Type Here to Get Search Results !

TNPSC 8th NOVEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் - ஜி20 கருப்பொருளை வெளியிட்டார் பிரதமர் மோடி

  • ஜி-20 அமைப்பு கடந்த 1999-ல் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தோனேசியாவிடம் உள்ளது. வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜி20 தலைமையை இந்தியா ஏற்கிறது. 
  • இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 தலைமைக்கான இலச்சினை ('லோகோ'), கருப்பொருள், இணையதளத்தை காணொலி வாயிலாக வெளியிட்டார். 
  • ஜி20 அமைப்பின் தலைமையை இந்தியா வரும் டிசம்பரில் ஏற்கிறது. இதையொட்டி, 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளையும், தாமரை இலச்சினையையும் ­­பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
  • ஜி-20 இலச்சினைக்காக ஆயிரக்கணக்கானோர் புதுமையான வடிவங்களை அரசுக்கு அனுப்பினர். இதில் இருந்து, தாமரை மலரில் பூமி வீற்றிருக்கும் சின்னம் இறுதி செய்யப்பட்டது. 
  • 'உலகம் ஒரே குடும்பம்' என்ற இந்தியாவின் பாரம்பரியம், நம்பிக்கை, சிந்தனையை தாமரை குறிக்கிறது. போரில் இருந்து உலகம் விடுதலை பெறவேண்டும் என்ற புத்தரின் போதனை, தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையையும் தாமரை சின்னம் பிரதிபலிக்கிறது. அதன் 7 இதழ்கள் 7 கண்டங்களையும், 7 இசையையும் குறிக்கின்றன. இது உலகை ஒன்றிணைப்பதை உணர்த்துகிறது.
தமிழகத்தில் புதிய சரணாலயம் அறிவிப்பு
  • தமிழக அரசு கடந்த ஓராண்டில், கழுவேலி பறவைகள் சரணாலயம், நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், கடவூர் தேவாங்கு சரணாலயம், கடற்பசு பாதுகாப்பகம் போன்றவை அறிவிக்கப்பட்டு உள்ளன. 
  • அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள, 686.405 சதுர கி.மீ., பரப்பிலான காப்புக் காடுகளை, காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமாக, தமிழக அரசு அறிவித்தது.
  • இது, தென்மாநில யானைகள் வாழ்விடங்களில் முக்கியமானதாகவும், காவிரி ஆற்றுப் படுகையில், வன உயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் அமைகிறது. 
  • புதிய சரணாலயம், 35 வகையான பாலுாட்டிகள், 238 வகையான பறவைகள், 103க்கும் மேற்பட்ட மர வகைகளைக் கொண்ட, உயிர் பன்மை மிக்க பகுதியாக காணப்படுகிறது.
  • காவிரி ஆற்றுப் படுகையான இங்கு, டெக்கான் மஹனீர் மீன்கள், ஹம்ப்பேக்டு மஹனீர் மீன்கள், மெல்லிய ஓடுடைய ஆமைகள், மலை அணில்கள், நீர் நாய்கள், முதலைகள், நாற்கொம்பு மான்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் காணப்படுகின்றன.
தமிழ்நாடு நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி (Industry 4.0) 
  • நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி (Industry 4.0) தொடர்பான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும், இந்த மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்கள் வெகுவாக உதவும். 
  • குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த திறன்மிகு மையங்களைப் பயன்படுத்திக் கொண்டு, வெகு விரைவில் முன்னேற்றம் காண இயலும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • சீமென்ஸ் மற்றும் GE ஏவியேஷன் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, இவ்வாறான மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்களை டிட்கோ நிறுவனம் இங்கு அமைத்துள்ளது.
  • இந்தத் திறன்மிகு மையங்களில் நவீன மற்றும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்குத் தேவையான அம்சங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. 
  • முதலமைச்சர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டவை, டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைந்துள்ள இந்தத் திறன்மிகு மையம், நாட்டிலேயே இத்தகு முதல் திறன்மிகு மையம் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் திறன்மிகு மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
  • இந்த திறன்மிகு மையம், "நான் முதல்வன்" திட்டத்தின் குறிக்கோள்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒருங்கிணைந்து செயல்படும். 
