Type Here to Get Search Results !

உலகின் சிறந்த ஏர்லைன்ஸ் விருது 2022 / WORLDS BEST AIRLINES AWARD 2022

 

TAMIL
  • ரிட்டனைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் ஆய்வு நிறுவனம் ஆண்டு தோறும் உலகின் சிறந்த விமான சேவை நிறுவனங்களை தேர்வு செய்து விருது அளித்து கெளரவித்து வருகிறது.
  • ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் வழங்கும் இந்த விருது விமான சேவை துறையின் ஆஸ்கர் பரிசு என புகழப்படும் அளவிற்கு பிரபலமானது. 
  • விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை, புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2021ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் வரை 100 நாடுகளைச் சேர்ந்த 1.4 கோடி விமான பயணிகளிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் சிறந்த விமான சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது. 
  • இந்த ஆண்டுக்கான "ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் விருதுகள் 2022" பட்டியலில் முதலிடத்தில் கத்தார் ஏர்வேஸும், இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸும், மூன்றாவது இடத்தில் எமிரேஸ் ஏர்வேஸும் இடம் பிடித்துள்ளது.
  • உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனமாக முதலிடம் பிடித்துள்ள கத்தார் ஏர்வேஸ், சிறந்த பிசினஸ் கிளாஸ், சிறந்த இருக்கை மற்றும் வணிக வகுப்பு லவுஞ்சில் சிறந்த உணவு உட்பட எட்டு கூடுதல் விருதுகளையும் பெற்றுள்ளது.
  • இது தவிர, இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏர்லைன் ரேட்டிங்ஸ் என்ற இணையதளம், கத்தார் ஏர்வேஸை அதன் கேபின் கண்டுபிடிப்பு, பயணிகள் சேவை மற்றும் கோவிட் தொற்றுநோய் முழுவதும் தொடர்ந்து செயல்படுவதற்கான உறுதியை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்திருந்தது.
  • இந்தியாவின் சிறந்த விமான நிறுவன விருதையும், தெற்காசியாவின் சிறந்த விமான விருதையும் டாடா குழுமத்திற்குச் சொந்தமான விஸ்தாரா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
  • The Rittenhouse-based Skytrax research company annually selects and honors the world's best airlines. Presented by Skytrax, the award is popular enough to be hailed as the Oscars of the airline industry.
  • The award has been announced on the basis of quality of airline service, service, sustainability, new facilities, passenger comfort, crew service, safety, etc.
  • Based on a survey of 1.4 crore air travelers from 100 countries from September 2021 to August 2022, it selected the best airline.
  • Qatar Airways has topped this year's "Skytrax World Airline Awards 2022" list, followed by Singapore Airlines in second place and Emirates Airways in third place.
  • Ranked as the world's best airline, Qatar Airways also won eight additional awards, including Best Business Class, Best Seat and Best Food in the Business Class Lounge.
  • Apart from this, two months ago, website Airline Ratings named Qatar Airways as the Airline of the Year in recognition of its cabin innovation, passenger service and determination to remain operational throughout the Covid pandemic.
  • Notably, Tata Group-owned Vistara bagged the Best Airline Award in India and the Best Airline Award in South Asia.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel