரிவை கடலோர காவல்படை தலைமை இயக்குனர் வி எஸ் பதானியா தொடங்கிவைத்தார்.
- ஹெலிகாப்டர் உற்பத்தியில் தற்சார்பு நிலையை எட்டும் வகையில் மத்திய அரசின் தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த இலகு ரக ஹெலிகாப்டர் எம்கே3, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
- இந்த புதிய படைப்பிரிவு தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையின் திறன்களை மேம்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் மீன் பொருட்களின் மேம்பாடு” குறித்த தேசிய அளவிலான இணையதள கருத்தரங்கு
- விடுதலை அமிர்தப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 29, 2022 அன்று “பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் மீன் பொருட்களின் மேம்பாடு” குறித்த தேசிய அளவிலான இணையதள கருத்தரங்கிற்கு மீன்வளத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
- மத்திய அரசின் மீன்வளத்துறை செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில்முனைவோர் மீன் வளத்துறை சங்கங்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறை அதிகாரிகள், மாநில வேளாண், கால்நடை மற்றும் மீன்வளத்துறை பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள், மீன்வளத்துறை ஆராய்ச்சி மையங்கள், மீன்வளத்துறை கூட்டுறுவு அதிகாரிகள் அறிவியலாளர்கள், மாணவர்கள், நாடு முழுவதிலும் உள்ள மீன்வளத்துறை தொடர்புடையவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
- இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய உள்நாட்டு மீன்வளத்துறை இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, இந்திய மீன்வளத்துறை, மீன்வளத்துறையின் திட்டங்கள், ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
- விளிம்பு நிலை சமுதாயத்தினருக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில், உள்நாட்டு மீன் நுகர்வை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவராக திரு. சி. நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார்
- திரு. சி. நெடுஞ்செழியன் தமிழ்நாட்டின் முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை-I) ஆக இன்று (1 டிசம்பர் 2022) பொறுப்பேற்றார். திரு. சி. நெடுஞ்செழியன் 1996ஆம் ஆண்டில் IAAS அதிகாரியாக பணியிலமர்ந்தார்.
- முதன்மை கணக்காய்வுத் தலைவர் பொறுப்பில், தமிழகத்தின் 37 துறைகளில், 21 துறைகளை தணிக்கை செய்யும் மாநில CAGன் அமைப்பிற்கு அவப் தலைமை வகிக்கிறார்.
நிதி ஆண்டு 2022-23க்கு மின்சார நிதிக் கழகத்துடன் (பிஎப்சி) ஊரக மின்மயக் கழகம் (ஆர்இசி) புரிந்துணர்வு ஒப்பந்தம்
- மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிதி ஆண்டு 2022-23க்கு பொதுத்துறை நிறுவனங்கள் மதிப்பீட்டு முறையின்படி, 2022 நவம்பர் 29 அன்று மின்சார நிதிக் கழகத்துடன் (பிஎப்சி) ஊரக மின்மயக் கழகம் (ஆர்இசி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இந்த ஒப்பந்தத்தில் ஊரக மின்மயக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு விவேக் குமார் தேவாங்கனும், மின்சார நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு ரவீந்தர் சிங் தில்லானும் கையெழுத்திட்டனர்.
- ஆர்இசி நிறுவனம் என்பது ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனம் ஆகும், இது இந்தியா முழுவதும் மின் துறை நிதி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.
- 1969 இல் நிறுவப்பட்ட ஆர்இசி நிறுவனம், அதன் செயல்பாடுகளின் பகுதியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவு செய்துள்ளது.
- இது மாநில மின்சார வாரியங்கள், மாநில அரசுகள், மத்திய/மாநில மின் பயன்பாடுகள், தனியார் மின் உற்பத்தியாளர்கள், கிராமப்புற மின்சார கூட்டுறவு மற்றும் தனியார் துறை பயன்பாடுகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.