TAMIL
- நடுத்தர வர்க்கத்தினர் குறித்து சமீபத்திய ஆய்வுகளின் முடிவை இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி அமைப்பு (PRICE) வெளியிட்டுள்ளது.
- அதில், இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கிறார். இவர்களின் ஆண்டு வருமானம்5 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாயாக இருக்கிறது.
- இந்த எண்ணிக்கையானது 2047-ம் ஆண்டில் இருமடங்காக இருக்கும். அதாவது, மூன்றில் இருவர் நடுத்தர வர்க்கத்தினராக இருப்பார்கள்.
- இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் நடுத்தர வர்க்க மக்களின் பங்கானது, 2004-05-ல் 14 சதவிகிதமாக இருந்தது. 2021-22-ல் இந்த எண்ணிக்கை 31 சதவிதமாக உயர்ந்துள்ளது.
- படிப்படியாக அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை 2030-ல் 46 சதவிகிதமாகவும், 2047-ல் 63 சதவிகிதமாகவும் உயரும்.
- மற்றொருபுறம் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் `சூப்பர் பணக்காரர்'களின் (Super rich) எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 1994-95-ல் 98,000-ஆக இருந்த எண்ணிக்கை, 2020-21-ல் 18 லட்சமாக உயர்ந்துள்ளது.
- 2021-ம் ஆண்டில் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் 6.4 லட்ச பணக்கார குடும்பங்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
- 1.81 லட்ச பணக்கார குடும்பங்களுடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. 1.41 லட்ச பணக்கார குடும்பங்களுடன் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- 1.37 லட்ச பணக்கார குடும்பங்களைக் கொண்டு `தமிழ்நாடு' நான்காவது இடத்தில் உள்ளது. 1.01 லட்ச பணக்கார குடும்பங்களைக் கொண்டு பஞ்சாப் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
- The People's Research Institute on Consumer Economics (PRICE) in India has released the results of a recent study on the middle class. Of that, one in three people in India belongs to the middle class. Their annual income ranges from 5 lakh rupees to 30 lakh rupees.
- This number will double by 2047. That means two thirds will be middle class. The share of the middle class in India's total population was 14 percent in 2004-05. In 2021-22, this number has increased by 31 percent.
- This number will steadily increase to 46 percent by 2030 and 63 percent by 2047. On the other hand, the number of ``super rich'' who earn more than Rs.2 crore per year in India is also increasing. The number has increased from 98,000 in 1994-95 to 18 lakhs in 2020-21.
- Maharashtra is the state with 6.4 lakh richest households earning more than Rs 2 crore per annum in 2021.
- Delhi is second with 1.81 lakh rich families. Gujarat ranks third with 1.41 lakh rich families.
- Tamil Nadu is at the fourth position with 1.37 lakh rich families. Punjab ranks fifth with 1.01 lakh rich families.