  • டிட்கோ மற்றும் GE ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூபாய் 141 கோடி முதலீட்டில், 3D அச்சிடுதல் தொழில்நுட்பத்தில், உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (Additive Manufacturing Centre) TAMCOE திறன்மிகு மையத்தினை உருவாக்கியுள்ளது.
  • பொறுத்தவரையில்,  எப்போதுமே, முன்னணி மாநிலமாகத்தான் இருந்து வருகிறது என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபரில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7% ஆக உயர்வு
  • அக்டோபருக்கு முந்தைய மாதத்தில் வேலையில்லா திண்டாட்ட சதவீதம் வெகுவாகக் குறைந்திருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் மீண்டும் பழைய நிலை திரும்பியுள்ளது.
  • நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.43 சதவீதமாக குறைந்திருந்தது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் மீண்டும் உயர்ந்து விட்டது.
  • செப்டம்பர் மாதத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை 5.84 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் இது 8.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம், 7.21 சதவீதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதற்கு, அறுவடைப் பணிகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. காரீஃப் பருவ பயிர்கள் அனைத்தும், தற்போதைய மழைக்காலத்தின் தொடக்க காலமான செப்டம்பரிலும், அக்டோபர் மாத மத்தியிலும் அறுவடை செய்யப்பட்டு விட்டன. 
  • இதனால், குறைந்திருந்த கிராமப்புற வேலைவாய்ப்புகள், நவம்பர் மாதத்தில் மழைக்கால பயிர்களின் விதைப்பு தொடங்கியவுடன் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது, அக்டோபர் மாதத்தில் 7.91 சதவீதமாக இருந்த கிராமப்புற வேலைவாய்ப்பின்மை தற்போது 6.41 சதவீதமாக குறைந்துள்ளது.
20 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய ரக்பி செவன் சாம்பியன்ஷிப் 2022
  • உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய ரக்பி செவன் சாம்பியன்ஷிப்பில் இந்திய மகளிரணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இறுதி ஆட்டத்தில் இந்தியா 0-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியைத் தழுவியது.
  • ஆடவர் பிரிவில் இந்திய அணி, வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் மலேசியாவிடம் 12-26 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்று 4-ஆம் இடம் பிடித்தது. 
புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகமும் மின்சார அமைச்சகமும் "குடிமக்களை மையமாகக் கொண்ட எரிசக்தி மாற்றம்: மிஷன் லைஃப் மூலம் குடிமக்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் சர்வதேச மாநாட்டை எகிப்தில் நடத்துகின்றன
  • எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக்கில் நடைபெற்றுவரும் சிஓபி-27-ன் இந்திய அரங்கில்  “குடிமக்களை மையமாகக் கொண்ட எரிசக்தி மாற்றம்: குடிமக்களை மிஷன் லைஃப் (சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறைகள்) மூலம் மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டை இந்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (ஐஆர்இடிஏ), இந்திய சூரிய எரிசக்திக் கழம்  (எஸ்இசிஐ),   எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில்  ஆகியவற்றுடன் இணைந்து,மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல  எரிசக்தி அமைச்சகமும் மின்சார அமைச்சகமும் நடத்துகின்றன.
  • புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சக செயலாளர் திரு பூபிந்தர் சிங் பல்லா தலைமையில் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. 
  • லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ள, குடிமக்களை மையமாகக் கொண்ட,  எரிசக்தி அணுகல், மாற்றம், பாதுகாப்பு, நீதி தொடர்பான முயற்சிகள் எனும் சில தொலைநோக்குப் பார்வையை இந்நிகழ்வு காட்டுகிறது அதேசமயம்  மிஷன் லைஃப்-ன்  நடத்தைகள் என்பது சந்தைகளை செயல்படுத்துதல், கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துதல் ஆகியவற்றை  உள்ளடக்கியது. 
  • உலகளாவிய எரிசக்தி மாற்றத்தை எளிதாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் எரிசக்தி திறன் மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இம்மாநாடு விவாதிக்கிறது.
  • இந்த அமர்வில் ஐரீனாவின் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் கௌரி சிங், சர்வதேச சூரியசக்திக் கூட்டணியின்  அலையன்ஸ் தலைமை இயக்குநர் டாக்டர் அஜய் மாத்தூர் மற்றும் இந்திய தொழில்துறையின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel