Type Here to Get Search Results !

TNPSC 19th NOVEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
  • உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்துப் பேசும்போது, "தமிழ் மொழியைக் காக்க வேண்டியது இந்தியர்கள் அனைவரின் கடமை" என்றார்.
  • தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு நடைபெற உள்ளன. மத்திய அரசின் கல்வித் துறை சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் வாரணாசி சென்றனர்.
  • இந்த நிகழ்ச்சியில், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
  • செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இந்தி, உருது, அரபி உள்ளிட்ட 13 மொழிகளில் மொழி பெயர்த்துள்ள திருக்குறள் நூல்களை பிரதமர் வெளியிட்டார். தமிழர்களின் கலாச்சாரம் குறித்த குறும்படத்தையும் பார்த்தார்.
தலாய் லாமாவுக்கு காந்தி - மண்டேலா விருது
  • பெத்திய பெளத்த மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி - மண்டேலா விருதை ஹிமாசல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை வழங்கி கெளரவித்தாா். 
  • திபெத்திய பெளத்த மத குரு தலாய் லாமாவுக்கு காந்தி- மண்டேலா விருதை ஹிமாசல பிரதேச ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகா் சனிக்கிழமை வழங்கி கெளரவித்தாா்.
இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டம் 'பாராசூட்' சோதனை வெற்றி
  • 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், 2025ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. ககன்யான் எனப்படும் இந்த திட்டத்தின் கீழ் உரிய சோதனைகள் நடந்து  வருகின்றன.
  • விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் ராக்கெட்டில் இருந்து மனிதர் உள்ள விண்கலம் விடுவிக்கப்படும். அதிக வேகத்துடன் தரையிறங்கும் இந்த விண்கலத்தை மெதுவாக தரையிறங்குவதற்காக அதில் பாராசூட் பயன்படுத்தப்படும். இதன்படி, விண்கலத்தில் மூன்று பாராசூட்கள் இருக்கும். இதில் இரண்டு பாராசூட்களே போதுமானவை.
  • இருப்பினும் ஏதாவது ஒன்று செயல்படாவிட்டால் மற்றொன்று பயன்படுத்தப்படும். இந்த பாராசூட்கள் வாயிலாக விண்வெளியில் பத்திரமாக தரையிறங்க முடியும்.
  • இந்த பாராசூட்கள் செயல்பாடு குறித்த பரிசோதனை, உத்தர பிரதேசத்தின் பாபினாவில் உள்ள துப்பாக்கி சுடும் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது. 
  • அப்போது, மூன்று பாராசூட்களும் சிறப்பாக செயல்பட்டு, விண்கலம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது ககன்யான் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். 
  • இந்த சோதனை முயற்சியில், இஸ்ரோவுடன், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய விமானப் படை இணைந்து செயல்பட்டன.
புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்
  • இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் உள்ளார். தலைமை தேர்தல் ஆணையருக்கு உதவியாக எப்போதும் 2 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவது உண்டு.
  • தற்போது, அனுப் சந்திர பாண்டே மட்டுமே தேர்தல் ஆணையராக இருக்கிறார். மற்றொரு பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், காலியாக உள்ள இந்த பதவிக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு வெளியிட்டார். 
  • தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், 2025ம் ஆண்டு பிப்ரவரியில் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பிறகு தலைமை தேர்தல் ஆணையராகும் வாய்ப்பு, அருண் கோயலுக்கு உள்ளது.
அருணாசலப் பிரதேசத்தில் டோன்யி போலோ பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் இல்லாத நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.645 கோடி செலவில், பசுமை விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • இந்த விமான நிலையத்துக்கு, 'டோன்யி போலோ' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநில தலைநகர் இடாநகரில் இருந்து 15 கிமீ தொலைவில் இந்த விமான நிைலயம் அமைந்துள்ளது. 
  • இதேபோல், ரூ.8,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 600 மெகா வாட் திறன் கொண்ட நீர்மின் நிலையத்தையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
'பருவநிலை நிதியை உருவாக்க எகிப்து மாநாட்டில் உடன்பாடு'
  • பருவநிலை மாற்ற பேரழிவுகளால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பருவநிலை நிதியை உருவாக்குவதற்கு எகிப்து மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
  • ஐ.நா. பருவநிலை மாற்ற தீா்மானத்தில் (யுஎன்எஃப்சிசிசி) இணைந்துள்ள நாடுகள் பங்கேற்கும் 27-ஆவது மாநாடு எகிப்தின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. 
  • பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முக்கியமாக, பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தடுப்பதற்காக வளா்ச்சியடைந்த நாடுகள், வளா்ந்து வரும் நாடுகளுக்கு வழங்குவதாகக் கூறியிருந்த ஆண்டுக்கு சுமாா் ரூ.8 லட்சம் கோடியைத் திரட்டுவது தொடா்பாக ஆலோசித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
  • இந்த நிலையில், பருவநிலை பேரழிவுகளால் ஏழை நாடுகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு ஈடுசெய்வதற்கான நிதி வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும்.
  • எனவே, ஏழை நாடுகளுக்கு விரைந்து இழப்பீடு கிடைக்க வழி செய்யும் வகையில் பருவநிலை நிதியை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் எகிப்து சாா்பில் சனிக்கிழமை பிற்பகலில் வரைவுத் தீா்மானம் முன்மொழியப்பட்டது. 
