TAMIL
- உலக சேமிப்பு நாள் கடந்த 1924ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கியது. இத்தாலியில் உள்ள மிலன் நகரில் முதல்முறையாக சர்வதேச சிக்கன மாநாடு நடந்துத. அதன்பின்புதான் சேமிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.
- இத்தாலிய பேராசிரியர் பிலிப்போ ரவிஸா என்பவர்தான் உலக சேமிப்பு நாள் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவித்தார்.
- இதற்கான தீர்மானம் மாநாட்டில் கொண்டுவரப்பட்டு உலக மக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணரச் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிகளில் மாணவர்களிடையே சிக்கனம்குறித்த விழிப்புணர்வும் ஊட்ட முடிவு செய்யப்பட்டது.
- எந்த விதமான திட்டமிடமும், தூண்டுகோலும் இல்லாமல் உலக சேமிப்புநாள் பிறக்கவில்லை. வாழ்க்கையின் உயர் தரத்தைப் பெறுவதற்கும் பொருளாதாரத்தைப் பாதுகாத்து, பணத்தைச் சேமிக்கும் எண்ணத்துக்கு முந்தைய நாட்களில் சில எடுத்துக்காட்டுகள் இருந்தன,
- உதாரணமாக ஸ்பெயினில் முதல் தேசிய சிக்கன தினம் 1921 இல் கொண்டாடப்பட்டது.
- ஜெர்மனியில் மக்கள் சேமிப்பு பழக்கத்தை இழந்துவிட்டார்கள் எனக் கூறி சேமிப்பு குறித்த முக்கியத்துவம் ஊட்டப்பட்டது. மனிதர்கள் வாழ்வில் சேமிப்பு என்பது குகைகளில் வாழ்ந்தபோது, உணவுச் சேமிப்பில் இருந்து தொடங்கிவிட்டது
- 2ம் உலகப் போரின்போது சேமிப்பு குறித்த விழிப்புணர்வு உச்சத்தில் இருந்தது. போரில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, சேமிக்கும் பழக்கம் இருந்த மக்களே தங்களை காத்துக்கொள்ள முடிந்தது, எதிர்காலச் சிக்கலில் இருந்து பாதுகாப்பாக இருந்தன.
- 2022ம் ஆண்டு உலக சேமிப்பு நாளின் கருத்தாக்கம் என்பது "சிறந்த எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்கத் தயாராகுங்கள்" என்பதாகும்.
- சிறந்த எதிர்கால வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் கண்டிப்பாக சிக்கன வாழ்க்கையையும், சேமிப்பையும் கடைபிடிக்க வேண்டும்.
- World Savings Day started on October 30, 1924. The first International Economic Conference was held in Milan, Italy. It was only then that the Day of Saving was observed. It was Italian professor Filippo Ravizza who announced that World Savings Day should be celebrated on October 31.
- A resolution to this effect was brought in the conference and a resolution was passed to make people of the world realize the need for frugality and the importance of saving. It was also decided to inculcate frugality awareness among students in schools.
- World Savings Day was not born without any kind of planning and motivation. There were some examples in the earlier days of the idea of saving money and conserving the economy in order to have a higher standard of living.
- For example in Spain the first National Thrift Day was celebrated in 1921. In Germany, the emphasis on savings was fueled by claims that people had lost the habit of saving. Storage in human life began with food storage when they lived in caves
- Savings awareness was at its peak during World War 2. When people were hit hard by war, people who had the habit of saving were able to protect themselves and were safe from future trouble.
- The theme of World Savings Day 2022 is "Get ready to save for a better future". People who want to live a better future should definitely practice frugality and saving