Type Here to Get Search Results !

TNPSC 12th NOVEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

ஆசியான் - இந்தியா அறிவியல் நிதியத்துக்கு கூடுதலாக ரூ.40 கோடி: இந்தியா அறிவிப்பு

  • ஆசியான்-இந்தியா இடையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதியத்துக்கு கூடுதல் பங்களிப்பாக 5 மில்லியன் அமெரிக்க டாலா்களை (ரூ.40 கோடி) இந்தியா சனிக்கிழமை அறிவித்தது.
  • ஆசியான் கூட்டமைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஐசிசியின் தலைவராக கிரெக் பார்க்லே
  • ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஐசிசி கூட்டம் நடைபெற்றது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டாக்டர் தவெங்வா முகுலானி விலகியதை அடுத்து, ஐசிசியின் தலைவராக கிரெக் பார்க்லே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.
  • இன்றைய ஐசிசி கூட்டத்தில், 17 உறுப்பினர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் பார்க்லேயின் தலைமையை ஆதரித்தனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் ஜெய் ஷா கலந்து கொண்டார். அவர் கிரெக் பார்க்லேவை ஆதரித்தார்.
  • கிரெக் பார்க்லே நியூசிலாந்து கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். 2020ல் முதல் முறையாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடைகிறது. இந்தப் பின்னணியில் தேர்தல் நடத்தப்பட்டது.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசியின் நிதிக்குழு தலைவராக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்
  • சர்வதேச கிரிக்கெட் அமைப்பான ஐசிசியின் தலைவராக நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அதேசமயம், இந்திய கிரிக்கெட் போர்டின் செயலாளராகப் பதவி வகித்து வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு ஐசிசியின் அதிகாரமிக்க பதவியாக, நிதிச்செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர், ஏற்கனவே, கடந்த 2015 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் போது இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்

  • ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் ரூ.10,500 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்
  • இந்நிகழ்ச்சியில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு. ஒய்.எஸ்.ஆர். ஜெகன் ரெட்டி, ஆந்திரப் பிரதேச  ஆளுநர் திரு பிஸ்வ பூஷன் ஹரிசந்தன், மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேச சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  • விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தை சுமார் 450 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 
  • மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்த நிலையம்  நாளொன்றுக்கு  75,000 பயணிகளுக்கு சேவை செய்யும் மற்றும் நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்.
  • விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்கவும் மேம்படுத்துவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். திட்டத்தின் மொத்தச் செலவு  ரூ. 150 கோடி.  மீன்பிடித் துறைமுகம், மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட பின்,  அதன் கையாளும் திறன் நாளொன்றுக்கு  150 டன்களில் இருந்து சுமார் 300 டன்களாக இரட்டிப்பாகும்.
இந்திய-பிரெஞ்சு கூட்டு விமானப் பயிற்சி கருடா-VII ஜோத்பூர் விமானப்படைத்தளத்தில் நிறைவு
  • ஜோத்பூரில் உள்ள விமானப்படைத்தளத்தில் நடைபெற்று வந்த இந்திய விமானப் படை (ஐஏஎப்) மற்றும் பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படை (எப்ஏஎஸ்எப்) ஆகிவற்றின் 7-வது கூட்டு விமானப் பயிற்சி கருடா-VII இன்று (12 நவம்பர்) நிறைவடைந்தது.
  • பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படையின் ரபேல் போர் விமானம் மற்றும் ஏ-330 பல்திறன் டேங்கர் போக்குவரத்து அம்சங்களுடன் கூடிய விமானம் போன்றவைகள் இந்தக்கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது,  
  • இந்திய விமானப்படை சார்பாக சுகோய்-30,  ரபேல்,  தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் கலந்து கொண்டன.
  • ஜாகுவார் போர் விமானம், இராணுவ மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும்  புதிதாக விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள 'பிரசந்தா' போன்றவைகள் இந்திய விமானப்படையின் பங்களிப்புகள் ஆகும்.
  • கருடா-VII பயிற்சியானது, இருநாட்டு விமானப் படைகளுக்கும் தொழில்முறையிலான தொடர்பை  ஏற்படுத்தவும், செயல்பாட்டுத்திறன் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது. 
  • இந்தப் பயிற்சியின் விளைவாக  இருநாட்டு விமானப்படை வீரர்களும் வான்வெளிப்போர் நடவடிக்கைகளின் நுட்பங்களை ஆராய்ந்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  மேலும் இந்த பயிற்சியானது இரு நாட்டு விமானப்படை வீரர்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்திற்கான சூழ்நிலையையும் ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel