உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் திருவள்ளூர் மாணவி தங்கம் வென்றார்
- ஜப்பானில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் மனிஷா ராமதாஸ் ஜப்பானின் 'மமிகோ டொயோடா' வை 21-15, 21-15 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.
- இதே தொடரில் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
- ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவில் இறுதி ஆட்டத்தில் சக வீரா் நிதேஷ்குமாரை 21-19, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றாா் பிரமோத் பகத். அவா் பாராலிம்பிக் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஆடவா் இரட்டையா் எஸ்எல்3-எஸ்எல் 4 இறுதியில் இந்தோனேசியாவின் ஹிக்மத்-உக்குன் இணையிடம் 21-14, 18-21, 13-21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்த பகத்-மனோஜ் சா்காா் இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.
- மனாஸி ஜோஷி, நித்யா ஸ்ரீ உள்ளிட்டோா் வெண்கலம் வென்றனா். மொத்தம் 2 தங்கம் உள்பட 16 பதக்கங்களைக் கைப்பற்றியது இந்தியா.
அருணாச்சலில் முதல் மீன்கள் அருங்காட்சியகம்
- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல் பிரதேசத்தில் முதல் ஒருங்கிணைந்த மீன்கள் பூங்கா மற்றும் மீன்கள் அருங்காட்சியகம் அமையவுள்ளது.
- சுபன்சிரிப் மாவட்டத்தில் உள்ள புல்லா கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் டாரின் மீன் பண்ணை, ஒருங்கிணைந்த மீன்கள் பூங்காவாக மேம்படுத்தப்பட உள்ளது.
- மத்திய மீன் வளத்துறை அமைச்சகத்தின் கீழ், பிரதான் மந்திரி மத்திய சம்பட யோஜனா என்ற திட்டத்தின் கீழ் , இதற்காக நடப்பு நிதியாண்டில் முதல் தவணையாக ரூ.43.59 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
- அழிவின் விளிம்பில் இருக்கும் பல அரிய மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில், ஏறத்தாழ அனைத்து வகையான மீன்களும் இடம்பெறுமென கூறப்பட்டுள்ளது.
- மேலும் மீன் வளர்ப்பு மற்றும் அது சார்ந்த வணிகத்தில் ஆர்வம் காட்டும் மக்களுக்கு பயிற்சி மையமாகவும் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் இத்தகைய பிரத்யேக மீன்கள் அருங்காட்சியகம், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
உலகின் நீளமான பயணிகள் ரயில் புதிய சாதனை படைத்த சுவிட்சர்லாந்து
- சுவிட்சர்லாந்தில் நூறு ரயில் பெட்டிகளுடன் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நீளமுள்ள, உலகின் நீளமான பயணிகள் ரயிலை இயக்கி, கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
- ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் முதல் ரயில் சேவை துவங்கப்பட்டு, 175வது ஆண்டு ஆனதை கொண்டாடும் விதமாக இயக்கப்பட்ட இந்த சாதனை ரயில் பயணத்தில் 150 பேர் பயணித்தனர்.
- இந்த ரயிலின் முன்பக்கத்தில் 'ஆல்பைன் குரூஸ்' டிஜிட்டல் முறையில் எழுதப்பட்டிருந்தது. யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள 'அல்புலா-பெர்னினா' என்ற பாதையில், ரயில் தனது முதல் பயணத்தில் 24.9 கி.மீ தூரத்தைக் கடந்தது.
- மேலும், ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரை துரிதமாகக் கடந்துச் சென்றது. இது பிராடாவிலிருந்து பிற்பகல் 2:20 மணிக்கு புறப்பட்டு அல்வானியூவை சரியாக 3:30 மணிக்கு வந்தடைந்தது.
- கிட்டத்தட்ட 45 நிமிடங்களில் இந்த ரயில், 22 சுரங்கப்பாதையும், 48 பாலங்களையும் தனதுப் பாதையில் கடந்துள்ளது. கிட்டத்தட்ட 4,550 இருக்கைகள் மற்றும் 2,990 டன் எடையுள்ள இந்த ரயில், ஒரு மணி நேரத்திற்கு 30- 35 கி.மீ. என்ற வேகத்தில் பயணித்தது.
- முன்னர் சரக்கு ரயில்கள் தான் நீளமான ரயில்கள் என்ற சாதனையைப் படைத்திருந்தது. தற்பொழுது பயணிகள் ரயில், அந்த சாதனையை முறியடித்தது என ரேடியன் ரயில்வே அறிவித்துள்ளது.
COP 27 இல் இந்திய அரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் திறந்து வைத்தார்
- எகிப்தில் உள்ள) ஷர்ம் எல்-ஷேக்கின் சிஓபி மாநாட்டின் 27 வது அமர்வில் (சிஓபி27) மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர், திரு பூபேந்தர் யாதவ், இன்று இந்தியா அரங்கை திறந்து வைத்தார். இந்த மாநாடு (சிஓபி27) நவம்பர் 6 ந்தேதி முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
- பல்வேறு ஆடியோ காட்சிகள், லோகோ, 3டி மாதிரிகள், அமைப்பு, அலங்காரம் மற்றும் பல நிகழ்வுகள் மூலம் லைஃப் செய்தியை அனுப்பும் வகையில் அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்தில் இருந்து சிஓபி தலைமைப் பதவியை எகிப்து ஏற்றுக்கொண்ட விழாவில் திரு பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார்,