  • 'இழப்பு மற்றும் சேதங்கள்' என்ற பெயரில் முன்மொழியப்பட்ட இரண்டாவது வரைவுத் தீா்மானத்தில், 'பருவநிலை நிதிக்கு வளா்ந்த நாடுகள் பெருமளவு பங்களிப்பு செய்யவேண்டும், தனியாா் மற்றும் பொதுத் துறை சாா்ந்த பிற சா்வதேச நிதி நிறுவனங்களும் பங்களிப்பு செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. 
  • ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகள் தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, ஹினா ஹயாட்டா ஆகியோர் மோதினர்.
  • இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மணிகா பத்ரா 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.
  • இதன் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் டேபிள் டென்னிஸ் வீராங்கனை எனும் பெருமையைப் மணிக்கா பத்ரா பெற்றுள்ளார்.
எஃகு மீதான ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற்றுள்ளது
  • 2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு  உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. 
  • ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் & செமி கோக் மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரிச் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
  • 58 சதவீதத்திற்கும் குறைவான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள்  ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது.
  • 58 சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.
  • இரும்புத் தாதுத் துகள்களின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது.
  • எச் எஸ்  7201, 7208, 7209,7210,7213, 7214, 7219, 7222 & 7227 ஆகியவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பன்றி இரும்பு மற்றும் எஃகுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு வரி இல்லை.
  • ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி,  ஃபெரோனிக்கல் ஆகியவற்றுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படும்  .
  • கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும் . இது  2022,  நவம்பர் 19  முதல் நடைமுறைக்கு வரும்.
மத்திய அமைச்சர் தலைமையில் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை குறித்த மாநாடு
  • தேசிய எஸ்.சி-எஸ்.டி மையத்தின் கீழ் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம்  நவம்பர் 18 அன்று புதுதில்லியில் நடத்திய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாட்டிற்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா தலைமை வகித்தார். 
  • குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆணையின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி தெரிந்து கொண்டு, அந்த நிறுவனங்களுடன் கலந்தரையாடும் நோக்கத்தோடு இந்த மாநாடு நடத்தப்பட்டது.
  • குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கையின்படி ஒவ்வொரு மத்திய அரசின் அமைச்சகம், துறைகள் மற்றும் பொது துறை நிறுவனங்கள், தங்களது வருடாந்திர பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைந்தபட்சம் 25%ஐ குறு மற்றும் சிறு நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். 
  • மேலும் 4% கொள்முதல் பட்டியல் இன/ பட்டியல் பழங்குடி தொழில்முனைவோரால் நடத்தப்படும் குறு மற்றும் சிறிய நிறுவனங்களில் இருந்தும், 3%, பெண் தொழில்முனைவோரிடமிருந்தும் வாங்கப்பட வேண்டும்.
  • பட்டியல் இன / பட்டியல் பழங்குடி மற்றும் மகளிர் குறு மற்றும் சிறு நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்யும் இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட பொதுத்துறை நிறுவனங்களை அங்கீகரித்து, பாராட்டுவதிலும் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.
  • இந்தக் கொள்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதை நோக்கி மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டிய அமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா, பட்டியல் இன/ பட்டியல் பழங்குடி/ பெண் தொழில்முனைவோருக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.
மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினி ரத்னா பொதுத்துறை நிறுவனமான நீப்கோ லிமிட்டெட் மூலம் செயல்படுத்தப்பட்ட 600 மெகாவாட் திறன் கொண்ட கமெங் புனல் மின் நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் 600 மெகாவாட் திறன் கொண்ட கமெங் புனல் மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • இது மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மினி ரத்னா பொதுத்துறை நிறுவனமான நீப்கோ லிமிட்டெட் (வடகிழக்கு மின்சார கழகம்) மூலம் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய புனல் மின் திட்டமாகும்.
  • பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், மத்திய மின்சாரத்துறை அமைச்சர் திரு  ஆர்.கே. சிங், பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், கமெங் புனல் மின் திட்டம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தீவிர கவனம் செலுத்தி வந்தார்.  
  • தூய்மையான எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கும், அருணாச்சலப் பிரதேசத்தில் செழிப்பைக் கொண்டுவருவதற்கும் இத்திட்டம் பெரும் பயன் அளிக்கும். வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடிய இத்திட்டத்துக்கு அமைச்சர் அதிக முன்னுரிமை அளித்துள்ளார்.
  • அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் சுமார் 8200 கோடி ரூபாய் செலவில் 80 கிலோமீட்டர்களுக்கு மேல் இந்த திட்டம் நீண்டுள்ளது.
  • இத்திட்டத்தில் 3353 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய 150 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் கொண்ட இரண்டு அணைகள் மற்றும் ஒரு மின் நிலையம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 3353 மில்லியன் யூனிட்களை உருவாக்குவது அருணாச்சலப் பிரதேசத்தை மின் உபரி மாநிலமாக மாற்றும்.
  • உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான உள்கட்டமைப்பு திட்டங்கள் கோவிட்-19 பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மெகா திட்டம் நீப்கோ  மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel