Type Here to Get Search Results !

TNPSC 13th NOVEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

 

T20 உலகக் கோப்பை 2022 - இங்கிலாந்து சாம்பியன்

  • 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்ற நிலையில், நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
  • முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறின.
  • இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று (நவ. 13) நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 
  • பாகிஸ்தான் அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஆதில் ரஷீத் 2 விக்கெட்டுகளையும், சாம் கரன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
  • இதை தொடர்ந்து 149 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. இறுதியில் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி 2022 டி20 உலக கோப்பையை வென்றது. இது அந்த அணி வெல்லும் 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.
அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் மேலும் 100 மருத்துவ கல்லூரிகள்- ஒன்றிய அரசு முடிவு
  • நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன.
  • ஏற்கனவே, 3 கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 93 கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்து விட்டன. மற்ற கல்லூரிகள் கட்டப்பட்டு முடியும் நிலையில் இருக்கின்றன. 
  • இவை விரைவில் செயல்பாட்டு வரும் என தெரிகிறது. இந்நிலையில், 4ம் கட்டமாக 2027ம் ஆண்டுக்குள் மேலும் 100 மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 
  • இதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 100 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் அல்லது நிபுணர் குழுவால் பரிந்துரை செய்யப்படும் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும்.
  • ஒரு மாவட்ட மருத்துவமனை அல்லது மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்ற ரூ.325 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. 
  • இதில் ஒன்றிய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்குகின்றன. இந்த தொகைக்கு ஒன்றிய செலவின நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை - ஐ.நா
  • உலகின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட ஆண்டுக்கு சராசரியாக 1.1. விழுக்காடு மக்கள் தொகை பெருக்கும் பதிவாகி வருகிறது. 
  • கொரோனா பெருந்தொற்கு காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு விழுக்காட்டிற்கு குறைவாக பதிவானது. 
  • இந்நிலையில் வரும் பதினைந்தாம் தேதியுடன் உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள்தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுறது. இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தன்று ஐநா சபை வெளியிட்ட அறிக்கையின்படி நவம்பர் 15ம் தேதியோடு உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
  • அதோடு, உலகின் அதிக மக்கள் தொகை கொண்டு நாடு என்னும் சிறப்பை பெற்றுள்ள சீனாவை இந்தியா 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றும் ஐநா கணித்துள்ளது.
  • அதன்படி வரும் 2030 ஆம் ஆண்டு உலகின் மக்கள்தொகை 850 கோடியை தாண்டிவிடும் என்றும், 2050ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 950 கோடியை தாண்டிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிரித்திருக்கும் என்றும், ஆசியாவின சில நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் மக்கள் தொகை பெருக்கும் எதிர்மறையாக இருக்கும் எனவும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆசிய குத்துச்சண்டையில் வெள்ளி வென்ற ஷிவ தபா
  • ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆடவருக்கான 63 கிலோ எடைப் பிரிவில் ஷிவ தபா களம் கண்டார். இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் ரஸ்லான் உடன் மோதினார். 
  • இதில், சிறப்பாக செயல்பட்ட ஷிவ தபாவுக்கு, எதிர்பாராதவிதமாக வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால், இரண்டாவது சுற்றோடு வெளியேறினார். எனவே, உஸ்பெகிஸ்தான் வீரர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 
  • இதன் மூலம் ஷிவ தபா வெள்ளிப் பதக்கத்தையே வசப்படுத்தினார். இருப்பினும், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆடவர் பிரிவில் 6-வது பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தினார். மேலும், இத்தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா 4 தங்கம், இரண்டு வெள்ளி உட்பட 12 பதக்கங்களை வென்றது.
ஆசிய துப்பாக்கி சுடுதல் - இந்தியாவுக்கு மேலும் 4 தங்கம்
  • ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. இதில் நடைபெற்ற இறுதிச்சுற்றுகளில், 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஆடவா் அணிகள் பிரிவில் அா்ஜுன் பபுதா, கிரன் ஜாதவ், ருத்ராங்ஷ் பாட்டீல் ஆகியோா் கூட்டணி 17-11 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. 
  • அதிலேயே மகளிா் அணிகள் பிரிவில் மெஹுலி கோஷ், இளவேனில் வாலறிவன், மேக்னா சஜனாா் ஆகியோா் அடங்கிய அணி 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது. 
  • 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஜூனியா் ஆடவா் அணிகள் பிரிவில் திவ்யான்ஷ்சிங் பன்வா், ஸ்ரீகாா்த்திக் சபரிராஜ், விதித் ஜெயின் ஆகியோா் அணி 16-10 என தென் கொரியாவை தோற்கடித்து வாகை சூடினா். 
  • ஜூனியா் மகளிா் அணிகள் பிரிவிலும் இந்தியாவின் திலோத்தமா சென், நான்சி, ரமிதா கூட்டணி 16-2 என தென் கொரிய அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. 
  • இத்துடன் இப்போட்டியில் இந்தியா்கள் வென்ற தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்திருக்கிறது. இதில் திலோத்தமா சென், திவ்யான்ஷ்சிங் பன்வா், மெஹுலி கோஷ் ஆகியோா் தலா 2 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கின்றனா்.
சையத் முஷ்டாக் அலி டிராபி - மும்பை அணி முதல் முறையாக சாம்பியன்
  • சையத் முஸ்டக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இமாச்சல பிரதேச அணிகள் நேற்று மோதின.
  • இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இமாச்சலப் பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
  • அதனைத் தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 
  • இதன் மூலம் முதல் முறையாக சையத் முஸ்டக் அலி டி20 கோப்பையை மும்பை அணி கைப்பற்றியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel