ஒத்துழைப்பின்மை ஈரானுக்கு எதிராக ஐ.நா. குழு தீா்மானம்
- அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தங்களுக்கு ஈரான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கண்டித்து ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
- இது குறித்து 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட அந்த அமைப்பு இயற்றிய தீா்மானத்தில், தங்களது கேள்விகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த பதில்களை ஈரான் தருவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக ஈரானும், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வல்லரசு நாடுகளும் ஒப்புக்கொண்டு கடந்த 2015-இல் ஒப்பந்தம் மேற்கொண்டன. எனினும், அதிலிருந்து அமெரிக்கா பின்னா் விலகியது.
மேற்கு வங்கத்துக்கு புது கவர்னர் நியமனம்
- மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதியாக தேர்வாகி, கடந்த ஆகஸ்டில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, மணிப்பூர் மாநில கவர்னர் இல. கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்கத்தை கவனித்து வந்தார்.
- இந்நிலையில், மேற்கு வங்கத்தின் புதிய கவர்னராக முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சி.வி.ஆனந்த போஸ், 71, நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
- இவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும், முசோரியில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனத்தில் விருது பெற்றவர். எழுத்தாளரான இவர் கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார்.
சிறப்பான செயல்பாடு காரணமாக 16 ஐஐடிக்கு ஒன்றிய அரசு ரூ.32 கோடி மானியம்
- ஒன்றிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்காக தொழிற் துறை மதிப்பு விரிவாக்கத்திற்காக திறனை மேம்படுத்தும் திட்டமானது உலக வங்கி உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் 13 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், 3 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என ரூ.29.01 கோடி தொகை மானியத்துக்கு ஒப்பளித்துள்ளது.
- தற்போது ஒன்றிய அரசு தமிழகத்தில் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களும் சிறப்பாக செயல்படுவதை கருத்தில் கொண்டு மேலும் 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தலா ரூ.2 கோடி வீதம் மொத்தம் ரூ.32 கோடி மானியம் வழங்குவதற்கான ஆணையை பிறப்பித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ச.கருத்தையாபாண்டியன், மு.ஜெயராமன், இரா.சுடலைக்கண்ணன், கே. மேக்ராஜ், மருத்துவர் பெரு.மதியழகன், முன்னாள் பதிவாளர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் எஸ்.பி.சரவணன் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி முதல்வர், முத்தூர், திருப்பூர் மாவட்டம் ஆகியோர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் புதிய இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்
- உலகளவில் இயங்கி வரும் சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் மெட்டா நிறுவனமும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோர் தங்களது பதவியிலிருந்து விலகினர்.
- இந்நிலையில் சந்தியா தேவநாதன் மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த பொறுப்பை கவனிப்பார் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடர் 2022
- துருக்கியில், உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் வித்யா பிள்ளை 44, பெல்ஜியத்தின் வெண்டி ஜான் மோதினர்.
- முதல் செட்டை 19-63 என இழந்த வித்யா, பின் எழுச்சி கண்டு அடுத்த இரு செட்களை 64-19, 65-16 எனக் கைப்பற்றினார். நான்காவது செட்டில் ஏமாற்றிய இவர், 19-56 எனக் கோட்டைவிட்டார். பின், 5வது செட்டை 64-52 என வென்ற வித்யா, அடுத்த இரு செட்களை 34-66, 2-62 என இழந்தார்.
- முடிவில் தமிழகத்தின் வித்யா 3-4 (19-63, 64-19, 65-16, 19-56, 64-52, 34-66, 2-62) என்ற கணக்கில் தோல்வியடைந்து 2வது இடத்தை கைப்பற்றினார்.
- இதன்மூலம் உலக ஸ்னுாக்கரில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த 2வது இந்திய வீராங்கனையானார். இதற்கு முன், 2016ல் இந்தியாவின் அமீ கமணி 2வது இடம் பிடித்திருந்தார்.
- 'மாஸ்டர்' பிரிவு பைனலில் இந்தியாவின் மனன் சந்திரா 3-5 (63-52, 23-82, 42-59, 30-62, 59-18, 40-73, 85-25, 49-58) என, வேல்சின் டேரன் மார்கனிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தின் 5-ஆவது நிர்வாகக்குழு கூட்டம்
- தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தின் (என்ஐஐஎப்) 5-ஆவது நிர்வாகக்குழு கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் (17.11.2022) மாலை புதுதில்லியில் நடைபெற்றது.
- சர்வதேச அளவில் நம்பகமான மற்றும் வர்த்தக ரீதியான தளமாக என்ஐஐஎப் மேம்படுத்தப்பட்டுள்ளது என நிர்வாகக்குழு தெரிவித்தது. மதிப்புமிக்க உலக மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களின் ஆதரவோடு மத்திய அரசும் இந்த நிதியத்தில் முதலீடு செய்கிறது.
- இந்த நிதியத்தின் பணிகளை விரைவுப்படுத்தி முதலீடுகளை ஈர்க்குமாறு என்ஐஐஎப் குழுவினரை நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார்.
- இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் இருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வரும் என்ஐஐஎப் குழுவினருக்கு திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.
- இந்த கூட்டத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் திரு.அஜய் சேத், நிதிச்சேவைகள் துறை செயலாளர் திரு.விவேக் ஜோஷி, பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் திரு.தினேஷ் காரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.