புதுச்சேரி பல்கலை துணை வேந்தருக்கு வங்கதேச சர்வதேச மாநாட்டில் விருது
- வங்கதேசம் ராஜ்ஷாஹி பல்கலைக்கழகம் கலைப்புலம் சார்பில் 'கலை மற்றும் மானுடவியல் சூழல்களும், சிக்கல்களும்' தலைப்பில் சர்வதேச மாநாடு நடந்தது.
- இதில், புதுச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங்கிற்கு, 'நவாப் பகதுார் சையத் நவாப் அலி சவுத்ரி' விருது வழங்கப்பட்டது.
- சிறந்த நிர்வாகம், கல்வியியல் பணி மற்றும் திறன் பொருட்கள் ஆராய்ச்சி துறையில் சர்வதேச அளவில் பங்களிப்பு செய்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- வங்க தேசம் ராஜ்ஷாஹி பல்கலைக்கழக துணைவேந்தர் கோலம் ஷபீர் சத்தார், ஈரான் இஸ்லாமிய குடியரசு துாதரகம் கலாச்சார ஒருங்கிணைப்பாளர் சையத் ஹசன் சேஹாத் டாக்கா மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், நேபாளம், பாகிஸ்தான், துருக்கி, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- இந்த மாநாடு டாக்காவில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தோடு இணைந்து அதன் தலைவர் அக்பருதீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி 2022
- மகளிர் குழு டென்னிஸ் உலக சாம்பியன் போட்டியான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்தது.
- அதில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 19வது முறையாகவும், சுவிட்சர்லாந்து 3வது முறையாகவும் களம் கண்டன.
- ஒற்றயைர் பிரிவுகளில் பெலிண்டா பென்சிக் 6-2, 6-1 என நேர் செட்களில் ஆஸியின் அய்லா டோம்லஜனோவிச்சை வீழ்த்தினார்.
- அதேபோல் மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் சுவிஸ் வீராங்கனை ஜில் தெய்க்மன் 6-3,4-6, 6-3 என்ற செட்களில் ஆஸியின் ஸ்டோர்ம் சாண்டர்சை சாய்தார். அதனால் சுவிஸ் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
- அதனால் கடைசியாக நடைபெற வேண்டிய சுவிஸ் வீராங்கனைகள் விக்டோரிஜா கொலுபிக், சிமானா வால்டர்ட் மற்றும் ஆஸி வீராங்கனைகள் பிரிஸ்ஸில்லா ஹான், எலன் பெரெஸ்/சாம் ஸ்டோசர் ஆகியோர் மோத இருந்த இரட்டையர் ஆட்டம் கைவிடப்பட்டது.
- கூடவே சுவிட்சர்லாந்து முதல்முறையாக உலக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. சுவிஸ் வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கங்களும், ஆஸி வீராங்கனைகளுக்கு வெள்ளிப் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
நகர்ப்புற உட்கட்டமைப்பு குறித்த உலக வங்கி அறிக்கை
- உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்கள் தேவைகள் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.68,21,640 கோடி தேவைப்படும்.
- ஆண்டுக்கு சராசரியாக ரூ.4.46 லட்சம் கோடி தேவை. ஆனால், தற்போது செலவழிக்கும் தொகை ரூ.1.43 லட்சம் கோடியாக மட்டுமே உள்ளது. 2036 ஆம் ஆண்டில் 60 கோடி மக்கள் இந்தியாவில் நகர்ப்புற நகரங்களில் வசிப்பார்கள்.
- இது, நாட்டின் மக்கள்தொகையை ஒப்படுகையில் 40% ஆகும். இது, நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- குறிப்பாக தூய்மையான அதிக குடிநீர் தேவை, நம்பகமான மின்சாரம், திறமையான மற்றும் பாதுகாப்பான சாலை போக்குவரத்து போன்ற பல்வேறு உள்கட்டமைப்பில் தரமாக மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
- இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான ஐசரி கணேஷ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரியாவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.
- ஐசரி கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரியவுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர்.
- மேலும் ஐசரி கே. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.
இந்தியாவின் பணவீக்கம் விகிதம் அக்டோபரில் 8.39% ஆக சரிவு
- இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் செப்டம்பரில் 10.70 சதவீதத்தில் இருந்த நிலையில் அக்டோபரில் 8.39 சதவீதமாக குறைந்துள்ளது.
- கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட பண வீக்கம் அதிகரித்துள்ளது.
- இந்நிலையில் இந்தியாவின் மொத்தப் பணவீக்கம் செப்டம்பரில் 10.70 சதவீதத்தில் இருந்து, அக்டோபரில் 8.39 சதவீதமாகக் குறைந்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவு காட்டுகிறது.
பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரியாக திரு கவ்ரவ் திவேதி நியமிக்கப்பட்டார்
- பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரியாக தேர்வுக் குழு பரிந்துரையின் படி, திரு கவ்ரவ் திவேதியை குடியரசுத் தலைவர் இன்று நியமித்தார். அவர் ஐந்து ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் நீடிப்பார்.
- சத்தீஸ்கரை சேர்ந்த இவர், 1995 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி பிரிவை சேர்ந்தவர்.