குஜராத் பாதுகாப்பு கண்காட்சியில் ரூ.1.53 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- குஜராத் மாநிலம், காந்தி நகரில் பாதுகாப்பு துறையின் 12வது கண்காட்சி கடந்த 18ம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளை வரும் நடக்கும் இதில், ஆயுதம் தொடர்புடைய கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- இந்த கண்காட்சியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். இந்நிலையில், இந்த கண்காட்சியின் போது கடந்த 2 நாட்களில் ரூ.1.53 லட்சம் கோடிக்கான 451 புதிய ஆயுத, தளவாட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் 45 நாளில் பதவி விலகினார்
- ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக பதவியேற்க முடியும். இதில் வென்று நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றார்.
- இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கான தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு வரிச் சலுகைகள் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றன.
- ஆனால், இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தை சரிவு போன்றவற்றால், பிரிட்டன் பொருளாதார மந்த நிலைக்கு தள்ளப்பட்டது.
- அதைத் தொடர்ந்து, கவாசி குவார்தெங்க் நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய நிதி அமைச்சராக ஜெர்மி ஹண்ட் நியமிக்கப்பட்டார்.
- இந்நிலையில், இந்திய வம்சாவளியான உள்துறை அமைச்சர், சுயெல்லா பிரேவர்மேன் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து பிரதமர் லிஸ் டிரஸ்சு தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆப்கனுடன் வணிகம் செய்த பண்டை தமிழர்கள் - வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த ஆதாரங்கள்
- உலகிலேயே மிகவும் தொன்மையான நாகரீகங்களில் ஒன்றாகத் தமிழர் நாகரீகம் இருக்கிறது. பழந்தமிழர்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு இப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
- இந்தாண்டு கீழடி, கங்கைகொண்ட சோழபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட 7 இடங்களில் புதிதாக அகழாய்வு பணிகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
- அதன்படி வைப்பாற்றின் கரையோரம் வடக்கே அமைந்த வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இதனிடையே அங்கு கண்டறியப்பட்டுள்ள கார்னீலியன் மணிகள் ஆப்கானிஸ்தானுடனான நமது வர்த்தக தொடர்பு பற்றிய புது தகவல்களைக் கண்டறிய உதவுவதாக உள்ளது. இந்த கார்னீலியன் மணிகள் பொதுவாக ஆப்கானிஸ்தானில் தான் கண்டறியப்படும்.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதற்கான இந்தியாவின் 'மிஷன் லைஃப்' செயல்திட்டம் - பிரதமர் மோடி, ஐ.நா பொதுச் செயலாளர் துவக்கி வைத்தனர்
- குஜராத் மாநிலம் எக்டா நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் ஆகியோர் கூட்டாக துவக்கி வைத்துள்ளனர்.
- அடுத்த மாதம் எகிப்தில் ஐ.நா. தலைமையிலான காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக 'மிஷன் லைஃப்' என்ற இந்தியாவின் செயல் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
- விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட ஒற்றுமைதான் மிகவும் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் மிஷன் லைஃப் செயல்திட்டத்திற்கு பிரான்ஸ், அர்ஜென்டீனா, மொரீஷியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
- 3 நாட்களாக இந்தியா வந்துள்ள ஐநா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ், இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலம்
- உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெண்கலம் வென்றுள்ளனர். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா தங்கப்பதக்கம் வென்றார்.
- அதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை திலோத்தமா வெண்கலப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் விஜய் வீர் மற்றும் திதம் சங்வான் ஆகியோர் வெள்ளி வென்றனர்,
உலக துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்றார் ரமிதா
- ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரமிதா தனிநபர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
- 10 மீட்டர் ஏர் ரைஃபில் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவர் 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் யிங் சென்னை வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
- அதே பிரிவில் மற்றொரு இந்தியரான திலோத்தமா சென் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
- 50 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் மகளிர் பிரிவில் 3 பதக்கங்களையும் வென்று இந்திய மகளிர் அசத்தினர். திவ்யான்ஷி முதலிடமும் (547), வர்ஷா சிங் 2-ஆம் இடமும் (539), தியானா 3-ஆம் இடமும் (523) பிடித்தனர்.
- 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் ரிதம் சங்வான் 573-575 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜியாவ் ஜியாருய்ஸýவானிடம் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றார்.
- 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில் விஜய்வீர் சித்து 574 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார்.
- முன்னதாக, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் மகளிர் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ஈஷா சிங், சிகா நர்வால், வர்ஷா சிங் ஆகியோர் கூட்டணி 16-6 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவை வென்றது.
- ஏர் ரைஃபிள் ஜூனியர் மகளிர் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ரமிதா, நான்சி, திலோத்தமா சென் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 16-2 என்ற கணக்கில் சீனாவை தோற்கடித்து தங்கத்தை கைப்பற்றியது.
- ஏர் ரைஃபிள் ஜூனியர் ஆடவர் அணிகள் பிரிவிலும் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்ரீகார்த்திக் சபரிராஜ் ரவிசங்கர், விதித் ஜெயின் அடங்கிய அணி இறுதிச்சுற்றில் 17-11 என சீனாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
- நாளில் இறுதியாக, 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணிகளில் இந்தியாவின் பாயல் கத்ரி, ஆதர்ஷ் சிங் ஜோடி 17-9 என்ற புள்ளிகள் கணக்கில் சீன இணையை வென்று பதக்கத்தை தட்டிச் சென்றது.
- இதே பிரிவில் மற்றொரு இந்திய ஜோடியான சமீர், தேஜஸ்வினி 16-2 என்ற கணக்கில் சீன கூட்டணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
- இதில் சமீருக்கு இப்போட்டியில் இது 2-ஆவது வெண்கலப் பதக்கமாகும். பதக்கப் பட்டியல்: தற்போதைய நிலையில் இந்தியா, 10 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. சீனா 18 தங்கம் உள்பட 37 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்
- ஸ்பெயினில் நடைபெறும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சஜன் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றாா். இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்திருக்கிறாா்.
- 72 கிலோ பிரிவில் இந்திய வீரர் விகாஸ், பங்கேற்றார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜப்பானின் தயகோவை சந்தித்தார்.
- இதில் சிறப்பாக செயல்பட்ட விகாஸ், 6-0 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.
- நிதேஷ் அபாரம் 97 கிலோ பிரிவில் இந்தியாவின் நிதேஷ் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் கைப்பற்றினார். இதுவரை இந்திய அணி 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
குஜராத்தின் தபி, வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
- குஜராத்தின் தபி, வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
- இணைப்பு இல்லாத பகுதிகளின் கட்டமைப்புடன் சபுத்தாராவிலிருந்து ஒற்றுமை சிலை வரையிலான சாலையை மேம்படுத்துதல், தபி, நர்மதா மாவட்டங்களில், ரூ.300 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியவை இந்தத் திட்டங்கள்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் – ஹட்கோ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
- 2022-23-ஆம் நிதியாண்டிற்கு முக்கிய இலக்குகள் நிர்ணயிக்க மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹட்கோ கையெழுத்திட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, ஹட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு கம்ரான் ரிஸ்வி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக கூடுதல் செயலாளர் திரு சுரேந்திர குமார் பாக்டே, ஹட்கோ இயக்குநர் (கார்ப்பரேட் திட்டமிடல்) திரு எம் நாகராஜ், இயக்குநர் (நிதி) திரு டி குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.