நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு விரல் சோதனை பாடத்தை நீக்க நீதிமன்றம் உத்தரவு
- ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது, அப்பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரா என்பதை ஹைமன் எனப்படும் கன்னித்திரை சவ்வை வைத்து தெரிந்து கொள்வதற்காக இரு விரல் பரிசோதனை செய்யும் முறை கடை பிடிக்கப்படுகிறது.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நபர் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, மருத்துவ அறிக்கைக்காக இந்த இரு விரல் பரிசோதனையை செய்து வருகின்றனர். 2018-ம் ஆண்டு ஐ.நா சபை இந்தப் பரிசோதனை முறையை தடை செய்து அறிவித்தது.
- அதற்கு முன்னதாகவே, 2014-ம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டோரை விசாரிப்பதற்கு சில வரையறைகளை வகுத்தது. அதில் 'இருவிரல் பரிசோதனை சட்டவிரோதமானது என்றும், இப்பரிசோதனை மூலம் உண் மையை கண்டறிய முடியாது' என்றும் குறிப்பிட்டது.
- இந்நிலையில்தான் இரு விரல் பரிசோதனை முறை தொடர்பான பாடத்தை மருத்துவக் கல்லூரி பாடத்தில் இருந்து நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி பாடப் புத்தகங்கள், பாடக்குறிப்புகளில் இருந்து இரு விரல் பரிசோதனை குறிப்புகளை நீக்க வேண்டும்.
- இரு விரல் பரிசோதனை முறை இன்றளவும் நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கது. பெண்ணின் உறுப்பு தளர்ச்சியை சோதிக்கும் செயல்முறை பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது.
- இரு விரல் பரிசோதனையை நடத்தும் எந்தவொரு நபரும் குற்றவாளியாக கருதப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.
பிரேசில் அதிபர் தேர்தல் 2022 - லுாயிஸ் இனாசியோ லுாலா டாசில்வா வெற்றி
- தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அதிபர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், தற்போதைய அதிபர் ஜெயிர் போல்சனாரோவை எதிர்த்து, முன்னாள் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா டாசில்வா போட்டியிட்டார்.
- கடும் போட்டி நிலவி வந்த நிலையில், லுாலா, 50.9 சதவீத ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். அதிபர் ஜெயிர் போல்சனாரோவுக்கு, 49.1 சதவீத ஓட்டுகள் கிடைத்ததாக, அந்த நாட்டில் தேர்தலுக்கான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
- இதன் வாயிலாக, 2003 முதல் 2010 வரை இரண்டு முறை அதிபராக இருந்த லுாலா மீண்டும் அதிபராகிறார். வரும் ஜன., 1ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.
உலக ஜூனியர் பேட்மிண்டன் - வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் சங்கர் முத்துசாமி
- ஸ்பெயினில் நடைபெற்ற உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சீன தைபே வீரர் குவோ குவான் லின் (kuo kuan lin) உடன் பலபரிட்சை நடத்தினார் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி.
- விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், முதல் செட்டில் 14-21 என்ற கணக்கில் வெற்றியை தவறவிட்ட இவர், இரண்டாவது செட்டில், 20-22 என்ற கணக்கில், குவோ குவான் லின்னிடம் வெற்றி வாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- வெற்றி வாய்ப்பை இழந்தாலும், கடந்த 14 ஆண்டுகளில் உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் விளையாடும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சங்கர்.
- இதற்கு முன், அபர்ணா போபட் (1996), சாயினா நேவால் (2006 & 2008), சிறில் வர்மா (2015) ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இதுவரை உலக ஜூனியர் பேட்மிண்டன் அரங்கில் இந்தியாவிற்கு ஒரு தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
- இதற்கு முன் 2008யில் சாயினா நேவால் உலக ஜூனியர் பேட்மிண்டன் தொடரில், தங்க பதக்கம் வென்றிர்ந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்சு பேட்மிண்டன் தொடர் - இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி
- கடந்த 25 முதல் 30-ம் தேதி வரையில் நடந்த இந்த தொடரில், மொத்தம் 11 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். பாரீசில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில், உலக இரட்டையர் தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபே-யின் Lu-ching-Yao மற்றும் Yang-po-han ஜோடியை எதிர்கொண்டது.
- ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய வீரர்கள், 21-13 மற்றும் 21-19 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றனர்.
- மொத்தம் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பேட்மிண்டன் பிரிவின் சூப்பர் 750 பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும், சாத்விக் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி பெற்றுள்ளது.
தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்க் பொருட்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை மொத்தம் ரூ. 4,115 கோடி முதலீட்டுக்கு உறுதி அளித்துள்ள 42 பயனாளிகளுக்கு தொலை தகவல் தொடர்புத்துறை விரிவுபடுத்தியுள்ளது
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு பேரூக்கம் அளிக்கும் வகையில் தொலைத் தொடர்பு மற்றும் நெட்வொர்க் பொருட்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் 28 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உட்பட 42 நிறுவனங்களுக்கு மானியம் வழங்க தகவல் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- இவற்றில் வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி வகைமையின் கீழ் கூடுதலாக 1% ஊக்கத்தொகை கோரி 17 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. மேற்குறிப்பிட்ட 42 நிறுவனங்கள் ரூ.4,115 கோடி முதலீட்டுக்கு உறுதி அளித்துள்ளன.
- இவற்றின் மூலம் ஊக்கத்தொகை திட்டக்காலத்தில் ரூ.2.45 லட்சம் கோடி கூடுதல் விற்பனை வாய்ப்பு ஏற்படும் என்றும் 44,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்நாட்டு மதிப்புத் தொடரை வலுப்படுத்துவதற்காக தொலைத் தகவல் தொடர்பு மற்றும் நெட்வொர்க் பொருட்களுக்கு உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் 2022 -23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
- இந்தியாவில் வடிவமைப்பு சார்ந்த உற்பத்திப் பொருட்களுக்கு தற்போதுள்ள ஊக்கத்தொகையைவிட 1% கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. உற்பத்தித் திறனுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தில் 2022 ஏப்ரல் 1 முதல், 5 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும்.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் 2022
- மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.
- அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை “ஊழலற்ற இந்தியா- வளர்ந்த இந்தியா” என்ற கருப்பொருளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.