Type Here to Get Search Results !

TNPSC 30th SEPTEMBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பயணிகளுக்கான பிரத்யேக இதழை அறிமுகம் செய்தது தென்னக ரயில்வே

  • தென்னக ரயில்வேயுடன் E-Toll Ads Media and Earth & Air நிறுவனம் இணைந்து முதல் முறையாக ரயில்களுக்கான "Your Platform" என்ற இதழை 2022 செப்டம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • லைஃப்ஸ்டைல், ஃபேஷன் ஆகியவற்றிற்கான இதழ் இது. வழக்கமான இதழ்களையே படித்துவரும் பயணிகளுக்கு பயணத்தின்போது புதிதாக படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கான முயற்சி இது. இனிமேல் பயணிகள் தனித்துவமான விஷயங்களை படிக்க முடியும்.
  • பின்வரும் ரயில்களில், 2022 அக்டோபர் 1 (நாளை) முதல் இந்த இதழ் கிடைக்கும்.
  • இதுவொரு மாதாந்திர ஸ்மார்ட் இதழ். அச்சு மற்றும் டிஜிட்டல் இதழ்களுக்கு இடையேயான இடைவெளிக்கு பாலமாக இந்த இதழ் அமையும். ஒவ்வொரு பக்கத்திலும் கியூஆர் கோட் இருக்கும். அதை ஸ்கேன் செய்து டிஜிட்டலாகவும் படிக்கலாம். 
  • தென்னக ரயில்வே தொடர்பான கட்டுரைகள் இருக்கும். தென்னக ரயில்வேயின் மரபை அனைத்து பயணிகள் மற்றும் டிஜிட்டல் வாசகர்கள் புரிந்துகொள்ள இந்த இதழ் உதவும். 
  • ஒவ்வொரு மாத இதழிலும் ரயில்வேயை பற்றிய விஷயங்கள் அடங்கிய 4 பக்கங்கள் இடம்பெறும். அதில் புதிய அப்டேட்டுகளை தெரிந்துகொள்ளலாம்.
  • 20 ஆண்டுகள் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த வி.பிரவீன் குமார், ஷங்கர் எம்.ஷிவ் மற்றும் கார்த்திக் பி.எஸ் ஆகியோர் இணைந்து இந்த இதழை நிறுவியுள்ளனர். 
  • வழக்கமான அரசியல், தினசரி, சர்ச்சை செய்திகள் இல்லாத புதிய மற்றும் நேர்மறையான கட்டுரைகளை படிப்பதற்காக இந்த இதழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. 
  • In-Train இதழின் நோக்கம், அனுபவம், அறிவு மற்றும் பல விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வை பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதும், Your Platform மூலம் விளம்பரதாரர்கள் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான இடமும் ஆகும். 
  • பயணிகளை இணைக்க மற்றும் விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்வதற்கான புதிய வழியின் தொடக்கம் தான் இது.
"வந்தே பாரத்" எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
  • குஜராத் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, காந்திநகர் - மும்பை வழித்தடத்தில் நவீன வசதிகளுடன் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள "வந்தே பாரத்" எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் தொடங்கி வைத்தார். காந்திநகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து, இந்த சேவையை 
  • தொடங்கிவைத்த மோடி, அங்கிருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு ரயிலில் பயணம் செய்தார். இணையதள சேவைகளுக்கான வை-பை (WI-FI) உள்ளிட்ட பல வசதிகளை கொண்ட "வந்தே பாரத்" ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் கட்டப்பட்டவை. 
ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு
  • ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் முடிவடைந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
  • அப்போது, நாட்டின் பணவீக்கத்தை குறைக்கவும், பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும் ரெப்போ ரேட் விகிதத்தை 0.50 சதவீதம் அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளதாக அறிவித்தார்.
  • இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் வட்டி விகிதத்தை 4வத முறையாக ரிசர்வ வங்கி உயர்த்தியுள்ளது. கடந்த மே மாதம் முதல் தற்போது வரை ரெப்போ விகிதம் 1.4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது. வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடு, வாகன, தனி நபர் கடனுக்கான தவனைத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன், பளு தூக்குதலில் மீரபாய் சானு ஆகியோரும் தங்கம் வென்றனர்
  • 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் அசாமை சேர்ந்த மீராபாய் சானு 191 கிலோ எடையை (ஸ்நாட்ச் 84 கிலோ, கிளீன் & ஜெர்க் 107 கிலோ) தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். 
  • ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் சர்வீசஸ் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த தேவேந்தர் சிங் பந்தய தூரத்தை 01:26:25 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். 
  • மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் குஜராத்தின் இளவேனில் வாலறிவன் 16-10 என்ற கணக்கில் கர்நாடகாவின் திலோத்தமாவை வீழ்த்தி தங்கம் வென்றார். 
  • ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகாராஷ்டிராவின் ருத்ராங்க் ஷ் பி. பாட்டீல் தங்கப் பதக்கமும், பஞ்சாப்பின் அர்ஜூன் பபுதா வெள்ளிப் பதக்கமும், மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பி.எஸ். தோமர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 
  • 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் ஹரியாணாவின் அனிஷ் தங்கம் வென்றார். உத்தராகண்டின் அங்குர் கோயல் வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப்பின் குர்மீத் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
  • ஆடவருக்கான நெட்பால் இறுதிப் போட்டியில் ஹரியாணா 75-73 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. தடகளத்தில் நேற்று 9 சாதனைகள் படைக்கப்பட்டது. 
  • மகளிருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் உத்தரப்பிரதேசத்தின் முனிதா பிரஜாபதி 01:38:20 நிமிடங்கள் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். 
  • ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சர்வீசஸ் அணியை சேர்ந்த பர்வேஜ் கான் பந்தய தூரத்தை 3:40.89 விநாடிகளில் கடந்து தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். 
  • மகளிருக்கான உயரம் தாண்டுதலில் மத்திய பிரதேசத்தின் ஸ்வப்னா பர்மான் 1.83 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2001-ல் பாபி அலாய்சியஸ் 1.82 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. 
  • ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் பர்வின் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் ரஞ்சித் மகேஸ்வரி 16.66 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. 
தைவான் நாட்டின் பெகாட்ரான் நிறுவனம் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • தைவான் நாட்டின் பெகாட்ரான் நிறுவனம் ரூ.1,100 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் அதிகளவில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன் என பெகாட்ரான் தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
  • செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தை நிலைகுலைய வைத்த 'இயன்' புயல்
  • அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக கருதப்படுகிற 'இயன்' புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது. 
  • இதனால் அப்பகுதியில் கனமழை கொட்டியது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel