ஜி - 20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
- 'ஜி - 20' எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டம், ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடக்கிறது.
- இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை, வரும், டிச., ௧ம் தேதி இந்தியா ஏற்க உள்ளது. அடுத்தாண்டு கூட்டம், புதுடில்லியில் நடக்க உள்ளது.
- இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து, உலகெங்கும் பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.
- இந்த சூழ்நிலையில், பாலியில் நேற்று நடந்த கூட்டத்தில், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
- ஜி - 2௦ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த நுாற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டு, உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
- அப்போது, 'எந்தப் பிரச்னையையும் அமைதியான வழியில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்' என, உலகத் தலைவர்கள் கூறினர்.
சுகாதார மாநாடு 2022
- சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதார மாநாடு 2022-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- பின்னர் பேசிய அவர், கல்வியும் - மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத் துறை, மகத்தான துறையாகச் இன்றைக்கு செயல்பட்டு வருகிறது.
- இருதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் மாற்று சிசிச்சையில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தை வகித்து கொண்டிருக்கிறது.
இந்திய – அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சியான “யுத் அப்யாஸ் 2022”
- இந்திய – அமெரிக்க 18-வது கூட்டு ராணுவப் பயிற்சியான “யுத் அப்யாஸ் 2022” உத்தராகண்டில் இம்மாதம் தொடங்கவுள்ளது. சிறந்த நடைமுறைகள், உத்திகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளும் நோக்கத்துடன் இருநாடுகளின் ராணுவங்களுக்கிடையே இத்தகைய பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. முந்தைய பயிற்சி 2021 அக்டோபரில் அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்றது.
- அமெரிக்க ராணுவத்தின் 11-வது வான்படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்களும் இந்திய ராணுவத்தின் அசாம் படைப்பிரிவினரும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
- இந்தப் பயிற்சியின் போது, அமைதிக்காப்பு, அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவை தொடர்பான செயல்பாடுகளும் இடம் பெறும். இந்தக் கூட்டுப்பயிற்சியின் போது மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும்.
- இயற்கைச் சீற்றத்தின் போது, நிவாரண நடவடிக்கைகளை விரைவாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படுத்துவதற்கான பயிற்சியை இரு நாடுகளும் பெறவுள்ளன.
2022 செப்டம்பர் மாதத்தில் கனிம உற்பத்தி 4.6 % அதிகரிப்பு
- 2022 செப்டம்பர் மாதத்துக்கான சுரங்கம் மற்றும் குவாரித்துறையில் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை 2011-12=100) 99.5 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதம் அதிகமாகும்.
- இந்திய கனிம துறையின் (ஐபிஎம்) தற்காலிக புள்ளி விவரத்தின்படி, 2022-23 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் அதே கால கட்டத்தை விட 4.2 சதவீதமாகும்.
- செப்டம்பர் 2022-ல் இறக்குமதி செய்யப்பட்ட கனிமங்களின் உற்பத்தி வருமாறு நிலக்கரி 580 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 27 லட்சம் டன், இயற்கை வாயு (பயன்படுத்தப்பட்டது) 2791 மில்லியன் கன மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 24 லட்சம் டன், பாக்சைட் 1667 ஆயிரம் டன்கள், குரோமைட் 116 ஆயிரம் டன்கள், தாமிரம் 10 ஆயிரம் டன்கள், தங்கம் 92 கிலோ, இரும்பு தாது 166 லட்சம் டன்கள், காரியம் 22 ஆயிரம் டன், மாங்கனீஸ் தாது 163 ஆயிரம் டன், துத்தநாகம் 45 ஆயிரம் டன், சுண்ணாம்புக்கல் 305 லட்சம் டன், பாஸ்போரைட் 150 ஆயிரம் டன்கள், மேக்னசைட் 10 ஆயிரம் டன்கள், வைரம் 70 கேரட்.
- இறக்குமதி செய்யப்பட்ட கனிம உற்பத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட, இந்த மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை கண்டுள்ளது.