Type Here to Get Search Results !

சராசரி ஆயுட்காலம் குறித்த ஐ.நா ஆய்வறிக்கை / UN REPORT ON AVERAGE LIFE EXPECTANCY

 

TAMIL
  • 2100ம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 82 வயதாக இருக்குமென ஐ.நா.,கணித்துள்ளது. 1950ம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 35.21 ஆக இருந்தது.
  • தற்போது 2022ல் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 70.19 ஆக இருக்கிறது. 150 ஆண்டுகளில் இது தொடரும்பட்சத்தில் இந்தியாவின் ஆயுட்காலம் 57 சதவீதம் அளவுக்கு மேம்படும். இதனை அப்படியே அமெரிக்காவுக்கு பொருத்தி பார்த்தால் 23 சதவீதம் மேம்பட்டு இருக்கும். 
  • 1950களில் அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலம் 68.33 ஆக இருந்தது. தற்போது 79.05 சதவீதமாக இருக்கிறது. 2100ல் சராசரி ஆயுட்காலம் 88.78 ஆக இருக்கும். சீனாவை எடுத்து கொண்டோமெனில், இந்தியாவை போன்றே சீரான முன்னேற்றத்தை காட்டுகிறது.
  • 1950ல் சீனர்களின் ஆயுட்காலம் 43.45 ஆக இருந்தது. 2100ல் ,ஏறக்குறைய 50.5 சதவீத வளர்ச்சி விகிதத்துடன், சராசரி ஆயுட்காலம் 87.82 ஆக இருக்கும். 
  • பல ஆண்டுகளாக மருத்துவ வசதிகள் அதிகரிப்பு, சிறந்த உணவுப்பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை என இவை அனைத்தும், ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். சுத்தமான குடிநீர், நோய் எதிர்ப்பு மருந்துகள், தடுப்பூசிகள், மற்றும் ஏராளமான உணவு வகைகள், சத்தான உணவுகள் மக்களை சென்றடைந்துள்ளது.
  • மக்களும் உடற்பயிற்சி, புத்திசாலித்தமான வாழ்க்கையின் நன்மைகள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பிற்கு, பல்வேறு மருத்துவ, சுகாதார மேம்பாடு காரணமாக அமைந்துள்ளது. 
  • தடுப்பூசிகளை உருவாக்குவது மிக முக்கியமான ஒன்றாகும். நோய்த்தடுப்பு மருந்துகள் உருவாக்கப்படுவதற்கு முன்பே பெரியம்மை மற்றும் போலியோ போன்ற நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.
  • உலகின் பல பகுதிகளில், தடுப்பூசிகள் நோய்களை ஒழித்ததுடன், கணிசமாக இறப்பு விகிதங்களைக் குறைக்கின்றன. தூய்மை மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளதால் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. 
  • மக்கள் தற்போது , முன்பை விட தூய்மையான சூழலில் வாழ்கின்றனர். தற்போது பாக்டீரியா போன்றவற்றின் தாக்கம், மனிதர்களுக்கு குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்துவதால், நோய், மரணம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. குழந்தைகள் இறப்பு விகிதம், குறிப்பிட்ட அளவுக்கு குறைந்துள்ளது.
  • கூடுதலாக, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு காரணிகளும் ஆயுட்காலம் அதிகரிப்பதில் பங்கு வகித்தன. 
  • ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு, புதிதாக பிறக்கும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவதை காரணமாக கூறலாம். பிந்தைய கட்டங்களில், வயது சார்ந்த இறப்பு விகிதம் இதனுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • The UN has predicted that the average life expectancy of Indians will be 82 years in the year 2100. In 1950, the average life expectancy of Indians was 35.21. Currently, the average life expectancy of Indians in 2022 is 70.19. 
  • If this continues in 150 years, India's life expectancy will improve by 57 percent. If we compare this to the United States, it will be 23 percent better. In the 1950s, the average life expectancy of Americans was 68.33. Currently it is 79.05 percent. 
  • The average life expectancy in 2100 will be 88.78. If we take China, it shows consistent progress like India. In 1950 the life expectancy of the Chinese was 43.45. In 2100, with a growth rate of about 50.5 percent, the average life expectancy will be 87.82 years.
  • Over the years, the increase in medical facilities, better diet and healthy lifestyle have all contributed to the increase in life expectancy. Clean drinking water, antibiotics, vaccines, and abundant, nutritious food have reached the masses.
  • People are also more aware of the benefits of exercise and a smart lifestyle. The increase in average life expectancy is due to various medical and health improvements. Developing vaccines is one of the most important. Before vaccines were developed, millions of people died every year from diseases like smallpox and polio.
  • In many parts of the world, vaccines have eradicated disease and significantly reduced death rates. Life expectancy is increasing due to improvement in cleanliness and standard of living of the people.
  • People now live in a cleaner environment than ever before. Currently, exposure to bacteria is less harmful to humans, reducing the risk of illness and death. The infant mortality rate has decreased to a certain extent.
  • In addition, there has been an improvement in health. Both these factors contributed to the increase in life expectancy. The increase in life expectancy can be attributed to the decrease in infant mortality. In later stages, age-specific mortality is closely tied to this.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel